இதே மாதிரி
நச்சுக்கருத்தைப் பரப்புவதையே இச்செயதியாளர் தன்கடமையாகக் கொண்டு உள்ளார். சிங்கள
அரசின் தமிழ் இனப்படுகொலையால்தான், தமிழகத்தில் சுற்றுலாப்
பயணிகளுக்கு எதிர்ப்பு உள்ளது என்ற
உண்மையை எழுதி அவர்களுக்கு உணர்த்தலாம் அல்லவா? நடுநிலைச் செய்திகள்இடையே நச்சுக்
கருத்துகளைக் கலந்து அவற்றைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டா.அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
மீனவர்கள் சிக்கல் நீடிப்பதற்கு த்
தமிழக அரசு காரணமா?
அரசியல் தலைவர்கள்:
இந்தியாவில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தான், இலங்கைத் தமிழர் பிரச்னை மற்றும் மீனவர் பிரச்னையை தீர்க்க விடாமல் குழப்புகின்றனர். இலங்கையிலிருந்து சுற்றுலாப் பயணிகள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வந்தால், அவர்களை துரத்தி அடிக்கின்றனர்.வன்முறையாக நடந்து கொள்கின்றனர். இதனால்தான், பதிலுக்கு இந்திய மீனவர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இருந்தாலும், பிரச்னையை சமாதானமாக தீர்க்க, இலங்கை அரசு முழு அளவில் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. இதற்காக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்த வேண்டுமானால், இலங்கை அரசே ஏற்பாடு செய்யும். அதற்கான செலவு முழுவதையும், இலங்கை அரசே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறது.இவ்வாறு, பசில் கூறினார். அதன்பிறகு மத்திய அரசிடம் இந்த பிரச்னையை கொண்டுபோனோம். அவர்களும் பிரச்னையை தீர்க்க, ஆர்வம் காட்டினர். பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் மூலம் வற்புறுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக