துடிப்பான நடவடிக்கைக்குப் பாராட்டுகள். ஆனால், அரசியல் நெறிப்படியான சமஉரிமை என்பது தமிழ் ஈழம்தான் என்பதை மறக்கக் கூடாது. இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டாலும் சிங்களத்திற்கு ஆதரவான நிலை எடுக்காமல் இருந்தாலே போதும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை போர்க்குற்றம் மீது நடவடிக்கை தேவை: மன்மோகன் சிங்கிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
First Published : 14 Jun 2011 02:09:38 PM IST
புதுதில்லி, ஜூன் 14- இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார்.இன்று பிரதமரை நேரில் சந்தித்தபோது, அவரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய கோப்பு ஒன்றை ஜெயலலிதா அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இப்பிரச்னையை இந்திய அரசு ஐநா சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.இலங்கையில், தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது. சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா பிரதமரிடம் அளித்துள்ள கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
By பழனிசாமி T
6/14/2011 2:55:00 PM
6/14/2011 2:55:00 PM
By Gangadharan
6/14/2011 2:27:00 PM
6/14/2011 2:27:00 PM
By Ravi
6/14/2011 2:20:00 PM
6/14/2011 2:20:00 PM
By KOOPU
6/14/2011 2:18:00 PM
6/14/2011 2:18:00 PM
இக்கருத்தைத் தினமணி வெளியிடவில்லை. பாராட்டு என்பதைப் பண்பற்ற சொல்லாகக் கண்டுபிடித்துள்ள தினமணி வாழ்க!
பதிலளிநீக்கு