வியாழன், 3 அக்டோபர், 2013

ஊழியமும், நேர்மையும் தேவை!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_817896.jpg

சேவையும், நேர்மையும் தேவை!
2,500 போலி ரேஷன் கார்டுகளை நீக்கி, தமிழக அரசுக்கு, மாதம், 23 லட்சம் மிச்சப்படுத்திய துடன், ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவும், விசயராகவன்: நான், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். 1994ல், வருவாய் துறையில், ‘டைப்பிஸ்ட்’டாக சேர்ந்தாலும், அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதி, 2010ல், தாசில்தார் ஆனேன். இடைப்பட்ட காலங்களில், பல நேர்மையான கலெக்டர்களிடம், பி.ஏ.,வாக பணியாற்றினேன். அதனால், சமூகத்துக்காக தன்னலமில்லாமல் உழைக்கவும், சேவை மனப்பான்மையோடு நடக்கவும் முடிவு செய்தேன். கஷ்டப்பட்டு படித்ததால், ஆரம்பம் முதலே, ஏழை மாணவர்களின் படிப்பிற்காக உதவி வந்தேன். கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் துறை, தனி வட்டாட்சியராக பதவியேற்றதும், ‘இனி, ரேஷன் பொருட்கள் வாங்க, பள்ளி மாணவர்கள் வரக் கூடாது’ என, உத்தரவிட்டேன்.
இதனால், ஏழை மாணவர்களின் படிப்பு தடைபடுவது தடுக்கப்படும். மேலும், படிப்பறி
வில்லா பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளின் படிப்பின் முக்கியத்துவமும் விளங்கும். வாரத்திற்கு, 14 ரேஷன் கடைகளை பார்வையிட்டாலே போதும். ஆனால், 30க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனையிட்டு, தமிழகத்திலேயே அதிகபட்சமாக, 2,500 போலி ரேஷன் அட்டைகளை, பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே கண்டுபிடித்து நீக்கினேன்.
இதன் மூலம், தமிழக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்ததோடு, அதற்காக மாதந்தோறும் செலவிடப்படும், 23 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தினேன். இதற்காக, சுதந்திர தின விழாவில், கலெக்டர், டி.பி ராஜேஷ், விருது வழங்கி பாராட்டினார். கிருஷ்ணகிரியின் நிலத்தடி நீரில், ‘புளோரைடு அமிலம்’ அதிகம். இதனால், குழந்தைகளின் பற்களில், மஞ்சள் கறை படிவதோடு, ஓட்டையும் விழுகிறது. எனவே, அரசு பள்ளிகளில், 30 ஆயிரம் ரூபாய் செலவில், குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் பொருத்தி, சுத்தமான தண்ணீர் தருகிறேன்.
தொடர்புக்கு: 94435 12245

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக