மாற்று த் திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களை ப் போற்றும் தென்றல் தொலைக்காட்சி!
பணிகளில் சிறந்தது ஆசிரியர் பணி. அதிலும் காதுகேளாத, வாய்பேச முடியாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களின் சேவை ரொம்பவே பெரிது. இதை உணர்ந்த தென்றல் தொலைக்காட்சி அப்படி ஒரு உயரிய சேவையை
செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது
அளித்து கவுரவப்படுத்த இருக்கிறது. அந்த விருதுக்கு ஹெலன் கில்லெர்
விருதுகள் என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிறந்து குழந்தையிலேயே காதுகேற்கும் திறனையும், வாய்பேசும் திறனையும் இழந்த ஹெலன் கில்லர் என்ற பெண்மணி தனது 24வயதில் பட்டம் பெற்றார். உலகிலேயே இதுபோன்ற குறைகளை வைத்துகொண்டு, படித்து பட்டம் பெற்ற முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவருடைய பெயரிலேயே ஹெலன் கில்லர் விருது வழங்குகிறது. தென்றல் தொலைக்காட்சி.
இந்த ஆண்டு முதல் இந்த விருதினை வழங்கும் தென்றல் தொலைக்காட்சி இனி ஒவ்வொரு ஆண்டும் இதே பெயரில், இதுபோன்ற சிறப்பு குழந்தைகளுக்கும் , அவர்களுக்கு ஆசிரியர் சேவை செய்பவர்களுக்கும விருதினை வழங்க இருக்கிறது. இந்த விருதுடன் அவர்களுக்கு பரிசு தொகையாக பணம் முடிப்பும் வழங்கப்படுகிறது. இந்த முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை, காமராஜர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ஜெகத் ரட்சகன் கலந்துகொள்கிறார். மேலும் திரையுலக நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல் துறை பிரபலங்கள் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். இதை தென்றல் தொலைக்காட்சியின் முதன்மை மேலாளர் செழியன் ராதாகிருஷ்ணன் மற்றும் முதன்மை மார்கெட்டிங் மேலாளார் உதயகுமார் இருவரும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது தென்றல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.
இதுப்பற்றி கூறிய செழியன் ராதாகிருஷ்ணன், "தென்றல் டிவி மற்ற டிவி சேனல்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் அழுகாச்சி சீரியல்களை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். மக்களுடைய வாழ்க்கைக்கும், அவர்களை மேம்படுத்தும் வகையிலும் தென்றல் டிவியின் நிகழ்ச்சிகள் இருக்கும். ஒவ்வொரு மணி நேரமும் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படும். அதே போல தினமும் சமூதாயத்தில் நடைபெறும் குற்றங்களையும், அதன் பின்னணிகளையும் நேரடியாக குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்தே, அந்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்துவோம். இது போன்ற பல புதுமையான நிகழ்ச்சிகளோடும், உடனுக்கு உடன் செய்திகளோடும் தென்றல் டிவி ஒளிபரப்பாகும்." என்றார்.

தென்றல் டிவியின் முதன்மை மார்கெட்டிங்
மேலாளரும், ஹெலன் கில்லர் விருது நிகழ்ச்சியை உருவாகியவருமான உதயகுமார்
பேசும் போது, "இது போன்ற மாற்றுத்திறனாலிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி
கொடுக்கும் ஆசிரியர்களை கெளரவிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக
இருந்தது. தென்றல் டிவி மூலம் அதை சாத்தியப்படுத்த முடிந்தது சந்தோசம்.
இந்த ஆண்டு முதல் இந்த விருதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இனி ஒவ்வொரு
ஆண்டும் இந்த விருது வழங்குவோம். தற்போது இந்த விருதை பெரும் ஆசியர்கள்
சென்னையைச் சேர்ந்த பள்ளியில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். இனி வரும்
ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற ஆசிரியர்களுக்கு விருது
வழங்குவோம். இந்த விருதுக்காக தேர்வு குழு ஒன்றையும் உருவாக்குவோம்."
என்றார்.
இந்த ஆண்டு ஹெலன் கில்லர் விருது 15 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களுடன் 5 சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக