திங்கள், 13 ஆகஸ்ட், 2012

டெசோவில் பங்கேற்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு

டெசோவில் பங்கேற்ற ஈழத் தமிழர்களின் நிலைப்பாடு

First Published : 13 Aug 2012 05:56:08 PM IST


சென்னை, ஆக., 13 : தமிழீழ மக்களுக்காக நேற்று நடத்தப்பட்ட டெசோ மாநாட்டில் ஈழத் தமிழர்கள் இருவர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவரான கண்ணன் என்பவர் டெசோ மாநாட்டில் கூறியதாவது, இந்திய அரசு 13வது திருத்தச் சட்டம் மூலமே இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று கூறுவது முட்டாள்தனமானது என்று ஆணித்தரமாகக் கூறினார்.அது ஏன் என்று கனிமொழி கேட்டதற்கு, நிலம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதில் சரியான வகையில் பங்கிடப்படவில்லை. 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு பெற்றால் அது ஈழத் தமிழர்களை சிங்களவர்களிடம் நிரந்தரமாகவே அடிமையாக்கிவிடும் என்றார்.மேலும், தமிழீழத்தில் வாழும் தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனக் குறிப்பிட்ட கண்ணன், தம்மை சிறுபான்மை இனத்தவர்கள் என்று கூற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள்

செவ்விந்தியர்கள் அமெரிக்காவிலும் , அபோர்ஜின்கள் அவுஸ்திரேலியாவிலும் ,திராவிடர்கள் இந்திய உபகண்டத்திலும் எப்படி குறைந்த தொகையில் இருந்தாலும் அந்த மண்ணின் பூர்வ குடிகளோ அப்படியே தான் ஈழத்தமிழ் இனமும் கண்ணன் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக அழகாக எடுத்துரைத்துள்ளார்
By முருகேசு
8/13/2012 6:07:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக