செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இலங்கை த் தமிழர்களை க் கொலை செய்ய க் காரணமானவர்களுக்கு த் தி.மு.க. உடந்தை: விசயகாந்து பேச்சு

இலங்கை  த் தமிழர்களை  க் கொலை செய்ய க் காரணமானவர்களுக்கு த்  தி.மு.க. உடந்தை: விசயகாந்து பேச்சு
இலங்கை தமிழர்களை கொலை செய்ய காரணமானர்களுக்கு தி.மு.க. உடந்தை: விஜயகாந்த் பேச்சு
அரியலூர், ஆக. 14-
 
அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 159 துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள் வழங் கும் நிகழ்ச்சி அரியலூரில் நடந்தது. துப்புரவு தொழிலா ளர்களுக்கு உபகரணங்களை தே.மு.தி.க. தலைவரும், எதிர் கட்சி தலைவருமான விஜய காந்த் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
உடன்குடியில் மின் நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இன்று ஒரு செங்கல் கூட நட்டு வைக்கவில்லை. தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள் தூர்வா ரப்படாமல் சீர்கெட்டு கிடக்கிறது.
 
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கவுரவம் பார்க்காமல் காவிரி நீருக்காக கர்நாடக முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் இன்று ஜெயலலிதா கவுரவம் பார்க்கிறார். என் மீது தொடரப்படும் வழக்குகளை கண்டு பயப்படபோவது இல்லை.
 
தே.மு.தி.க. நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. தே.மு.தி.க. மக்களுக்கு செய்து வரும் உதவிகளை போல அ.தி.மு. க.வும் மக்களுக்கு உதவி செய்யட்டும்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளில் இந்த மாவட்ட மக்களுக்கே முன்னுரிமை அளித்து வேலை வழங்க வேண்டும்.
 
ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய தொகை அளிக்கப்பட வேண்டும். அரசியலுக்கு வந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைத்தது இல்லை. தற்போது தி.மு.க. போலீஸ், அ.தி.மு.க. போலீஸ் என்ற நிலை உள்ளது. இது மாறவேண்டும். இலங்கையில் தமிழர்களை கொலை செய்ய காரணமாக இருந்த வர்களுக்கு தி.மு.க.வினர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
 
விஜயகாந்த்தால் உதவி பெற்ற இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். டெல்டா மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
 
மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் நடை பெற்ற சோதனையில் பல் வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை தமிழக அமைச்சர்கள் யாரும் அங்கு சென்று ஆய்வு நடத்தவில்லை. எனவே கிரானைட் குவாரிகள் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
 
2016-ம் ஆண்டு தே.மு. தி.க. ஆட்சி அமைய போவது உறுதி. அப்போது ஏற்கனவே கூறியது போல் ரேஷன் பொருட்கள் எடை குறையாமல் வீடு தேடிவரும். படிக்காத இளைஞர்களுக்கும் வேலை வழங்கப்படும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக