1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 டிசம்பர், 2013

துண்டுத் தாளில் 140 அடி உயர வள்ளுவர் ஓவியம்: 1,147 மாணவர்கள் அருந்திறல்

துண்டுத் தாளில் 140 அடி உயர 
வள்ளுவர் ஓவியம்:
 1,147 மாணவர்கள் அருந்திறல்

காரைக்குடி: "லிம்கா' சாதனைக்காக, துண்டு வண்ண காகிதம் மூலம், 140 அடி உயர, திருவள்ளுவர் ஓவியத்தை, காரைக்குடி லீடர்சு பள்ளி மாணவர்கள் செய்துள்ளனர். காரைக்குடி, லீடர்சு பள்ளியைச் சேர்ந்த, 1,147 மாணவர்கள், 140 அடி உயரம், 50 அடி அகலம் கொண்ட, கன்னியாகுமரி ஆளுயரத் திருவள்ளுவர் சிலை ஓவியத்தை, துண்டுத்தாள்களைக் கொண்டு செய்தனர். இதற்காக,  200 கிராம் கொண்ட, 1,450 பெவிக்கால் குப்பிகள், 1,750 வரைபட அட்டை, 50 ஆயிரம்  மெருகுத்தாள் பயன்படுத்தப்பட்டன.
ஆறு மணி நேரத்தை இலக்காகக் கொண்டு, காலை, 9:30 மணிக்குத் தொடங்கி, மாலை, 3:00 மணிக்குள், ஓவியத்தை நிறைவு செய்தனர். 25 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. லிம்கா குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில், குழுவினர் ஓவியத்தைப் பதிவு செய்தனர்.

பள்ளி இயக்குனர் ஞானகுரு கூறுகையில், ""மாணவர்களிடையே ஒற்றுமையையும், படைப்பாற்றலையும், தமிழ்ப் பற்றையும் வளர்க்கும் விதமாக, இந்நிகழ்வு நடத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
Click Here

திங்கள், 18 பிப்ரவரி, 2013

1,741 உடல் உறுப்புகள் தானம் : முன்னேற்றம் தேவை

1,741 உடல் உறுப்புகள் தானம் : இருந்தாலும் இன்னமும் முன்னேற்றம் தேவை


கடந்த நான்கு ஆண்டுகளில், சாலை விபத்துகள் போன்றவற்றில் சிக்கி, மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட, 1,741 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு உள்ளன.

சாலை விபத்துகள் போன்றவற்றில் சிக்கி, மருத்துவமனைகளில் மூளைச்சாவு ஏற்படுவோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் குடும்பத்தினரின் ஒப்புதல்படி, தகுதியான, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தானமாகப் பெற்று வருகின்றன.
தானம்:


இவ்வகையில், கடந்த, 2008ம் ஆண்டு, அக்., முதல், கடந்த ஆண்டு, டிச., வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூளைச்சாவுக்கு ஆளானவர்களில், 306 பேரிடம் இருந்து, மொத்தம், 1,741 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.இவற்றில், சிறுநீரகம் - 563; விழி வெண்படலம் (கார்னியா) - 482; இதய வால்வுகள் - 350; கல்லீரல் - 280; இதயம் - 52; நுரையீரல் - 13 ஆகியவை அடங்கும்.தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளில், கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகியவை அனைத்தும், தேவையானவர்களுக்குப் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அதிகபட்சமாக, அப்பல்லோ மருத்துவமனை, தங்கள் மருத்துவமனைகளில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெற்ற (லோக்கல் முறை), 102 சிறுநீரகங்கள், 111 கல்லீரல்கள் ஆகியவற்றை, தேவையானவர்களுக்குப் பொருத்தி உள்ளது.பிற மருத்துவமனைகளில் இருந்து தானமாகப் பெற்ற (ஷேர் முறை), 31 இதயத்தை, நோயாளிகளுக்குப் பொருத்தியதில், பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது.

முன்னிலை:
"லோக்கல்' முறையில், 56; "ஷேர்' முறையில், 37 என, மொத்தம், 93 சிறுநீரகங்களை பயன்படுத்தி, அரசு மருத்துவமனைகளில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது.இது குறித்து, அரசு பொது மருத்துவமனை, மருத்துவர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், சிறுநீரகத்தின் தேவை, தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. அதிகரித்துவரும் நீரிழிவு நோய், சிறுநீரக தானம் கொடுப்போர் மற்றும் பெறுவோரின் ரத்த வகை பொருந்தாதது, மாற்று சிறுநீரகத்தை நோயாளியின் உடல் ஏற்றுக்கொள்ளாதது போன்றவை, ஆகியவை இந்த அறுவை சிகிச்சையில் அதிக வெற்றி தராததற்குக் காரணமாகி விடுகிறது.
 
ஆர்வமில்லை:
மூளைச்சாவு ஏற்படுவோரிடம் இருந்து தானமாகப் பெறும் உறுப்புகளை, 4 முதல் 5 மணி நேரத்திற்குள், தேவைப்படுவோருக்கு பொருத்திவிட வேண்டும். நோயாளிகள் ஆர்வம் காட்டாதது, ரத்த வகை ஒன்றிப் போகாதது போன்ற காரணங்களால், தானமாகப் பெறப்படும், "கார்னியா'க்கள், முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் போக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது  செய்தியாளர் -

சனி, 17 நவம்பர், 2012

இலங்கை வன்னிப் போரில் 1 ,46,000 தமிழர்கள் மாயம்:ஐ.நா

இலங்கை வன்னிப் போரில் 1 இலட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ த் தகவல்
இலங்கை வன்னிப் போரில் 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் மாயம்: ஐ.நா.சபை அதிகாரபூர்வ தகவல்
நியூயார்க், நவ. 17-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தன. இதுகுறித்து ஆராய ஐ.நா.சபையின் ஆய்வு குழுவை பொது செயலாளர் பான் கி மூன் நியமித்தார். அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன்னிப் போரில் காணாமல் போன 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்களின் கதி குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. இலங்கை அரசு எழுத்து மூலம் சமர்பித்துள்ள புள்ளி விவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வன்னியில் 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 தமிழர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போரின்போது வன்னியில் இருந்து வவுனியாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்களுடன் ஒப்பிடும்போது 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? ஒரு வேளை அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது மாயமாகியோ இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.