மகனை க் காக்க உயிரை ப் பணயம் வைத்த தாய்
மூணாறு: நீச்சல் தெரியாத தாய், 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த, தன்,
இரண்டு வயது மகனை, உயிரை பணயம் வைத்து, கிணற்றில் குதித்துக்
காப்பாற்றினார்.
கேரளா, இடுக்கி மாவட்டம், தொடுபுழாவைச் சேர்ந்த தம்பதி, ஜோஷி-சுஜா. தன், இரண்டாவது மகன் ஸ்ரீகுட்டனுடன், சகோதரி சுமித்ரா வீட்டிற்கு, சுஜா சென்றார். அங்கு, ஸ்ரீகுட்டனை குளிப்பாட்டத் தயாரானார். மறுத்த சிறுவன், போக்குக்காட்டி ஓடிய போது, சுற்றுச்சுவர் இல்லாத, 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தான்.கிணற்றுக்குள் மகனின் அழுகுரலைக் கேட்ட சுஜா, நீச்சல் தெரியாவிட்டாலும், உள்ளே குதித்தார். மகனை மீட்டு, அங்குள்ள குழாயைப் பிடித்துத் தத்தளித்தார். இவர்களின் அபயக்குரல் கேட்டு, அப்பகுதியினர் மீட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக