'செந்தமிழ்ச்செம்மல் சி.இலக்குவனார்' நூல் வெளியீட்டுப் படம்
YMCA pattimandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
YMCA pattimandram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 29 ஆகஸ்ட், 2018
திங்கள், 9 டிசம்பர், 2013
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவு – 125
செவ்வாய்
திசம்பர் 10, கி.பி.2013
மாலை 6.00 மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், சென்னை
தலைப்பு : இளவரச அமிழ்தன் கவிதைகள்
தலைமை : முனைவர் இ.சுந்தரமூர்த்தி
ஏற்புரை : முனைவர் இளவரச அமிழ்தன்
வாழும் கவிஞர் பாநலன் போற்றிட வாரீர்!
ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
சென்னை 600 001
வியாழன், 5 செப்டம்பர், 2013
புதன், 4 செப்டம்பர், 2013
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளே, ஆசிரியர் நாள்!

பேராசிரியர்
சி.இலக்குவனார் நினைவு நாளே,
ஆசிரியர் நாள்!
செயலர் கெ.பக்தவத்சலம் அறிவிப்பு
நேற்று (செப்.3.2013) சென்னை
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின்
நினைவரங்கமும் “செந்தமிழ்ச்செம்மல் சி.இலக்குவனார்” நூலின் அறிமுகமும் நடைபெற்றது.
வரவேற்புரையில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், பேராசிரியரின் தமிழ்நலப்பணிகளை நினைவுகூர்ந்து எழுச்சியுரை
ஆற்றினார்.
முனைவர் ப.இரா.அரங்கசாமி, 'மொழிப்போர் தந்தை' என்ற முறையிலான
பேராசிரியர் செயல்பாடு குறித்து வீர உரை
ஆற்றினார்.
கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் நலக்குறைவால் வர இயலவில்லை.
புலவர் உதயை மு.வீரையன்
நினைவுரையும் நூல் அறிமுக உரையும் ஆற்றினார்.
இறுதியில் நன்றியுரை ஆற்றிய ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றச் செயலர் பொறி.கெ.பக்தவத்சலம், கடந்த 30 ஆண்டுகளாகப் பேராசிரியரின்
நினைவு நாளைக் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், “செப்டம்பர் 5 என்பதை ஆசிரியர்
நாளாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால்,
கல்லூரிகளில் மட்டும் இல்லாமல் களத்திலும் பேராசிரியராகச்
செயல்பட்ட தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் நினைவுநாளே
எங்களுக்கு ஆசிரியர் நாள். எனவேதான், தொடர்ந்து அவர் நினைவுநாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
தமிழ் மக்களும் பேராசிரியர் நினைவுநாளான செப். 3 ஆம் நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியருடன்
தொடர்புடையதாக ஆசிரியர் நாள் அமைய வேண்டும். அந்த வகையில் தமிழ்ப்போராளி
பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாளான செப்.3 ஆம் நாள் ஆசிரியர் நாள் என்பதற்கு வந்திருந்தோரும் வரவேற்பு தெரிவித்தனர்.
நாமும் நடைமுறைப்படுத்தலாமே!
சனி, 31 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 8 மார்ச், 2013
செவ்வாய், 29 ஜனவரி, 2013
வெள்ளி, 4 ஜனவரி, 2013
புதன், 29 ஆகஸ்ட், 2012
திங்கள், 6 ஆகஸ்ட், 2012
திங்கள், 18 ஜூன், 2012
YMCA pattimandram - va.mu.se.kaviyarsan
தொலைபேசி:2539 6792
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
கிளை
24/223,என்.எஸ்.சி.போசு
சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்),சென்னை-600001
சிறப்புக் கருத்தரங்கம்
கல்வெட்டும் கணிணியும்
நாள்: 5.6.2043 ***19-6-2012 செவ்வாய்க்கிழமை
மாலை 6-00மணி
இடம்:
எசுபிளனேடு
ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்
தலைமை:
முனைவர்(திருமதி).த.சானகி
(மேனாள் துணைவேந்தர்,அன்னை தெரசா
மகளிர்
பல்கலைக்கழகம்,கொடைக்கானல்.)
ஆய்வுரை:
கணிணிவல்லுநர்
வா.மு.சே.கவியரசன்
( தலைவர்,சேது கணினிமையம்,கொலம்பசு,ஒகையோ,அமெரிக்கா)
புதிய முயற்சிகளைப் போற்றிட வாரீர்
முனைவர்
ஔவை நடராசன் புலவர்
பு.சீ.கிருட்டிணமூர்த்தி பொறியாளர்
கெ.பக்தவத்சலம்
தலைவர் இணைச்செயலாளர் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.
பட்டிமன்றம்
பி.ரவிக்குமார்
டேவிட் ஆர்.ரிச்சர்டு எசக்கியேல்
தலைவர்
செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு
பி.ஜே.வின்செண்ட் டேனியல் அழகேசன் ````தலைவர் பொதுச்செயலாளர் சென்னை
ஒய்.எம்.சி.ஏ.
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
பேராசிரியர் மறைமலை வழங்கும பொன்னவைக்கோ கவிதைகள் பொழிவுரை - இன்று
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
வழங்கும் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவில்
120 ஆவது பொழிவாக
இன்று (சித்திரை 12, தி.பி.2043 / ஏப்பிரல் 24.கி.பி.2012 :
மாலை 6.00 மணி - இரவு 8.00மணி)
பொன்னவைக்கோ கவிதைகள்
குறித்து ஆய்வுரை வழங்குகிறார்.
முனைவர் ச.சு.இராமர் இளங்கோ
தலைமையில்
நடைபெறும் இன்றைய விழாவில்
பங்கேற்று
வாழும் கவிஞர் பாநலன்
போற்றிடுவோம்!
இடம் வழக்கம்போல் ஒய்.எம்.சி்.ஏ. எசுபிளனேடு அரங்கம்,
உயர்நீதிமன்றம் எதிர்ப்பக்கம், பாரிமுனை சென்னை
பாச்சுவை பருக மகிழ்வுடன் வருக!
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.
புதன், 18 ஏப்ரல், 2012
INIYAVAN 70 :இனியவன் எழுபது
‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பின் மூலம் பல இலக்கியவாதிகளை உருவாக்கியும் பல படைப்புகளை வெளியிட்டிருக்கும் இலக்கிய வீதி இனியவனுக்கு எழுபது வயது நிறைவடைவதற்கும் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இனியவனுக்கு வழங்கப்பட்ட ‘செம்மொழிச் செம்மல்’ எனும் விருது பெற்றமைக்கும் அவருக்கு பாராட்டரங்கம் நடத்தப்பெற்றது. சென்னை ஒய்.எம்.சி.எ (YMCA) கட்டிடத்தில் 17.04.2012 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்களும் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இனிமையான சொற்களால் அனைவரையும் வரவேற்றார்,தொடர்ந்து தென்காசிக் கவிஞரான ராஜா மரக்காயர் அவர்கள் கவிதையின் மூலம் இனியவனுக்கு வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார் ,

அவரைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளை வழங்கினார்.

கார் நாற்பது, களவழி நாற்பது, ஏர் எழுபது என இலக்கிய நூலகளுக்கு வழங்கும் தலைப்பைப் போன்று இனியவன் விழாவுக்கு தலைப்பு பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக்காடினார். மேலும் இனியவனுடைய பண்பு நலன்களைப் பற்றி கூறும்போது சங்க இலக்கியப் பாடலகளில் வரும் தலைவனின் குணத்தோடு ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த நட்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

அடுத்து, ‘பாராட்டுபவர் எக்காலத்திலும் பாராட்டப்பெறுவார்’ எனும் பாராட்டுரையோடு தொடங்கிய முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இனியவனுடைய இலக்கியத் திறனை பாராட்டிப் பேசினார். தாராபரதி, மலர்மகன், பல்லவன், ஐசுவர்யன், சொற்கேளான் போன்றோரை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய ‘இனியவனுடைய வீடு இலக்கியத் தொட்டி’ என்பதை விவரித்துப் பேசினார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பனும் இலக்கியவாதிகள் பலரை உருவாகியதாயுள்ளம் கொண்ட இனியவனை
பெருமிதத்தோடு பாராட்டினார். மலர்மகனின் கவித்துவமான வாழ்த்துமடல் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது,மேலும் இந்த பாராட்டரங்கத்திற்கு பேராசிரியர் அவ்வை நடராசன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பெருமக்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பக்த்வச்சலத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து அரங்க விழா நாயகன் இனியவனுடைய ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
http://www.natpu.in/?p=23700

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
Ilakkiya Veeddhi Iniyavan Ezhupadhu - paaraattarnakam
அன்புடையீர் வணக்கம்..
நல - வளம் சூழ வேண்டுகிறேன்..
'இலக்கியவீதி இனியவன் - 70 ' தொடக்க நிகழ்வை, அணுக்கமான உறவு நட்புடன் கொண்டாட
ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்ற அன்பர்கள் முடிவு செய்துள்ளனர்.. அவ்விழா ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கில் (உயர்நீதி மன்றம் எதிரில் ) நிகழ இருக்கிறது..
நாள்.. 17 -4 -2012 .. செவ்வாய் ..
நேரம் .. மாலை 6 - மணி..
பிற,பின்னர்..
என்றென்றும் அன்புடன்..
வாசுகி..
சனி, 24 செப்டம்பர், 2011
குலதெய்வ வழிபாடு – தமிழ் மண்ணின் மரபுகள்
குலதெய்வ வழிபாடு – தமிழ் மண்ணின் மரபுகள்
சிறப்புக்கருத்தரங்கம்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
24/223,என்.எசு.சி.போசு சாலை
(உயர்நீதிமன்றம் எதிரில்)
சென்னை-600001
நாள்: 27-9-2011
திருவள்ளுவர் ஆண்டு 2042 புரட்டாசி பத்தாம் நாள்
செவ்வாய் மாலை 6-00மணி
இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)