வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

தொண்டைக்குள் புகுந்த அடுகலன் ஊதல்': விரைவு வேண்டா! விழிப்பு தேவை!



தொண்டைக்குள் புகுந்த "குக்கர் விசில்': அவசரத்தால் பெண் பட்ட அவதி
தினமலர்
மதுரை:தொண்டைக்குள், "குக்கர் விசில்' சிக்கிய பெண்ணுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, விசில் வெளியே எடுக்கப்பட்டது.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த, 57 வயது பெண்ணை, வாய்ப்பகுதி அடிபட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த காது, மூக்கு, தொண்டைப் பிரிவு தலைவர் டாக்டர் கண்ணப்பன் கூறியதாவது:இப்பெண், நேற்று காலை, அடுப்பிலிருந்து குக்கரை இறக்கிய உடன், நேரடியாக மூடியைத் திறந்துள்ளார். அதிக அழுத்தத்தால், மூடியில் இருந்து குக்கர் விசில் எகிறி பறந்தது. "விசில்' இப்பெண்ணின் கீழ்த்தாடையை கிழித்து, நான்கு பற்களை உடைத்து, நாக்கின் அடிப்பகுதி வழி, தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. விசில் தொண்டைக்குள் இருந்தது, அவருக்குத் தெரியவில்லை. வாய் முழுதும் ரத்தமாக இருந்த நிலையில், இங்கு அழைத்து வரப்பட்டார்.

கீழ்த்தாடையில் தையல் இட்ட பின், "ஸ்கேன்' செய்து பார்த்தபோது தான், "விசில்' இருந்தது தெரிந்தது. வாய் வழியாக மயக்க மருந்து கொடுக்க முடியாத அளவு காயம் இருந்தது. தொண்டையின் மூச்சுக்குழாய் வழியாக துளையிட்டு மயக்க மருந்து செலுத்தப்பட்டது; பின், வாய் வழியாக விசில் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது நல்ல நிலையில் உள்ளார்.இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக