பட்டதாரி இளைஞர்களுக்கு அரசின் தன்தொழில் பயிற்சி
சென்னை,
ஆக., 16 : பொறியியல், கலை, அறிவியல், டிப்ளமோ படித்த இளைஞர்கள் சுயதொழில்
துவங்கும் வகையில் பயிற்சியை வழங்கி வருகிறது தமிழக அரசின் தொழில்முனைவோர்
மேம்பாட்டு மையம். சுயமாக தொழில் துவங்க ஆர்வமுள்ள
இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளித்து, அனைத்து
ஏற்பாடுகளையும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் செய்து கொடுக்கிறது.இந்த
ஆண்டுக்கான அனைத்து சுயதொழில் பயிற்சி வகுப்புகளும் ஆகஸ்ட் 22ம் தேதி
துவங்குகிறது. இதற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணி நாளை
கிண்டியில் உள்ள தமிழ்நாடு அரசு தொழில்முனோவர் மேம்பாட்டு மையத்தில் நடைபெற
உள்ளது.மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள 22501412/ 8754590965 என்ற தொலைபேசி எண்ணில் ஆர்வி. சுப்ரமணியன் என்பவரை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக