வாக்குகளைக்
கவரும் நோக்கில் அவ்வப்பொழுது அறிவிப்புகளை வாரி வழங்குவது சிதம்பரம் வழக்கம். அவை
யாவும் காற்றில் கரையுமே தவிர வேறு
யாருக்கும் நன்மை விளைவிக்காது. பல முறை அவர் கல்விக்கடன்களுக்கான வட்டி தள்ளுபடி
செய்யப்படும் என அறிவித்து உள்ளார். ஆனால் வங்கிகளை அணுகியவர்களிடம்
வருமானச்
சான்றிதழ்கள் கேட்கப்பட்டன. அதற்கிணங்க வருமானச் சான்றிதழ்கள் தரப்பட்டன.
இப்பொழுதெல்லாம் தர முடியாது. பின்னர முடிவெடுக்கப்படும் என்றனர் அடுத்து முதல் ஆண்டு வட்டிமட்டும்தான் தள்ளுபடி
செய்யப்படும். அமைச்சர் இந்த ஆண்டிற்கு மட்டும்தான் அறிவித்தார் என்றனர். சரி,
அதையாவது அனைவருக்கும் வழஙகினாரகளா என்றால்
இல்லை. வங்கியின் தலைமை அலுவலகமே சிலரைத்
தெரிவு செய்து அவர்களுக்கு மட்டும் வட்டித் தள்ளுபடி என்றது. கல்விக்கடன்
தள்ளுபடியில்கூடச் சொன்னதை நிறைவேற்ற
முடியாத சிதம்பரம் அறிவிப்பு மூட்டைகளை அவிழ்த்து விடுவதை நிறுத்தலாமே! அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக்
காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கடனுக்காக அலைக்கழிக்காதீர்: வங்கிகளுக்கு ப் ப.சிதம்பரம் அறிவுரை
வங்கி மேலாண்மை இயக்குநர் ஆர்.கே.துபே தலைமை தாங்கினார். மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் உதவி தொகை
வழங்குவது வங்கிகளின் கடமை. கல்வி கடன் பெற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு
வங்கிகளை அணுக, மாணவர்கள் அச்சப்பட்டனர்.
சொத்து ஜாமின் மற்றும் பெரிய நபர்கள் ஜாமின் இருந்தால் மட்டும் கடன்
வழங்கப்படும். இப்போது எந்த ஜாமினும் இல்லாமல் கடன் வழங்க ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு சட்டம் வழிவகை செய்கிறது. அதன் மூலமாக எளிதாக கடன்
பெற முடிகிறது. வங்கியில் கடன் கேட்டு வருபவர்களை வங்கி அதிகாரிகள்
அலைகழிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
6,600 மாணவர்களுக்கு ரூ.131 கோடி கல்வி கடன், 1,000 பேருக்கு ரூ.25 கோடி
விவசாய மற்றும் சுய உதவி குழு கடன், 2004 பேருக்கு ரூ.46 கோடி நுண் மற்றும்
சிறு தொழில் கடன் என்று மொத்தம் 18,600 பேருக்கு ரூ.202 கோடி கடன்
தொகைக்கான ஆணையை ப.சிதம்பரம் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக