திங்கள், 12 நவம்பர், 2012

மீச்சிறு கணிணி அறிமுகம்

"ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' அறிமுகம்

புதுதில்லி: குறைந்த விலை, "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' டில்லியில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம், ஐபேட் என்ற பெயரில், "டேப்ளட் பிசி'யை (சிறிய அளவிலான பர்சனல் கம்ப்யூட்டர்) அறிமுகம் செய்தது. குறைந்தபட்சம், 27 ஆயிரம் ரூபாய் முதல், விலை கொண்டுள்ள அந்த சிறிய கம்ப்யூட்டரைப் போலவே, "டேட்டாவிண்ட்' என்ற இந்திய தனியார் நிறுவனம், "ஆகாஷ் - 1' என்ற பெயரில், டேப்ளட் பிசியை தயாரித்தது. அதற்கு, துவக்கத்தில், அதிகபட்சம், 3,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.முதற்கட்டமாக, 2011, அக்டோபரில், 20 ஆயிரம் டேப்ளட் பிசிக்கள், ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. மும்பை ஐ.ஐ.டி., மற்றும் சி - டி.ஏ.சி., என்ற மத்திய அரசின் நிறுவனங்கள் இணைந்து, "ஆகாஷ் டேப்ளட் பிசி' தயாரிப்பில் இறங்கின.ஆனாலும், சில தொழில்நுட்ப கோளாறுகளால், "ஆகாஷ் - 1 டேப்ளட் பிசி', மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்படாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி' அறிமுக நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. 2,700 ரூபாய் விலை கொண்ட, "ஆகாஷ் டேப்ளட் பிசி'களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்த, "டேட்டாவிண்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுனில் துலி கூறியதாவது:எங்களிடம் இருந்து, "ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி'யை, மத்திய அரசு, 2,263 ரூபாய்க்கு வாங்குகிறது. அதை, 50 சதவீத விலை குறைப்பில், 1,130 ரூபாய்க்கு, மாணவர்களுக்கு வழங்குகிறது. இந்த விலையையும் குறைத்து, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வழங்கப்படுமானால், இலவசமாகவே, மாணவர்களை ஆகாஷ் சென்றடையும்.இன்னும், நான்கைந்து ஆண்டுகளில், நாட்டில் உள்ள, 22 கோடி உயர்கல்வி மாணவர்களுக்கும், ஆகாஷ் வழங்கப்பட்டுவிடும். நாளை (இன்று), 20 ஆயிரம் டேப்ளட் பிசிகள் மத்திய அரசிடம் வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஆகாஷ் - 2 டேப்ளட் பிசி, லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டது. ஒரு, கிகா ஹெர்ட்ஸ் புராசசர், 512 எம்.பி., ராம், ஏழு அங்குல திரை போன்ற அம்சங்களை கொண்டது.
-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக