வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இளைஞர்களுடன் போட்டி போட முடிந்தால் வாகை சூடலாம்!










இளைஞர்களுடன் போட்டி போட முடிந்தால் ஜெயிக்கலாம்!
மனித வளத் துறை ஆலோசகர் கெம்பா ஆர்.கார்த்திகேயன்: நாற்பது வயதுக்கு மேலே வேலை தேடுவது, இப்போது ஒரு, "டிரெண்ட்' ஆகவே இருக்கிறது. இதற்கு காரணங்கள் பல. சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பில் சிக்கி வேலை இழந்தவர்கள், வி.ஆர்.எஸ்., வாங்கியவர்கள், ஆசைப்பட்ட துறைக்குப் போக நினைத்து, அது நிறைவேறாமல் போனவர்கள், நேரத்தைப் பயனுள்ளதாக செலவழிக்க நினைக்கும் பெண்கள் என, பலரும் வேலை தேடி வருகின்றனர்.
வேலை போய்விடும் என்பதை நினைத்து பயப்படுபவர்கள், பெரும்பாலும், அறுபதுகளில் பிறந்தவர்கள்; ஐ.டி., துறை வருவதற்கு முன்பே, வேலைக்குச் சென்றவர்கள். இவர்கள் பெரும்பாலும், உற்பத்தி துறையிலேயே வேலைக்கு சேர்ந்திருப்பர்; அன்று உற்பத்தி செய்த பல பொருட்கள், இன்று மார்க்கெட்டில் இல்லை.சர்வீஸ் துறையில், இது மாதிரியானவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கான தகுதிகளை இவர்கள் வளர்த்துக் கொண்டாலே போதும். இங்கு தகுதி என்பது, திறமை தான். தவிர, எந்த வேலையையும், ஆர்வத்தோடு கற்று செய்யும், உற்சாகமான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். தன்னை விட வயதில் சிறியவர்களிடம், பணிவாகப் பேசிப் பழகி, வேலை பார்க்க கற்றுக் கொண்டாலே போதும்; ஜெயித்து விடலாம்.
இளைஞர்கள், ஆசைப்பட்டதை அடைய வேண்டும் என்ற வெறியில், நிறைய உழைப்பர். அவர்களுடன் உங் களால் போட்டி போட முடியுமா என்பதை, முதலில் உறுதி செய்து கொண்ட பிறகு, களத்தில் இறங்குவது புத்திசாலித்தனம். இருபது ஆண்டுகளுக்கு வேலை பார்த்து விட்டு, அடிப்படைத் தேவைகள் நிறைவேறியதும், "இனி நமக்குப் பிடித்தபடி உழைப்போம்' என நினைப்பவர்கள், பாட்டு பாடுவது, சமூக சேவை செய்வது, ஆசிரியர் தொழில் பார்ப்பது, ஓவியம் வரைவது என, வேலை செய்ய நினைக்கின்றனர். இந்தத் திறமைகளை வைத்து, வேலை தேடுவதை விட, மற்றவர்களுக்குப் பயிற்சி அளிப்பது சிறந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக