சிறிதாவோ பெரிதாகவோ பராவாயில்லை மனித மனம் ஒவ்வொன்றும் பாராட்டுக்காக
ஏங்குகிறது, அதை வஞ்சனையில்லாமல் செய்பவர்களில் முதலில் நிற்பவர்கள்
பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள்தான். ஆனால் அவர்களது செயல்களுக்கு
அரும்பாடுபட்டு எடுத்த படங்களுக்கு ஒரு அங்கீகாரம், ஒரு பாராட்டு கிடைப்பது
என்பது அரிதிலும் அரிதே.
இந்த நிலையில் பெங்களூருவில் மட்டும் ஒரு ஆறுதல். அங்குள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு வருடமும் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு (19/8/12) தங்களது புகைப்படங்களை கொண்டு கண்காட்சி நடத்தி முதல் அமைச்சர் துவங்கி பொதுமக்கள் வரை அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக புகைப்பட ஆர்வலர்களின் எதிர்பார்ப்பையும், பாராட்டையும் பெற்றுள்ள இந்த இரண்டு நாள் புகைப்பட கண்காட்சி வருகின்ற 18ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது.
நாட்டையும், மக்களையும் உலுக்கியெடுத்த பல பதிவுகள் உள்பட நூற்றுக்கணக்கான படங்கள் இடம் பெறவுள்ளது. இடம்: பெங்களூரு குமரகிருபா ரோட்டில் உள்ள சித்ரா கலா பரிஷத் கலையரங்கம். நேரம் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிவரை. அனுமதி இலவசம்.
வாசகர்களே இந்த கண்காட்சியில் இடம் பெறப்போகும் படங்களில் சிலவற்றை பார்க்க "போட்டோ காலரி' என்ற சிவப்பு பட்டை பகுதியை கிளிக் செய்யவும். நன்றி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக