ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகக் கோப்பை வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்

உலகக் கோப்பை வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்
உலகக் கோப்பை வில்வித்தை: தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்
டோக்கியோ, செப். 23-

உலககோப்பை வில்வித்தை போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய  இந்தியாவின் தீபிகா குமாரி தென் கொரியாவின் உலகின் முதல் நிலை வீரரான போ பே கீ என்பவரை சந்தித்தார்.

ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய தீபிகா குமாரி பின்னர் கடுமையான போட்டிக்கிடையே 4- 6 என்ற புள்ளிகள் கணக்கில் போ பே கீ யிடம் தோல்வியை தழுவினார்.

இப்போட்டியில் போ பே கீக்கு தங்கப்பதக்கமும் இந்தியாவின் தீபிகா குமரிக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டது. மூன்றாவதாக வந்த தென் கொரியாவின் ஹியோஞ்சு சோய் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தீபிகா குமாரி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக