வியாழன், 15 நவம்பர், 2012

ஆவடி மாநாடு 1966 ஆ? 1956 ஆ?

< 1966-ல் ஆவடியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு > 1956 இல் என இருக்க வேண்டும். காமராசர் 1954  இல்  தமிழ்நாட்டு முதல்வராக முதன் முறை பொறுப்பு ஏற்றார்.௧௯௫௫ இல் ஆவடிக் காங்கிரசுக் கூட்டம் நடைபெற்றது. ௧௯௫௬ இல் மாநாடு நடைபெற்றது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மெய்யாலுமா?

First Published : 15 November 2012 01:59 AM IST
லண்டன் என்று சொன்னால் உடனே நினைவுக்கு வருவது தேம்சு நதிதான். 346 கி.மீ. நீளமுள்ள தேம்சு நதிதான் இங்கிலாந்திலேயே நீளமான நதி. (உலகிலேயே நீளமான நதி எது தெரியுமா? நைல் நதிதான். நீளம் 7,088 கி.மீ.)
தென் இங்கிலாந்தில் பாயும் இந்தத் தேம்ஸ் நதிக்கரையை ஒட்டியுள்ள நகரங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவை ஆக்ஸ்போர்ட், ரீடிங், வின்ட்ஸர், ரிச்மண்ட் ஆகியவை. இவ்வளவு பெரிய லண்டன் மாநகரத்தின் நடுநாயகமாக ஓடியும் தேம்ஸ் நதி மட்டும் ஏன் நமது கூவம் போலச் சாக்கடையாக மாறவில்லை, ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகவில்லை என்று லண்டன் பிரித்தானிய உலகத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற யாராவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? அதற்கு அவர்களுக்கு நேரம் இருந்ததா என்று தெரியவில்லை.
இங்கே தடபுடலாக வரவேற்புக் கொடுக்கப்பட்ட தளபதி, அங்கே பேசிவிட்டுக் கீழே இறங்கியதுதான் தாமதம், ஒரு பெண்மணி வழிமறித்துக் கேட்டக் கேள்விகளில் ஆடிப்போய் விட்டாராமே அவர். "போர் நடைபெற்றபோது காப்பாற்றுங்கள் என்று நாங்கள் அலறியதெல்லாம் பதவி சுகத்தை அனுபவித்த உங்கள் காதில் விழவில்லை. இப்போது அரசியல் தீர்வு அது இது என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறீர்களே' என்று உலுக்கி எடுத்து விட்டாராமே, மெய்யாலுமா?
===========================
கடல் போலக் கருணையுள்ள அந்த அதிகாரியிடம் இலவசமாகக் கருணை கிடைக்காது. யாராவது அவரைப் பார்த்துத் தங்க நாணயம் பற்றிப் பேச்செடுத்து விட்டால் போதும், துப்பாக்கி பேசினாலும் பேசும். ஏற்கெனவே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். இந்த நிலையில் இவர் போடப் போகும் கூடுதல் ஆணையால் சென்னை மாநகரப் போக்குவரத்து சிக்கித் தவிக்கப் போகிறதே என்று பேசிக் கொள்கிறார்களாமே, மெய்யாலுமா?

===========================
வாரிசு யுத்தம் எந்த அளவுக்கு இருக்கிறது? தன்னுடைய மகன் தலைமறைவாக எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்க, இங்கே உற்சாக வரவேற்பும், ஆர்ப்பாட்டமுமா என்று மூத்த வாரிசு கொந்தளித்துப் போய் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அடுத்த வாரிசின் உத்தரவின் பேரில், மூத்த வாரிசின் குடும்பத்தார் பாங்கில் போட்டிருக்கும் சொத்து விவரங்கள் திரட்டப்படுகிறதாமே, மெய்யாலுமா?
===========================
கடலுக்குள்ளும் கப்பலுக்குள்ளும் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்குத் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், துறைமுகத்தில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் இருந்தால் எப்படி? சம்பந்தப்பட்ட அமைச்சரின் வாசனைகூட ஏனைய அதிகாரிகளுக்குத் தெரியாத அளவுக்குத் துல்லியமாகச் செயல்படுகிறாராம் பொறுப்பில் இருப்பவர். அவரது அனுமதியின்றி யாரும் அமைச்சரைச் சந்தித்துவிட முடியாது. கிடைப்பதெல்லாம் ஏற்றுமதி செய்யப்படுகிறதா இல்லை கன்டெய்னர்களில் அப்புறப்படுத்தி ஒதுக்கப்படுகிறதா என்று தெரியாமல் குழம்புகிறார்களாமே அதிகாரிகள், மெய்யாலுமா?
===========================
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை வரும் குளிர்காலத் தொடரில் எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் சில முனைப்புடன் களமிறங்கி இருக்கின்றனவாம். இதற்காக சந்திக்காத உறுப்பினர்கள் இல்லையாம். எல்லா கட்சியிலும், எல்லா அணியிலும் இந்தப் பிரச்னையை முன்வைத்துப் பிளவுகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள். சில்லறை வர்த்தகத்துக்கு மொத்தமாக கொள்முதல் நடத்த திட்டமாமே, மெய்யாலுமா?
===========================
மத்திய அரசும் காங்கிரஸ் தலைமையும் என்னதான் திட்டம் வைத்திருக்கிறது என்று புரியாமல் தவிக்கிறதாம் தமிழகக் கூட்டணித் தலைமை. வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் தன்னை விடுவிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்த பெண் வாரிசின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது மத்தியப் புலனாய்வுத் துறை. உச்சநீதிமன்றத்தின் மனுவை விசாரிக்கத் தடை வாங்க அனுமதி அளித்ததே மத்திய அரசுதான். பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆலோசகர் என்ன காரணத்துக்காக தமிழக முதல்வரைச் சந்திக்க அனுப்பப்படுகிறார் என்று முன்கூட்டித் தகவல் கிடையாது. காங்கிரஸ் தலைமை நம்மை ஏமாற்றுகிறது என்று அவருக்குத் தூபம் போடுகிறார்களாமே, கூட்டணி பிடிக்காதவர்கள், மெய்யாலுமா?
===========================
புதிதாகப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்குக் கட்டாயக் கணினிப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. அரசு ஊழியர்களின் பயிற்சிக்காக வழங்கப்பட்ட கணினிகள் ஒரு சில மாவட்டங்களில் வழங்கப்படாமல் சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் வசமே இருக்கிறதாமே. அவர்களின் சொந்த பயன்பாட்டுக்கு வீட்டிற்குக் கொண்டு போய் விட்டார்களாமே, மெய்யாலுமா?
===========================
1966-ல் ஆவடியில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த மாநாட்டில் யு.என். தேபர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காமராஜ் முதல்வராகப் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் நடைபெற்ற மாநாடு என்பதால், பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேரு - காமராஜ் நெருக்கத்திற்கு ஆவடி காங்கிரஸ் மாநாடு வழிகோலியது.
அதுமட்டுமல்ல. ஆவடி மாநாட்டில்தான் அணிசாரா நாடுகளின் இன்றியமையாமை பற்றிப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு முதன் முதலில் உறுப்பினர்களுக்கு விளக்கிப் பேசினார். ஆவடி மாநாட்டில்தான் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கையாக ஜனநாயக சோஷலிசம் அறிவிக்கப்பட்டது. ஆவடி மாநாட்டைத் தொடர்ந்து ராணுவ தளவாடத் தொழிற்சாலை, ராணுவ வீரர்களுக்கு உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை போன்றவை நிறுவப்பட்டன.
பாதுகாப்பான, வலிமையான பாரதத்தை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ராணுவம் சார்ந்த நிறுவனம் அது. அங்கே ஒரு தொழிலாளர் தகராறு. அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் செய்தும் பயனில்லையாம். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிக்கிறார்களாம். இவர்கள் பாரதம் என்று சொன்னால் அவர்கள் புரட்சி என்று பதிலளிக்கிறார்களாமே... ""இந்த அதிகாரிகளுக்குத் தெரியவில்லை, மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று'' கூறிச் சிரிக்கிறார்களாமே காவல் நிலையத்தில், மெய்யாலுமா?
===========================
திராவிட முன்னேற்றமும், தேசிய முற்போக்கும் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். பாதிக்குப் பாதியில் தொடங்கி, பதினைந்தாகி இப்போது ஒரு டஜன் இடங்களை ஒதுக்கினால் கூட்டணிக்கு தயார் என்று கோயம்பேடிலிருந்து ஒப்புதல் தரப்பட்டிருக்கிறதாம். பத்தில் பேரம் முடியும் என்று கேள்வி. அப்படி ஏதாவது நடந்தால் அவைத் தலைவர் அரசியலிலிருந்தே ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறாராமே, மெய்யாலுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக