வியாழன், 16 ஆகஸ்ட், 2012

சொல்கிறார்கள்


 சொல்கிறார்கள் - தினமலர்


கார்ப்பரேட் பாணி உதவியது! பூர்விகா மொபைல்சு நிறுவனர் உயுவராசு: ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை விட்டபோது அடுத்து என்ன என்று தெரியாமல் ஒன்றரை ஆண்டுக்காலம் போனது. திருமணம் முடித்திருந்த நேரம். ஏதாவது வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம். செய்தால், சொந்தத் தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த நேரத்தில் என் உறவினர் ஒருவர், பழைய கைப்பேசிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். “கைப்பேசி விற்பனையில் இறங்கினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அவர்தான் எனக்கு யோசனை சொன்னார். கைப்பேசிக்கு உண்மையிலேயே எதிர்காலம் இருக்கிறதா என்பதை நானே நேரடியாகத் தெரிந்து கொள்ளப் பல ஊர்களுக்கும் சென்றேன்; கைப்பேசிக்கு இருக்கும் சந்தையைப் புரிந்து கொண்டேன்; உடனே கைப்பேசி விற்பனையில் இறங்கி விட்டேன். கடன் வாங்கித்தான் முதல் கடை திறந்தேன். ஒரே ஓர் அலமாரி, ஆறு கைப்பேசிகள் மட்டுமே விற்பனைக்கு வைத்தேன். முதல் கைப்பேசியை விற்கவே ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. சோர்வில்லாமல் உழைக்க வேண்டி இருந்தது. பின், சிறிது சிறிதாகத் தொழில் முன்னேறியது. வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அவர்களின் முதலாளியைப் பார்ப்பதேயில்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். இந்தக் கார்ப்பரேட்டு உளப்பபான்மைதான் எனக்கான திருப்புமுனையைத் தந்தது. முதலில் நம்பகமான ஊழியர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நலன் மீது நமக்கு அக்கறை இருந்தால் அவர்கள் நமக்கு உண்மையாக இருப்பார்கள். என்னோடு முதலில் வேலை பார்த்த ஐந்து பேரை என் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தினேன். அந்த ஐந்து பேர் 50 பேராக மாறினர். இன்று என் நிறுவனத்தில், வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை பல நூறாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் நான் திருப்புமுனைகளை நோக்கி ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக