புலிகளால் ஆபத்து என்று எத்தனை வழக்குகள் – வைகோவின் கேள்விகளுக்கு த் தடுமாறிய உளவுத்துறை சுமன்.
இன்று காலை “விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடையாணையை எதிர்த்து சென்னை MRC நகரில் உள்ள ” இமேஜ் ஆடிடோரியத்தில்”(
Image Auditorium) நடைபெற்ற தீர்ப்பாய விசாரணையில் வைகோ அவர்கள்
பங்குபெற்று, உள்நாட்டு உளவுத்துறை இயக்குனர்.திரு.சுமன் அவர்கள் குறுக்கு
விசாரணை செய்ய நீதிபதியிடம் அனுமதி கோரினார், இந்த கோரிக்கையை முதல்
எதிர்த்த அரசு தரப்பு, நீதிபதி அவர்கள் திரு,வைகோ அவர்களின் கோரிக்கையினை
ஏற்று திரு.சுமன் அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தார்… நீதிபதி
அவர்கள் இரு தரப்பினரையும் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக
படித்து விட்டீர்களா என்று கேட்டார், திரு.வைகோ அவர்களும் எதிர்
தரப்பினரும் “ஆம்” என்றனர்…
பிறகு வைகோ அவர்கள் உள்நாட்டு உளவுத்துறை
இயக்குனர்.திரு.சுமன்அவர்களை விசாரிக்க தொடங்கினார்…. அவரிடம் கேட்கப்பட்ட
எல்லா கேள்விகளுக்கும் “இல்லை” என்றும், “என்னிடம் சரியான தகவல்
தெரியவில்லை.அது நீதிபதி அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் உள்ளது”
என்றும் கூறி கொண்டிருந்தார்..( அந்த ஆவணம் இன்னும் எதிர் தரப்பிற்கு
கொடுக்கப்படவில்லை.இறுதி விசாரணையின் போது கொடுக்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது..)
வைகோ அவர்கள் கேட்ட சில கேள்விகளும் அதற்கு திரு.சுமன் அவர்கள் அளித்த பதில்களும்…
வைகோ கேள்வி: கடந்த 24 மாதங்களில், இந்தியாவில் விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ??
சுமன் பதில் : நிறைய வழக்குகள் இருக்கின்றது சரியாக தெரியவில்லை..
வைகோ கேள்வி: விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகள் உங்கள் கணக்கின் படி இந்தியாவில் எத்தனை உள்ளது??
சுமன் பதில் : நிறைய அமைப்புகள் உள்ளது… எண்ணிக்கை ஆவணங்களில் உள்ளது…. எனக்கு நியாபகமில்லை.
வைகோ கேள்வி: (மதிமுக தலைவர் என்ற முறையில் கேட்கிறேன் ) விடுதலை புலிகளின் ஆதரவு அமைப்புகள் பட்டியலில் மதிமுக-வும் உண்டா?
சுமன் பதில் : ஆம்.
வைகோ கேள்வி:
விடுதலைபுலிகள் அமைப்புக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உண்டு என்று
கூறுகிறீர்கள், அதற்க்கு தகுந்த ஆதாரமோ, ஏதேனும் வழக்குகளோ உண்டா??
சுமன் பதில்: அப்படி
எதுவும் இல்லை…. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மாவோயிஸ்டுகளுடன்
தொடர்பு இருப்பதாக கூறும் மத்திய அரசின் வாதத்திற்கு வைகோ எதிர்ப்பு
தெரிவித்தார்.
இவ்வாறு விசாரணை தொடர்ந்தது…. திரு.வைகோ
அவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் திரு.சுமன் அவர்களால் பதில் கூற
முடியவில்லை, இதை கவனித்த நீதிபதி அவர்கள், திரு.சுமன் அவர்களிடம்
தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணகளை முழுமையாக படிக்காமல் வந்துவிட்டது போல
தெரிகிறது என்று கடிந்து கொண்டார்.. விவாதம் இவ்வாறு தொடர்ந்தது ..
நாளையும் நம் தலைவர் அவர்களின் குறுக்கு விசாரணை தொடரும்… இந்த “வரலாற்று சிறப்புமிக்க வழக்கு விசாரணையை” நேரில் காண வாருங்கள்….
தீர்பாயத்தின் விசாரணை நாளை காலை 10.30
மணிக்கு சென்னை MRC நகரில் உள்ள ” இமேஜ் ஆடிடோரியத்தில்”( Image
Auditorium) நடைபெற உள்ளது … இந்த விசாரணையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர்.
வைகோ அவர்கள் பங்கேற்று தமது தரப்பு வாதங்களை எடுத்து வைக்கவுள்ளார்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக