வெள்ளி, 16 நவம்பர், 2012

தமிழகத் தொடரிப் பயணச் சீட்டுகளில் தமிழ் புறக்கணிப்பு

தமிழக இரயில் பயண ச் சீட்டுகளில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் இயங்கிவரும் ரயில்களுக்கான பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், ரயில்வே நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது.துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது. இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் ரயில்களுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது.

நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்தும், இத்தகைய அவலம் நீடிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழக பயணச்சீட்டுகளில், தமிழிலும் தகவல்கள் இடம்பெற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

- நமது சிறப்பு ச் செயதியாளர், தினமலர் -

3 கருத்துகள்:

  1. //தமிழகத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, ரயில்வே நிலைக்குழு தலைவராக இருந்தும்,இத்தகைய அவலம் நீடிப்பதால், பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். //

    தமிழகத்தை சேர்ந்த டி.ஆர் பாலு இருந்தால் என்ன அவர் பிழைப்பை அவர் பார்க்கப் போகிறார்,

    ஒரு வேளை அவருக்கு மனு கொடுத்துப் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. hi

    only tamilian does not know Hindi In foreign countries if does not know hindi the treatment is very different. tamil should be ignore everywhere.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகத்த்வறான கருத்து. அந்தநத நாடுகளில் அந்தந்த மொழிகளே முதன்மையாக இருக்கும். இந்தி எவ்வாறு முதன்மையாக இருக்கும். தமிழர் வாழும் பகுதிகளில் தமிழே முதன்மையாக இருக்க வேண்டும்.இந்தியத் தூதரகங்கள் மூலம் இந்தியைத் திணிக்கும் மத்திய அரசு தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்களையும் தமிழ் அறிந்தவர்களையும் மட்டுமே தூதர்களாகவும் பிற அதிகாரிகளாகவும் நியமிக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

      நீக்கு