வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி

தனியார் தொழிற்பயிற்சிகளில் இலவசமாக த் தொழிற்பயிற்சி பெற கலந்தாய்வு

First Published : 16 Aug 2012 06:12:24 PM IST


சென்னை, ஆக.,16: தமிழ்நாடு முதலமைச்சர் தொiலைநோக்குத் திட்டம் 2023-ன் படி அடுத்த 11 ஆண்டுகளில் 20 மில்லியன் மக்களுக்கு திறன் வளர்க்கும் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற இலக்கினை நிறைவேற்றிடும் வகையில் தமிழகத்திலுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நிரப்பப்படாமல் உள்ள 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ் அரசு தொழிற்பயிற்சி நிலைங்களில் நடக்கும் மாவட்ட கலந்தாய்வின் மூலம் நிரப்பிடவும், அம்மாணவர்களுக்கு பயிற்சியளிக்க ஆகும் செலவை அரசே அந்தந்த தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற இடம் கிடைக்காத மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சேர்ந்து பயன்பெறலாம்.  சென்னை மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் காலியாக அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பயிற்சி இடங்களில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் துணை இயக்குநர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சென்னை-21என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.தங்களது கல்வி மற்றும் சாதி சான்றிதழ் நகலுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்குமாறும், விரைவில் நடைபெற உள்ள மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்று பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் இது குறித்த விபரங்களுக்கு 044 – 25209268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக