நாகர்.: வீட்டில் கமுக்கத் தொழிற்சாலை: 3 நிமிடத்தில் 1000 திருட்டு குறுந்தகடுகள் உருவாக்கிய பட்டதாரி இளைஞர்
நாகர்கோவில், ஆக.14-
நாகர்கோவில்
புதுக்குடியிருப்பு ஆபிரகாம் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி
சி.டி. கடைகளின் உரிமையாளர்கள் சென்று வந்தனர். இதுபற்றி அக்கம்பக்கத்தினர்
போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த வீட்டை ரகசியமாக
கண்காணித்தபோது வீட்டிற்குள் திருட்டு சி.டி.க்கள் தயாரிப்பது தெரிய
வந்தது.
இதையடுத்து நாகர்கோவில் டி.எஸ்.பி.
பாஸ்கரன், வடசேரி இன்ஸ்பெக்டர் சேகர்சிங், சப்-இன்ஸ் பெக்டர்
ராஜமார்த்தாண்டன் மற்றும் போலீசார் நேற்று அந்த வீட்டுக்குள் அதிரடியாக
புகுந்து சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான கம்ப்ïட்டர் மற்றும் எலக்ட்ரானிக்
கருவிகள் இருந்தன. சி.டி.ரைட்டர்கள், டி.வி.டி. பிளேயர்கள் மற்றும் ஆயிரக்
கணக்கான பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத சி.டி.க்களும் இருந்தன.
இதையடுத்து
வீட்டில் இருந்த வாலிபர் பிபின் (வயது 23) என்பவரை பிடித்து போலீசார்
விசாரித்தனர். அப்போது வீட்டுக்குள் புதுப்படங்களின் திருட்டு சி.டி.க்கள்
மற்றும் ஆபாச பட சி.டி.க்கள் தயாரிப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்
பிபினை கைது செய்தனர்.
அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
இன்டர்நெட்டில்
வெளியாகும் புதுப்படங்களை நவீன கருவிகள் மூலம் டவுன்லோடு செய்து விடுவேன்.
அதனை என்னிடம் இருக்கும் சி.டி. ரைட்டர் மூலம் பல்வேறு சி.டி.க்களில்
பதிவு செய்வேன். 3 நிமிடத்தில் ஆயிரம் படங்களை ஒரே நேரத்தில் பதிவு
செய்யும் வகையில் என்னிடம் கருவிகள் உள்ளன. இப்படி பதிவு செய்யும்
சி.டி.க்களை சிவகாசியில் அச்சடித்து வரும் புதுப்படங்களின் கவர்களில்
போட்டு விற்பனை செய்வேன்.
குமரி மாவட்டம் மற்றும்
நெல்லை, தூத்துக்குடியில் இருந்தும் வியாபாரிகள் என்னிடம் வந்து
சி.டி.க்களை வாங்கி செல்வார்கள். கேரளா விலும் விற்பனை செய்வேன். ஒரு
திருட்டு சி.டி தயாரிக்க ரூ.9.50 செலவாகும். நான் அதனை ரூ.11.50 காசுக்கு
விற்பனை செய்வேன். இதில் எனக்கு நல்ல லாபம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார்
அவரது வீட்டில் இருந்த நவீன உபகரணங்களை பார்த்து மலைத்து போனார்கள். அதில்
திருட்டு சி.டி. பதிவு செய்யும் விதத்தை பிபின் மூலமே செய்து காட்ட
வைத்தனர். மின்னல் வேகத்தில் அவர் சி.டி.க்களை தயா ரித்த விதம் அவர்களை
பிரமிப்பூட்டியது. பி.எஸ்.சி. பட்டதாரியான பிபின் எலக்ட்ரானிக்
என்ஜினீயர்களை விட திறமையாக திருட்டு சி.டி.க்கள் தயாரித்துள்ளார்.
இவருக்கு
தொழிலில் மேலும் சிலர் உதவியாக இருந்துள்ளனர். அவர்கள் யார்ப எங்கெங்கு
சி.டி.க்கள் விற்பனை செய்யப்பட்டுள் ளன என்பது குறித்த விவரங் களை போலீசார்
சேகரித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக