சனி, 5 அக்டோபர், 2013

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி

உண்ணாவிரதப் போராட்டத்தைத் தியாகு கைவிட வேண்டும்: கருணாநிதி

உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு கை விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பது உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகில் தியாகு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
4-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தியாகுவோடு அமர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் தி.வேல்முருகன் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்திய கம்யூனிஸட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தியாகு வலியுறுத்துவதைப் போல பல முறை நானும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி விட்டேன்.
ஆனால் இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வரவில்லை.
இந்தியா உரிய நேரத்தில் தக்க முடிவு எடுக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர்.
தியாகுவின் கோரிக்கை நியாயமானது என்றாலும், தூக்கு தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர் காப்பாற்றப்பட வேண்டும்.
எனவே, காலவரையற்ற உண்ணாநிலையினை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் தியாகு ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக