2g spectrum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2g spectrum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூலை, 2011

அலைக்கற்றை ஊழல்: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

2 ஜி: மன்மோகன், ப. சிதம்பரத்துக்கும் பொறுப்பு

First Published : 26 Jul 2011 01:58:34 AM IST

Last Updated : 26 Jul 2011 03:28:42 AM IST

புது தில்லி, ஜூலை 25: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றதாக சிறப்பு நீதிமன்றத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் சுசீல் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.  பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், ஆ.ராசா சார்பில் வழக்கறிஞர் சுசீல் குமார் ஆஜராகி வாதிட்டார்.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் ஒப்புதலுடன் நடைபெற்றதாக அப்போது அவர் கூறினார். அவர் மேலும் கூறியது:  மத்திய தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகள் எதிலும் தவறு இல்லை. முந்தைய அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகளையே அவரும் பின்பற்றினார்.  2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கும் நடைமுறை முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போதே இருந்து வந்தது. அதே நடைமுறையைத்தான் ஆ.ராசா பின்பற்றி வந்துள்ளார். இதில் அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை; கொள்கையையும் மாற்றவில்லை.  சட்ட விதிகளுக்கு உள்பட்டே டி.பி. ரியாலிட்டி, யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பிரதமர் நன்றாக அறிவார். இதனை அவர் மறுக்க மாட்டார். தவறு இருந்திருக்கும் பட்சத்தில் பிரதமர் இந்த ஒதுக்கீட்டை அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாம்.  மத்திய அமைச்சரவை வழங்கிய அறிவுரையின் பேரில் நடந்த இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் ஒப்புதல் அளித்திருந்தார்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த அருண் செüரி 26 உரிமங்களும், பின்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்தத் துறையின் அமைச்சராக இருந்த திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் 25 உரிமங்களும் வழங்கியிருக்கின்றனர்.  ஆ.ராசா தொலை தொடர்பு துறையின் அமைச்சராக பணியாற்றியபோது 122 உரிமங்கள் அளித்திருக்கிறார். எண்ணிக்கைதான் வித்தியாசம். ஆனால் கொள்கை ஒன்றுதான். அப்படியிருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஆ.ராசாவிடம் மட்டும் கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இதில் எங்கே குற்றம் நடந்திருக்கிறது? இதில் எங்கே சதி நடந்திருக்கிறது?  ஆ.ராசா குற்றமற்றவர். முந்தைய அரசுகளின் கொள்கையைப் பின்பற்றியது தவறு என்றால் 1993 முதல் தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த அனைவரும் ஆ.ராசாவுடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.  அமைச்சராக ஆ.ராசா இருந்த போது அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திறமையாகப் பணி புரிந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் மொபைல் அழைப்புக் கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. நாட்டில் ரிக்ஷா ஓட்டுபவர் உள்ளிட்ட அனைத்து ஏழை மக்களும் பயன் அடைந்துள்ளனர் என்று வாதிட்டார் சுசீல் குமார்.  இந்த விவகாரத்தில் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்படலாம் என "தினமணி' கடந்த புதன்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

manmohansingh and pa.chidambaram should be resigned - Nidhin: மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

மன்மோகன், ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும்: நிதின் கட்கரி

First Published : 26 Jul 2011 03:03:17 AM IST


 புதுதில்லி, ஜூலை 26: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர்கள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்கரி வலியுறுத்தி உள்ளார்.  தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதிட்டபோது, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடம் ஆலோசித்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  இது குறித்து தில்லியில் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியது:  2ஜி உரிமம் வழங்குவதில் நடைபெற்ற குளறுபடிகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவுடன் நடைபெற்று இருப்பது தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் ஒரு நிமிடம் கூட தாமதம் செய்யாமல் பதவி விலக வேண்டும்.  இவர்கள் இருவரும் சட்ட ரீதியாகவும், தார்மிக அடிப்படையிலும் தொடர்ந்து பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள்.  ஆ.ராசா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன் வைக்கப்படுவதாகக் கூறினாலும், அவரது சார்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அனைவராலும் கவனத்தில் கொள்ளக் கூடியது.  தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2003-ல் தான் முதல் முறையாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்று, தொலைத் தொடர்பு துறை அலைகற்றை உரிமம் வழங்குவதற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.  அதன் அடிப்படையில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அலைக்கற்றை உரிமம் வழங்க ஒப்புதல் அளித்திருப்பதை பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படுத்தியிருக்கிறார். உரிமம் பெற்ற பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனப் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளன. இதை ஒழுங்குபடுத்த மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் தவறி விட்டனர். இதன் மூலம் மலிவான விலைக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்கு ப.சிதம்பரம் மறைமுகமாக உதவி இருக்கிறார்.

வியாழன், 26 மே, 2011

அலைக்கற்றை வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்குக் கண்டனம்

இதில் என்ன குற்றம் உள்ளது? எல்லாமே வெளிப்படையாக நடக்கும் பொழுது அவை படமாக்கப்படும் பொழுது வரைவதில் என்ன தவறு? ஒளிப்படத்தை விடத் தன் திறமையை நம்பிய கலைஞரை ஊக்கப்படுத்தலாம்? ஒளிப்படம் அல்லது காட்சிப்படம் எடுக்கத் தடை இருப்பின் அதனையும் நீக்கலாம். மறைமுக உசாவலில் (in  கேமரா inquiry)தான் தடை விதிக்க வேண்டும்.  காலம் மாறுகிறது. நீதிமன்றம் பழமையிலேயே ஊறிக்கிடக்கிறது. புதுமை எண்ணம்  கொண்ட நீதிபதிகள் அதனை மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


2ஜி வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து படமாக வரைந்தவருக்கு கண்டனம்

First Published : 26 May 2011 02:34:08 AM IST


புது தில்லி, மே 25: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்த பத்திரிகை வரைபடக் கலைஞருக்கு நீதிமன்றம் புதன்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கனிமொழி உள்ளிட்டோரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது நீதிமன்றத்துக்குள் நின்றுகொண்டிருந்த பத்திரிகை கலைஞர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை படமாக வரைந்து கொண்டிருந்தார்.இதனைப் பார்த்த நீதிமன்ற ஊழியர் ஒருவர் படம் வரைவதை நிறுத்துமாறு கூறினார். எனினும் அவர் நீதிமன்றத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு தொடர்ந்து படம் வரைந்தார். இதையடுத்து நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் அந்த ஊழியர் புகார் தெரித்தார்.இதனையடுத்து அந்த கலைஞரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவரை எச்சரித்தார்.அவர் வரைந்த படங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. அவரது அடையாள அட்டையின் நகல் ஒன்றையும் நீதிமன்ற ஊழியர்கள் பெற்றுக் கொண்டனர்.தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்த அந்த நபர், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

புதன், 11 மே, 2011

which was needed for 2g licence? : உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது:ம.பு.து.(சிபிஐ)

உண்மையிலேயே முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்றிருந்தார்கள் எனில் உடல் வலிமை எனலாம். ஆனால், உண்மையில் மேலிடத்தின் வலிமையான பண உறவு கொண்டிருந்த குறுக்கு மூளைக்காரர்களுக்கே உரிமம் தரப்பட்டுள்ளது.எனவே, கிண்டலாகச் சொல்லி இருந்தாலும் உவமை தவறு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



ஜி உரிமம் பெற உடல் வலிமையே அவசியமாக இருந்தது: சிபிஐ

First Published : 11 May 2011 03:14:27 AM IST


புதுதில்லி, மே 10: உடல் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே 2ஜி அலைக்கற்றை உரிமம் பெறுவதில் முன்னுரிமை கிடைத்திருக்கிறது என்று சிபிஐ சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வாதிடப்பட்டது.  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மேம்பாட்டாளர் சாஹித் உஸ்மான் பல்வா சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எந்தத் தவறும் செய்யாத என்னை குறிவைத்து சிபிஐ தாக்குகிறது என்று அந்த மனுவில் பல்வா குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித் ஆஜரானார்.  பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அவர், "2ஜி உரிமம் பெறுவதற்கான முன்னுரிமை என்பது விண்ணப்பித்த நாளை வைத்து முடிவு செய்யப்படவில்லை. மாறாக தொலைத் தொடர்பு அலுவலக கவுன்டர்களை நோக்கி எவ்வளவு வேகமாக முண்டியடித்துக் கொண்டு செல்ல முடிந்தது என்பதைப் பொறுத்துத்தான் முன்னுரிமை முடிவு செய்யப்பட்டது' என்றார்.  ஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கு உரிமம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றும் லலித் வாதிட்டார்.  2ஜி உரிமம் வழங்கப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் முன்னரே ஸ்வான் டெலிகாம் சார்பில் உரிமத்தொகைக்கான ரூ.1,658 கோடி வங்கி வரைவோலை எடுக்கப்பட்டிருந்ததையும் லலித் சுட்டிக்காட்டினார்.  இந்த ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனம், கலைஞர் டி.வி.க்கு லஞ்சமாக ரூ.200 கோடி வழங்கியிருக்கிறார்கள். அதுபற்றி ஊடகங்களில் செய்தி வெளியாகத் தொடங்கியதும், வழக்குப் பதிவான பிறகு அந்தத் தொகை திருப்பி வழங்கப்பட்டிருக்கிறது என்று லலித் வாதிட்டார்.  வாதத்தை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

செவ்வாய், 10 மே, 2011

2 days permission to attend enforcement office for kanimozhi: நீதிமன்றக் காவலுக்குக் கனிமொழிக்கு விலக்கு

கழுத்தைச் சுற்றிய பொருள் என்னும் இந்நூல் பெண் எழுத்தாளர் சிமமந்தா கோழி அடிச்சி (Chimamanda Ngozi Adichie) என்பவரால் எழுதப் பெற்ற  சிறையறை 1 (செல் one)முதலான 12 சிறுகதைகளின் தொகுப்பு. முதல் கதை சிறைக்கு  அனுப்பபட்டு அங்கேயே வாழ்வு முடிந்த இருவர் பற்றிய கதை. ௧௧ ஆவது கதை நாளை வெகு தொலைவில் (Tomorrow Is Too Far) என்னும் கதையாகும்.கழுத்தைச் சுற்றித் தண்டனை வளையம் இறுகினாலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்காகப் படிக்கலாம்.வருங்காலம் வெகு தொலைவில் உள்ளதோ என்னும் ஐயப்பாட்டாலும் படிக்கலாம்.  எப்படியோ படித்துப்  பொழுது போக்குவது  நல்ல செயல்தானே!  பெண் படைப்பாளி மற்றொரு பெண் படைப்பாளியின் படைப்புகளைப் படிப்பதும்நன்றுதானே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து கனிமொழிக்கு விலக்கு
First Published : 10 May 2011 12:42:57 PM IST

Last Updated : 10 May 2011 03:14:21 PM IST
புதுதில்லி, மே.10: நீதிமன்றத்தில் ஆஜரவாதில் இருந்து அடுத்த இருநாட்களுக்கு கனிமொழிக்கு விலக்கு அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.2ஜி வழக்கு தொடர்பாக திமுக எம்பி கனிமொழியும், சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியும் தில்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.முன்னதாக 2ஜி வழக்கில் சிபிஐ தன்னைக் கைது செய்யாமல் இருக்க கனிமொழி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி கனிமொழி இன்று அவரது கணவர் அரவிந்தனுடன் நீதிமன்றம் வந்தார். அவர்களுடன் தூத்துக்குடி எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை உடன் வந்திருந்தார். இதில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது.நீதிமன்றத்துக்கு வந்த கனிமொழி தன்கையில் The Thing Around Your Neck என்ற புத்தகத்தை வைத்திருந்தார். அது நைஜீரிய எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் 12 சிறுகதைகள் உள்ளன. அவரது கணவர் அரவிந்தன் கையில் டெல்லிவாலா என்ற புத்தகம் இருந்தது.மருத்துவக் காரணங்களுக்காக மே 7-ம் தேதி ஆஜராகாத சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கருத்துகள்

She has to attend the summon of Enforcement Directorate on 12th, Hence the court permitted,thats all
By pinky george
5/10/2011 8:58:00 PM
கழுதை தீந்து கடேரும்பு அனா கதைய இறுக்கே ,மெல்ல மெல்ல விட்டுரூ வங்கல்போல இர்ருக்கு , மக்களுக்கு நாமம் குலைக்க படுகிறது
By valipokkan
5/10/2011 8:22:00 PM
14 -ம தேதி செய்தி என்ன என்று தினமணியில் இப்போதே போட்டு விடலாம். இதுவரை அனைவரும் நீதி மன்றம் வந்த ஒரே நாளில் கைது செய்யப்பட்டார்கள். இவருக்கு மட்டும் இரண்டு நாள் விசாரணை. இப்போது விலக்கு. mmmmmm
By sbm
5/10/2011 8:09:00 PM
Its good to see rajasji back ..
By Kovaikkaran
5/10/2011 6:54:00 PM
எல்லாம் சரிதான், நீதிபதி அவர்களே ! நீதிக்கு மாறாமல் மக்களும் நாடும் வாழ சரியான தீர்ப்பை வழங்கவும்
By skveni
5/10/2011 6:30:00 PM
மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அதன்மீதான தீர்ப்பை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதில், மே 12 மற்றும் 13 ஆகிய இருநாட்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராகி கையெழுத்திடுவதில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விலக்கு அளித்தது. ஏன்?ஏன்
By SPR
5/10/2011 6:15:00 PM
நல்ல தான் இருக்கு நடப்பது எல்லாம் காக்கா வடை கதை தான் ஏமாந்து போகபூரோம்
By vikas
5/10/2011 5:26:00 PM
நல்ல தான் இருக்கு நடப்பது எல்லாம் காக்கா வடை கதை தான் ஏமாந்து போகபூரோம்
By vikas
5/10/2011 5:26:00 PM
The thing around your neck is the 'Noose'. You and your family cannot escape this time. End game for you.
By Karthik
5/10/2011 5:23:00 PM
"எனக்கு சட்டம் தெரியாது. எனவேதான் குற்றத்தில் ஈடுபட்டேன் " என நீதிமன்றத்தில் வாதாட முடியாது . ஆனால், இனிமேல் குற்றவாளிகள் " எனக்கு என்பது வயது ஆகிவிட்டது , எனக்கு தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் இத்தாலி பாஷை தெரியாது . எனவே எனக்கு தண்டனை வழங்காதீர்கள்" என குற்றவாளிகள் வாதாட சி.பி.ஐ ஒரு கெட்ட முன் உதாரணத்தை உருவாக்கி இருக்கிறது.”
By gowtham
5/10/2011 5:12:00 PM
"எனக்கு சட்டம் தெரியாது. எனவேதான் குற்றத்தில் ஈடுபட்டேன் " என நீதிமன்றத்தில் வாதாட முடியாது . ஆனால், இனிமேல் குற்றவாளிகள் " எனக்கு என்பது வயது ஆகிவிட்டது , எனக்கு தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் இத்தாலி பாஷை தெரியாது . எனவே எனக்கு தண்டனை வழங்காதீர்கள்" என குற்றவாளிகள் வாதாட சி.பி.ஐ ஒரு கெட்ட முன் உதாரணத்தை உருவாக்கி இருக்கிறது.”
By gowtham
5/10/2011 5:12:00 PM
Pls read karudapuranam
By nambi
5/10/2011 5:03:00 PM
பணம் இருந்தால் பிணமும் வாயை திறக்கும் என்பது சந்தேகமில்லாமல் நிரூபணமாகிவிட்டது என்றே சொல்ல தோன்றுகிறது இந்த நீதிமன்ற ஆஜர் விலக்கு.
By ஹரிநாராயணன்
5/10/2011 4:53:00 PM
ஜாமீன் விசாரணை மே14 க்கு ஒத்திவைப்பு. நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு தீர்ப்பு எப்படி இருக்கபோகிறது என்பதற்கான முன்னோட்டம்.இன்னமும் நியாயத்தையும் நேர்மையையும் நம்பிகொண்டிருக்கும் இந்தியர்களின் நிலை அந்தோ பரிதாபம்.
By kusumban
5/10/2011 4:34:00 PM
எப்போதும் பிறரைப் பழித்துப்பேசி ஆனந்தமடைவதையே பொழுதுபோக்காகக் கொண்ட ஒரு கூட்டம் அதற்குரிய வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் தங்களது தன்மையைகாட்டிக் கொள்கிறது. அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியூட்டும் வண்ணமாக தகவல்கள் வித்தியாசமாக வந்து கொண்டேயிருக்கின்றன. தேர்தல் முடிவுகளும் அவ்வாறே அமையட்டும் என வாழ்த்தும் கூட்டணிக் கட்சியினன்
By Tamilian
5/10/2011 4:11:00 PM
அந்த புத்தகத்தின் தலைப்பு "பரமசிவன் கழுத்தில்லிருந்து பாம்பு கேட்டது கருடா சவுகியம்மா அதற்கு கருடன் சொன்னது யாரும் இருக்கும் இடத்தில இருந்துக்கொண்டால் எல்லாம் சவுகியமே.அதைதான் கனிமொழி கூறுகிறார். அவர்மீது யாராவது அவதூறு கூறினால் அவர் அப்பன் கருணாநிதி கடைந்து எடுத்து விடுவார். சாவுதான் இதற்கு முற்றுப்புள்ளி.
By Rasappaa
5/10/2011 4:10:00 PM
கண்டிப்பா உப்பு தின்னவா தண்ணி குடிச்சே திறனும் இல்லானே நம்ம நாட்டோட ஜனநாயகமே கேளிகுத்த போய்டும் .... எனவே நீதிபதி அய்யா அவர்களே நல்ல தீர்ப்பை வழங்குங்கள் .............
By செந்தில்முருகன்
5/10/2011 3:51:00 PM
'The around your neck ' -என்ன ஒரு கவித்துவமான நிலைமைக்குப் பொருத்தமான தலைப்பு. ஆனால் இப்படி ஒரு புத்தகத்தை நீதி மன்ற விசாரணையில் இருக்கும் போது படித்துக் கொண்டிருந்தால் அது நீதி மன்ற அவமதிப்பாகாதா? அரவிந்தன் தனது எதிர்கால வாழ்க்கையை நினைத்து இப்போதே 'டெல்லிவாலா' படிக்க ஆரம்பித்திருப்பது பொருத்தம்.
By இராமசாமி சேகர்
5/10/2011 2:53:00 PM
உலக தமிழ் காவலனின் மகள் அல்லவா?அதான் இந்த மொழி பாசம்
By narayanan
5/10/2011 2:47:00 PM
புஸ்தகத்தை சொல்லி 2g செய்தியை திசை திருப்புவதுபோல் உள்ளது.
By shameed
5/10/2011 2:46:00 PM
தைரியமா இருக்குற மாதிரி காட்டிகிறாங்க வேற ஒன்னும் இல்ல .
By பாஜ்ருடீன்
5/10/2011 2:29:00 PM
அடா.....இந்த நேரத்திலாவது மகாத்மா காந்தியின் சுய சரிதை படித்தால் திருந்த வாய்ப்பிருக்கும் அதைவிடுத்து நைஜீரிய மாபியாக்கள் ...சோமாலிய கடற்க் கொள்ளையர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்கிறாங்கப்பா ! நைஜீரியப் புத்தகத்துல தப்பிக்க நிறைய உபாயத்தை சொல்லியிருப்பார்கள் போல இருக்கு! ஆனால் கிடுக்கிப் புடி எப்படிப் போடுவது என்று அமெரிக்க புத்தகத்தைப் படித்து கை தேர்ந்தவர்கள் விசாரணை அதிகாரிகள் ! என்ன நடக்கிறது என்று பார்ப்போம் !!! @ rajasji
By rajasji
5/10/2011 1:51:00 PM
அந்த புத்தகத்தின் அட்டை மட்டுமே ஆங்கிலம் ஆனால் உள்ளே இருபது மாடிகொல்லாமல் ஊZல் பண்ணுவது எப்படி என்று ஒரு புத்தகம் இருந்தாலும் இருக்கும்.
By a.ajithkumar
5/10/2011 1:34:00 PM
The Thing Around Your Neck"....is your Diamond Neclace ! It is a Great Problem to you ! நீயும் உன் அப்பனும் முறைகேடாக சேர்த்த திருட்டுப் பணத்தில்...மக்களை ஏமாற்றி வஞ்சித்து சுருட்டிய ஊழல் பணத்தில் வாங்கி அணிந்திருக்கும் இந்த பாவப் பட்ட "வைர நெக்லஸ்" தான் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்கள் கூட்டத்தின் தோல்விகளுக்கும் இந்த தேசத்தின் சீரழிவிற்கும் மூல காரணம் ! எனவே நீதிமன்றங்களின் நேரத்தை விரயம் செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை இதற்க்கு மேலும் சீரழிக்காமல் உனது கழுத்தில் கிடக்கும் வைர நெக்லசையும் முறை கேடாக சுருட்டிய செல்வங்களையும் கோர்ட்டில் ஒப்படைத்து விடு ! ஒருக்கால் உனக்கு பாவ மன்னிப்பு கிடைக்கலாம் ! அதை விடுத்து The Thing Around Your Neck"...என்று குப்பைக்குப் போகும் புத்தகத்தைப் படித்து கெட்டுப் போகாதே அன்புத் தங்கச்சி ! The Thing Around My Mind is Soooooooo... Beautiful" !!!....@ rajasji
By rajasji
5/10/2011 1:23:00 PM
காலை சுற்றிய பாம்பு , கடிக்காமல் விடாது என்பார்கள். கழுத்தை சுற்றிய கயிறு , கடைசியில் காப்பாற்றுமா?
By பி.டி.முருகன் திருச்சி
5/10/2011 1:06:00 PM
இந்த பத்திரிக்கைக்காரங்க எதையெல்லாம் கவனிக்கிறாங்கப்பா...!! அப்போ... தமிழ் தாத்தாவின் மகள் "தமிழுக்கு கெட்-அவுட், ஆங்கிலத்துக்கு கட்-அவுட்" என்று ஆகிவிட்டாரா??
By Abdul Rahman - Dubai
5/10/2011 1:06:00 PM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து
கனிமொழிக்கு தளர்வு
First Published : 11 May 2011 12:34:59 AM IST