திங்கள், 23 மே, 2011

corrupted persons will be punished - sonia: ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா

ஒருவன், தான் குடிக்க மாட்டேன், கொள்ளை அடிக்க மாட்டேன், கொலை செய்ய மாட்டேன், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரே ஒரு  கெட்ட பழக்கம்  மட்டும்தான் உண்டு என்றானாம்.  இவவ்ளவு நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது ஒரே ஒரு கெட்ட பழக்கம்தானே இருக்கிறது. என்று நினைத்தால் அந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்பது பொய பேசுவதுதான். அதைப்போல் சோனியா பேச்சு நன்றாகத்தான் உள்ளது.  ஆனால், பொய்மையே தொழில் என்றான பின்பு சொல்லுக்கும் செயலுக்குமான வேறுபாட்டை உடையவர்கள் குறித்து மக்கள் புரிந்து  கொண்டுள்ளார்கள் என்பதை அவர் புரிந்து  கொள்ள வில்லையே!  ஒருவேளை கலைஞரை மிரட்டுவதற்காக  உத்தம வேடம் போடுகிறாரா? காங்கிரசு என்றாலே ஊழல்! ஊழல் என்றாலே காங்கிரசு! அனைவரும் அறிந்த உண்மை என்பதை அவர் அறியட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா
First Published : 22 May 2011 09:25:57 PM IST

புதுதில்லி, மே 22: ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா. இன்று மாலை, ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில், ''ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேரும்போது, சோனியா இதைத் தெரிவித்தார்.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர்.மேலும், * நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்...* பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின..* மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐமுகூ அரசு முன்னுரிமை அளிக்கிறது- என்று ஐமுகூட்டணித் தலைவர் சோனியா பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், * ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது...* உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது...* பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம்- என்று கருத்து தெரிவித்தார்.
கருத்துகள்

போபர்ஸ் பற்றிய செய்திகளில் ஊழல் இல்லையா?
By நாடோடி
5/22/2011 10:51:00 PM
We appreciate your statement that corrupt people will be punished. Let me ask one open question to central Goverment. The question is when Karunanithi camped in New Delhi and fought tooth and nail to get specific rich portfolios like rich Telecommunication and Shipping, his intention was obvious ie to corrupt: Not because he had great scholars or experts in these two portfolios to serve the country. His intention was to serve the country why he would not accept other portfolios? Since he is having 18 MPs, he threatened and got those portfolios. Why, knowing very well his intention, you people assigned these two to them? By giving these two portfolios to DMK, knowingly or unknowingly you were part of this scam? That is why Tamil Nadu people punished your party also. In future, if any of the coalition partners demand specific portfolios, give them and ask your intelligence people to tap their teleconversation and reserve one room in Tihal jail. Only then people will say that you are gen
By rajcey
5/22/2011 10:43:00 PM
டேய் காமெடியன்களா, தமிழ் நாட்டுல இப்பதான் ஒரு காமெடியன் காணாம போயிட்டான், கொஞ்சம் டெல்லியிலர்ந்து இங்க வாங்களேன். நிறைய படத்துக்கு காமெடிக்கு ஆள் கிடைக்கலியாம். அசப்புல, சோனியாவ பார்த்தா கோவை சரளா மாதிரியே இருக்குதுபா... யோவ், மண்ணு மோகன்னு, காமெடி ரோல்னதும் டர் ஆயிட்டியா ? நீ ஆக்டிங் குடுக்காம, சும்மா கேன மாதிரி சிரிச்சிகினே இருந்தா போதும், டக்கரா வந்துருவ, வடிவேலுவ கூட கெலிச்சிருவ... தெர்தா ?
By பாமரன்
5/22/2011 10:11:00 PM
சோனியா காந்தி அவர்களின் பேச்சு, எங்கேயோ இடிக்கிறதே.
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 9:57:00 PM
eppadiyo timuka vai undu ellai endru seithuvivarkal, kalaijar eni thiruvodu edoka vediyathu than baki
By S Venkataswamy
5/22/2011 9:48:00 PM
அய்யா .. கலைஞரே .. அவங்க பேச்சே சரியில்லையே .. டெல்லிக்கு போயி பிரயோஜனம் இருக்க போவது மாதிரி தெரியலையே.. எதுக்கும் ஒருதடவை யோசிங்க..போவனும்மான்னு ..
By rishi
5/22/2011 9:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவர்:
மன்மோகன் சிங், சோனியா காந்தி உறுதி
First Published : 23 May 2011 02:40:33 AM IST

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கள் ஆட்சி தொடர்பான அறிக்கையை வெளியிடும் பிரதமர
புது தில்லி, மே 22: ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தெரிவித்தனர்.  ÷ஊழலை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.  ÷மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ÷இதில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய இருவரின் பேச்சும் ஊழல் ஒழிப்பை மையமாக வைத்தே இருந்தது. மத்திய அரசு மீது சமீப காலமாக அடுக்கடுக்காக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களது பேச்சு அமைந்திருந்தது.  ÷"ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். எதிர்காலத்தில் எவரும் எவ்வித குற்றச்சாட்டும் கூற முடியாத அளவுக்கு அரசு சிறப்பாக செயல்படும்' என்றார் சோனியா காந்தி. "மத்திய அரசு தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள். முன்பு எழுந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அரசு மீது இனி எழாது. அரசு நிர்வாகம் சிறப்பானதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் இருக்கும்' என்று மன்மோகன் சிங் பேசினார்.  ÷இப்போதைய பொருளாதார சூழ்நிலை, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ரயில்வே, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக