சனி, 17 நவம்பர், 2012

இலங்கை வன்னிப் போரில் 1 ,46,000 தமிழர்கள் மாயம்:ஐ.நா

இலங்கை வன்னிப் போரில் 1 இலட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ த் தகவல்
இலங்கை வன்னிப் போரில் 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ தகவல்
நியூயார்க், நவ. 17-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தன. இதுகுறித்து ஆராய ஐ.நா.சபையின் ஆய்வு குழுவை பொது செயலாளர் பான் கி மூன் நியமித்தார். அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன்னிப் போரில் காணாமல் போன 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் கதி குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்பித்துள்ள புள்ளி விவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்னியில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 தமிழர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போரின்போது வன்னியில் இருந்து வவுனியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களுடன் ஒப்பிடும்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? ஒரு வேளை அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது மாயமாகியோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக