16 ஆண்டுகளாக நீந்துகிறேன்.
நீச்சல் போட்டியில் பரிசுகள் குவித்துக் கொண் டிருக்கும், "நீர்ப் பறவை' ராகவி: சென்னை, எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு, பி.காம்., படிக்கிறேன். அப்பா, சென்னை மாநகராட்சியில மேஸ்திரியா வேலை பார்க்கிறார்; அம்மா இல்லத்தரசி; என் அக்கா ரம்யா, பி.காம்., பைனல் இயர் படிக்கிறாங்க. என்னோட ரெண்டு வயசுல இருந்து, இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட, 16 வருஷமா நீந்திக்கிட்டே இருக்கேன். "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' தான் என்னோட ஸ்பெஷல். நீச்சல்ல, முதன் முதலா பரிசு வாங்கினப்ப, மூணு வருஷம், ஒன்பது மாசம் தான், என்னோட வயசு. சென்னை மாநக ராட்சி நீச்சல் குளத்துல, 6 கி.மீ., தொடர்ந்து நீந்தி, என்னோட அஞ்சு வயசுல, முதல் சாதனையைப் பதிவு செய்தேன். மாவட்டம், மாநிலம் எல்லாம் கடந்து, 2008ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ்ல தேசிய அளவில் முதல் தங்கத்தை வாங்கினேன். தொடர்ந்து மூணு வருஷமா, 200 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவுல, தேசிய அள வுல முதலிடம், என்கிட்ட தான் இருந்துச்சு. கடந்த வருஷம், 100 மீட்டர், "பிரெஸ்ட் ஸ்ட்ரோக்' சீனியர் பிரிவுல, தங்கம் வாங்கினேன். அதே வருஷம், போபால்ல நடந்த, 200 மீட்டர் பிரிவில், 2.46 நிமிடம், 92 மைக் ரோ செகண்ட்ஸ்ல, ரெக்கார்ட் பிரேக் பண்ணி, தேசிய அள வுல புதிய சாதனை படைச்சேன். மாநில அளவிலும் பட்டர்ப்ளை, இண்டிவிஜுவல்னு, ரெண்டு பிரிவுலயும், ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கேன். துபாய்ல சர்வதேசப் போட்டியில கலந்துகிட்டு, உலக அளவுல, 24ம் இடம்; டில்லி, காமன்வெல்த் போட்டியில, 16வது இடம்னு, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கேன். அடுத்த மாசம், புனேவுல சீனியர் நேஷனல் ஸ்விம்மிங் போட்டி நடக்கப் போகுது. எங்க வீட்டு, "கப்-போர்டு' இன்னும் ஒரு தங்கத்தை எதிர்பார்த்து காத்துட்டு இருக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக