கேரளத்திலும் மே.வங்கத்திலும் ஒளிமயமான வெற்றியை மட்டும் எந்தச் சோதிடத்தின் அடிப்படையில் கூறினாராம். அப்படியானால் தமிழகத் தேர்தல் முடிவுகள் தோல்வியைத் தரும என்ற அச்சம் உள்ளது என்பது புரிகிறது. ஒரே சமயத்தில் இப்படியா ௨ இல் வெற்றி ஒன்றில் சோதிடம் தெரியாது
எனப் பொன்மொழி உதிர்ப்பது!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்
First Published : 17 Feb 2011 02:51:45 AM IST
புதுதில்லி, பிப். 16: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா என்று கேட்டபோது, நான் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கேரளம், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது என்றார் அவர். தில்லியில் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரிணமூல்- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை. கேரளத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார். அசாமில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்று கேட்டபோது,அசாம் அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. உல்பா தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றார் பிரதமர்.
கருத்துகள்
சரி ,உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடரை தாத்தாவுக்கு அறிமுகம் செய்து வையுங்கள் ,உங்கள் கூட்டணி வெற்றி பெறுமா இல்லையா என்பதைவிட அரசில் நீங்கள் பங்கு கேட்பீர்களா இல்லையா என்பதுதான் தலைபோகிற பிரச்சினை .
By மூர்த்தி
2/17/2011 1:26:00 PM
2/17/2011 1:26:00 PM
சோனியாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கேட்டிருக்க கூடாது. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா.
By பி.டி.முருகன் திருச்சி
2/17/2011 8:52:00 AM
2/17/2011 8:52:00 AM
இவர் கேவலம் பிரதம மந்திரி தானே?இவர் எதுக்கு காங்கிரஸ் தலைவர் மாதிரி தேவை இல்லாமல் தெரிந்த மாதிரி அரசியல் பேசுகிறார்.
By புதுகை selva
2/17/2011 6:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/17/2011 6:14:00 AM