வெள்ளி, 16 நவம்பர், 2012

இலங்கைக்கு மின்சாரத்தை இந்தியாவால் வழங்க முடியும்!

இலங்கைக்கு 4000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியாவால் வழங்க முடியும்!

(ி்டி்கு ்டம் ்குடிம்!)

First Published : 16 November 2012 10:45 AM IST
இலங்கைக்கு இந்தியாவால் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் தற்போது உள்ள நிலையில், இலங்கையால் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே பெற்றுக் கொள்ள வசதி உள்ளது. இவ்வாறு கூறினார் அசோகா அபேய்குணவர்த்தனார். இவர் இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசகராகப் பணிபுரிபவர்.
சர்வதேச புவி வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதனைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
இலங்கைத் தீவில் 94 சதவீத பகுதிகளில் மின்சார வசதி தடையின்றிக் கொண்டு செல்ல கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கட்டமைப்புகள், புதிய வளர்ச்சி இவற்றின் தேவைக்குத் தகுந்த அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்கு மரபு சாரா மின்சார உற்பத்தியை இலங்கை நாடவுள்ளது. காற்றாலைகள், சூரியசக்தி மின் உற்பத்தி, கடல் நீர் அலைகளில் இருந்து மின்சார உற்பத்தி இவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வரும் 2020ஆம் வருடத்துக்குள் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி வளத்தை இலங்கையில் மேம்படுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்குத் தேவையான துவக்க கால முதலீடு குறித்து கவனம் கொண்டுள்ளதாகவும், அது மிகப் பெரிய அளவில் இருப்பினும், எரிபொருள் செலவைப் பார்க்கும்போது இந்தத் திட்டத்துக்கு கூடுதல் முதலீடு பெரியதல்ல என்றார் அபய்குணவர்த்தன.
இந்தக் கருத்தரங்கில் உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருந்த அறிஞர்கள் பேசினர். கடந்த 25 வருடங்களில் அணுசக்தி மின்சாரம் வளர்ச்சியடைந்துள்ளது. பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மரபுசார்ந்த புதுப்பிக்கத் தக்க மின்சாரத்தைக் காட்டிலும் அணுசக்தி மின்சார தயாரிப்பு மலிவுதான். ஆனாலும், ஒரு அளவுக்கு மேல் பாதுகாப்பான, உறுதியான வகையில் புதுப்பிக்கத்தக்க மின் தயாரிப்பு இருக்குமானால் அதுவே மலிவானதாக இருக்கும் என்றார் பருவநிலை மன்ற தலைவர் சர் க்ரஹம் வாட்சன்.
யுஎன்டிபி சிறப்பு ஆய்வாளர் பட்சையா காட்டே கூறுகையில், ஆசிய வளர்ச்சி வங்கி சர்வதேச நாடுகளின் மற்றும் மண்டலங்களின் மின் துறை உற்பத்திக்கான ஒத்துழைப்புக்கு உதவுகிறது. இந்தியா, நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகியவை இது விஷயத்தில் தாய்லாந்து, மியான்மர், லாவொஸ் ஆகியவற்றின் வழியைக் கற்றுக் கொண்டு உலகளாவிய ஒத்துழைப்புக்கு உதவ வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக