இனி த் தண்ணீரை வீணாக்காதீர்!
கழுவுக் கிண்ணியிலிருந்து வீணாகும் கழிவுநீரை, குறைந்தபட்ச மறுசுழற்சி மூலமே நன்னீராக மாற்றி, மீண்டும் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்த, வைசுணவ்வு: நான், சென்னையில் உள்ள, லயோலா கல்லுாரியில், பி.எஸ்சி., வேதியியல், இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். 'மழைநீர் சேகரிப்பு திட்டம்' போன்ற எதையும், தங்கள் வீடுகளில் செயல்படுத்த, மக்கள் முன்வருவது இல்லை. அதனால், கோடைக்காலம் வந்தவுடன், சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீரை வீணாக்காமல், 'வேஸ்ட் வாட்டர் மேனேஜ் மென்ட்' என்ற திட்டம் மூலம், தண்ணீரின் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்த, வாஷ்பேசினிலிருந்து வீணாகும் கழிவுநீரை, குறைந்தபட்ச மறுசுழற்சி செய்து, நன்னீராக மாற்றும் முறையை கண்டுபிடித்தோம். வாஷ்பேசினிலிருந்து வரும் கழிவுநீரில், சமையல் கழிவுகளே இருக்கும். அதை பெரிய தொட்டியில் சேமித்தால், உணவு கழிவுகள் அடியில் தங்கி விடும். மேலே தேங்கியுள்ள சமையல் எண்ணெய்யை நீக்கினாலே, இடைப்பட்ட நீர், ஓரளவிற்கு சுத்தமாகிவிடும். ஆனால், பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் வேதிப்பொருளில் உள்ள, 'பாஸ்பேட்' உப்பு மட்டும் நீரில் கலந்துவிடும். அந்த நீரினுள், ஆக்சிஜனை செலுத்தினால், பாசிகள் உருவாகி, பாஸ்பேட் உப்பை தின்றுவிடும். இதன் மூலம் கழிவுநீரானது, 80 சதவீதம் சுத்தமாகிவிடும். வெட்டிவேர், தண்ணீரில் உள்ள நுண்ணிய கழிவு உப்புகளை அழிக்கும் திறன் வாய்ந்ததால், அதை பயன்படுத்தி, 95 சதவீதம், சுத்தமான நீரை எளிதாக பெறலாம். இம்முறை, தண்ணீர் வீணாவதை தடுப்பதுடன், தண்ணீரின் அவசியத்தையும் உணர்த்துவதாக பாராட்டினர். இதற்காக, அதிகம் செலவு செய்ய தேவையில்லை. உடல் உழைப்பு இருந்தாலே போதும். சமீபத்தில், சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுாரியில் நடைபெற்ற அறிவியல் போட்டியில், என் கண்டுபிடிப்புக்கு, முதலிடம் கிடைத்தது. அதற்காக, சென்னை மாநகராட்சி மேயரிடமிருந்து, 3,000 ரூபாய் ரொக்க பரிசும், 2,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்களும் பரிசாக பெற்றேன். தொடர்புக்கு: 98404 45869.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக