சுதந்திர தினத்தைக் கொண்டாடக்கூடாது: அசாம் மக்களுக்கு "உல்பா' எச்சரிக்கை
தினமணி First Published : 12 Aug 2012 01:33:49 AM IST
குவாஹாட்டி, ஆக. 11: சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றால் தாக்குதல்
நடத்தப்படும் என உல்பா தீவிரவாதிகள் அசாம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உல்பா அமைப்பின் செய்திப்பிரிவு துணைச் செயலாளர் அருணுடே அசோம், ஊடகங்களுக்கு
அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது:
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடாமல் புறக்கணித்து, பந்த்துக்கு
ஒத்துழைக்க வேண்டும். சுதந்திரத்தினக் கொண்டாட்டம் நடைபெறும் இடங்களில் உறுதியாகத்
தாக்குதல் நடத்தப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சலுடன் தனி அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப்
பகுதிகளில் சுதந்திர தினப் புறக்கணிப்பில் ஈடுபடவும், நள்ளிரவு 1 மணியில் இருந்து
மாலை 5.30 மணிவரை பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் உல்பா, போடோலாந்து தேசிய ஜனநாயக
முன்னணி, கம்டாபூர் விடுதலை இயக்கம், மணிப்பூர் ஒருங்கிணைப்புக்குழு, திரிபுரா
மக்கள் ஜனநாயக முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, ஹைன் நியூ ட்ரெப் தேசிய
விடுதலைக் குழு ஆகிய 7 தீவிரவாதக்குழுக்களின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் காவல்துறைத் தலைவர் ஜே.என். செüத்ரி கூறியது: உல்பா
தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன்பாகவே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
சிறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் வலிமை பெற்றுள்ளனர்.
அதன்மூலம், சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த முனைகின்றனர்.
ஆனால், அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. குவாஹாட்டி மீது தாக்குதல் நடத்தினால் நாடு முழுதும் பெரிதாகப்
பேசப்படும் என்பதால், அவர்களின் தாக்குல் இலக்கில் குவாஹாட்டியும் உள்ளது.
வெள்ளிக்கிழமை 7 உல்பா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
மேகாலயாவில் உஷார் நிலை:
ஹைன் நியூ ட்ரெப் தேசிய விடுதலைக் குழு (எச்என்எல்சி)வின் 25-வது எழுச்சி
தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ம் தேதி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மோகாலயாவின்
6 மாவட்டங்களிலும், கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேகாலயா மாநில போலீஸôர் கூறியது:
வங்கதேச-மேகாலயா சர்வதேச எல்லைப்பகுதியில், 443கி.மீ. தூரம் வேலி
அமைக்கப்படவில்லை.
அந்தப்பகுதி வழியாக எச்என்எல்சி தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால்,
எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் போலீஸôரும் இணைந்து பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். காசி ஜெயின்டியா மலைப்பகுதியில் 6 மாவட்டங்களில் போலீஸôர்
உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக