செவ்வாய், 13 நவம்பர், 2012

பாடு பட்டதற்குப் பலன்கிடைத்தது!

சொல்கிறார்கள்

 பாடு பட்டதற்குப் பலன்கிடைத்தது!


பயிற்சி முடித்தவுடன், சர்தார் பட்டேல் விருதை பெற்றுள்ள, ஐ.பி.எஸ்., லோகநாதன்: நான், 2001ல், யூனியன் பப்ளிக் சர்வீஸ் தேர்வு எழுதி, வெற்றி பெற்றேன். 2002ல், எனக்கு, ஐ.பி.எஸ்., பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கப்படவில்லை; காரணம், ஓ.பி.சி., பிரிவில் இல் லை என்று சொல்லி விட்டனர்.அதற்கு பதில், பொதுப் பிரிவில் என்னை தேர்வு செய்து, பாண்டிச்சேரி மாநிலத்தில், டெபுடி கலெக்டர் பணி கொடுத்தனர். அதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தேன். ஐ.பி.எஸ்., அதிகாரியாவதற்கு, 10 ஆண்டுகள் போராடினேன். இறுதியில் வெற்றி கிடைத்தது.
ஐதராபாத்தில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் ட்ரெய்னிங் சென்டரில், 2010ம் ஆண்டு, "பேட்சில்' பயிற்சிக்குச் சென்றேன். அப்போது எனக்கு வயது, 36.அங்கு என்னுடன் ட்ரெயினிங் வந்தவர்கள் எல்லாம், என்னை விட, ஏழு எட்டு வயது குறைந்தவர்கள். அவர்கள் உடல் திறனுக்கேற்ப, நம்மால் ஈடு கொடுக்க முடியுமா என்ற பயம், எனக்குள் இருந்தது.ஆனாலும், மனதில் தைரியத்தை வரவழைத்து, பயிற்சி பெற்றேன். மொத்தம், 103 ஆண்கள், 20 பெண்கள்; இவர்களில், உடல்திறன், போட்டித் திறன், அறிவுத்திறன், என, எல்லா பயிற்சியிலும், எனக்கு முதல் இடம் கிடைத்தது.

சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகாடமி இயக்குனர், வி.என். ராய் கையால், சர்தார் வல்லபாய் படேல் விருதையும், சமீபத்தில் பெற்றேன். 10 ஆண்டுகளாக, நான் பட்ட கஷ்டங்களுக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளது; வெற்றி பெற்று, விருதும் வாங்கி விட்டேன்.தொடர்ந்து பேராடினாலும், நானும் மனிதன் தானே; எனக்கும் சோர்வு வரத் தானே செய்யும்?நான் சோர்ந்து போகும் நேரங்களில், எனக்கு பக்க பலமாக இருந்து தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தது, என் அன்பு மனைவி சுபத்ராவும், குழந்தைகளும் தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக