வாகை தர்மாவின் பஞ்சபூத ஒவியங்கள்- எல்.முருகராசு
சென்னையில் பல ஒவியர்கள் சங்கமித்த ஒவிய பட்டரை அது. மூத்த ஒவியர்கள்
பலர் தங்கள் கைவண்ணத்தை காட்டிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வரைந்த
ஒவியங்களை பார்த்துக்கொண்டே போனபோது ஓரு சில ஒவியங்கள் கண்ணையும்,
கருத்தையும் கவர்ந்தது, அதில் வாகை தர்மா என்று அழைக்கப்படும்
எஸ்.டி.தர்மலிங்கத்தின் ஒவியமும் ஓன்று.
வயது முப்பதைக்கூட
இன்னும் தொடவில்லை, ஆனால் அறுபது வயதைத் தொட்ட ஒவியர்களின் அனுபவங்களையும்,
நுட்பத்தையும் அவரது ஒவியம் தொட்டிருந்தது. அதற்கு காரணம் பலர் ஒவியம்
என்பதை பாடமாக கற்றுக் கொண்டபோது இவர் மட்டுமே அதுதான் வாழ்க்கை என்று
கற்றுக்கொண்டார், தண்ணீரை மட்டுமே குடித்து வாழ்ந்த சூழ்நிலையிலும் கூட
ஒவியம் கற்பதை மறந்தாரில்லை. இதன் காரணமாக மெல்ல, மெல்ல வளர்ந்து, உயர்ந்த
இன்று பல்வேறு விருதுகளுக்கும், பொறுப்புகளுக்கும் சொந்தக்காரராக
இருக்கிறார், தற்போது சென்னை சூளைமேடு, பஜனை கோயில் தெருவில் ஸ்ரீதர்ஷினி
கலைக்கூடம் நடத்தி மூன்று வயது முதல் 73 வயது வரையிலானவர்களுக்கு ஒவியம்
சொல்லி கொடுத்து வருகிறார்.
முறைப்படி ஒவியத்தின் எல்லா
பரிணாமத்தை படித்தது போல முறைப்படியே இவரது ஒவியப் பள்ளியிலும் பாடம்
நடத்தப்படுகிறது. ஒரு பக்கம் நிறைய குழந்தை ஒவியர்களை உருவாக்கிக் கொண்டே,
இன்னொரு பக்கம் காலத்திற்கும் மறையாத காவியங்களாக தனது ஒவியங்களை
தீட்டிக்கொண்டு இருக்கிறார்.
ஒவியத்தின் பல தளங்களில் பயணம்
செய்தவர் தற்போது நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற பஞ்ச
பூதங்கள் பற்றிய ஒவியங்கள் வரைவதில் ஈடுபாடு கொண்டுள்ளார். இதன் காரணமாக
நிறைய ஒவிய கண்காட்சிகள் தனியாகவும், கூட்டாகவும் நடத்தி வருகிறார்.
மனவளர்ச்சி
குறைந்த குழந்தைகளுக்கு ஒவிய பயிற்சி கொடுத்தால் அவர்களது குறை தீர்வதற்கு
வாய்ப்புண்டு என்பதால் அதற்கான முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ள இந்த
இளம் ஒவியரின் ஒவியங்கள் இந்த வார பொக்கிஷம் பகுதியை அலங்கரிக்கிறது.
இவரது போன் எண்:9941369809.
GREAT SERVICE TO TAMIL WORLD..PLEASE CONTINUE!
பதிலளிநீக்கு