சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் பாதிப்பு என்ன?
மாலை மலர் Chennai ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23,
2:35 PM IST
சென்னை, செப். 23-
சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு சில்லரை வர்த்தகர்களும், விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்காக நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டம் கடந்த 20-ந்தேதி நடைபெற்றது.
ஆனால், மத்திய அரசு பின்வாங்க மறுத்துவிட்டது. அதேசமயம், அன்னிய நேரடி முதலீடு மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விளம்பரம் செய்தது. ஒரு கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அன்னிய நேரடி முதலீட்டில் 30 சதவிகித பொருள்களுக்கான சிறு தொழில்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களால் எடுத்துக்கொள்ளப்படும். இப்படி பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று மத்திய அரசு வக்காலத்து வாங்கி உள்ளது.
ஆனால், அன்னிய நேரடி முதலீட்டில் நன்மைகளைவிட, பாதிப்புகளே அதிகம் என்று வியாபாரிகள் வாதிடுகின்றனர். வியாபாரிகள் தெரிவிக்கும் காரணங்கள் வருமாறு:-
1. இந்தியாவில் 5 கோடி வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.
2. லாப பகிர்வு மற்றும் முதலீட்டு விகிதாச்சாரம் நிர்ணயிக்கப்படவில்லை.
3. விலைகள் அதிகரித்து, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
4. வர்த்தகத்தில் சில்லரை வணிகர்கள் இழப்பை சந்திக்க நேரிடும்.
5. வெளிநாட்டு நிறுவனங்களின் சந்தைகள் வெகு தொலைவில் அமைக்கப்படுவதால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும்.
6. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள் தெளிவுபட குறிப்பிடவில்லை.
7. பணவீக்கம் அதிகரிக்கும்.
8 சில்லரை வர்த்தகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதன் மூலம், இந்தியா மீண்டும் அடிமைப்படும்.
இவ்வாறு வணிகர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக