வியாழன், 16 ஆகஸ்ட், 2012

தாய்-மகளுக்குக் கல்பனா சாவ்லா விருது

தாய்-மகளுக்கு க் கல்பனா சாவ்லா விருது


Last Updated : 16 Aug 2012 03:26:45 AM IST

கல்பனா சாவ்லா விருதை ராஜலட்சுமி, அவரது மகள் சிவரஞ்சனிக்கு வழங்குகிறார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை, ஆக. 15: கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வென்ற, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகளுக்கு வீரதீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வழங்கினார்.நாட்டின் 66-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார்.கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (50). அவருடைய மனைவி ராஜலட்சுமி (41), மகள் சிவரஞ்சனி. வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது கொள்ளையர்கள் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து இருவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றனர்.ஆனால், இருவரும் போராடி கொள்ளையர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இரண்டு பெண்களின் இந்த வீரதீரச் செயலைப் பாராட்டி அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சுதந்திர தின விழா மேடையில் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 10 கிராம் தங்கப் பதக்கம் இருவருக்கும் அணிவிக்கப்பட்டது. மேலும் ரூ.5 லட்சம் காசோலையும்அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக