தமிழீழமே தீர்வு: இராமதாசு
தினமணி First Published : 12 Aug 2012 05:37:45 PM IST
சென்னை, ஆக.12: இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.எனினும், இலங்கையுடனான இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் மாநாட்டில் எதையும் பேசக்கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இதன்
மூலம் ஈழம் பற்றி பேச மறைமுக தடை விதித்துள்ளது. இப்படித் தடை
விதிப்பதும், மாநாடு நடத்த மாநில அரசு அனுமதி மறுப்பதும் ஜனநாயக உரிமையைப்
பறிக்கும் செயலாகும்இலங்கையில் சிங்களர்களுடன் தமிழர்கள் இணைந்து
வாழ்வது என்பது நடைமுறை சாத்தியமே இல்லாத செயலாகும். இந்திரா காந்தி
இருந்திருந்தால் ஈழத் தமிழர்களுக்கு எப்போதோ தனி நாடு கிடைத்திருக்கும்.ஈழத் தமிழர் நலனுக்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும்.இலங்கை பிரச்னைக்கு தமிழீழமே தீர்வாக இருக்கும். தமிழீழம் அமைப்பதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக