டெசோ விற்கு பதிலாக என்ன பெயர் வைத்து நடத்த ப் போகிறார்?
அப்படியானால் டெசோ (thamizh eezha supporters organisation ) டெசோ விற்கு பதிலாக என்ன பெயர் வைத்து நடத்த போகிறார்?
மீதமுள்ள ஈழ தமிழர் பாதுகாப்பதற்காக மாநாடு நடத்துவதாக அறிந்தேன் .அதாவது Remainig Eezha Thamizhs Save OrganisationRETSO என்ற புது பெயரிலா ?
மீதமுள்ளோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்து …எங்கோ ஒரு சில தமிழர்கள் உள்ளார்கள் அவர்களை பாதுகாக்கஎன்னைவிட்டால் வேறு ஆழ் இல்லை என அந்த நேரம் ஒரு மாநாடு நடத்துவார் அரிய ஈழ தமிழர் பாதுகாப்பு மாநாடு அதாவது ரெட்சோ RETSO Rare Eezha Thamizhs Save Organisation
கருணாநிதியின் துரோகத்தின் விழைவு முள்ளிவாய்க்கால் படுகொலையோடு நின்றுவிடவில்லை சிங்களனால் இன்றைய நிலையில் தினமும் 90 பேர்அளவில் செத்து மடிகின்றனர்,அதில் கொல்லப்படுபவர்கள் அதிகம் ,தினமும் 100 க்கு குறைவில்லாது எம் சகோதர சகோதரிகள்கற்பழிக்கப்படுகின்றனர் அதை கண்டும் காணாது விட்டுகொண்டிருப்பவர் சமிபத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை வைத்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினார் எதற்க்காக என எல்லோருக்கும் தெரியும்
இப்படிப்பட்ட கொடுமைகளை தொடர்ந்து செய்யும் சிங்களனுக்கு ஆதரவாக கருணாநிதி இப்போதும் செயல்படும் முகமாக அவரின் பேசுக்கள்அமைகின்றன ,உணர்த்துகின்றன இனி சிங்களனுடன் ஆய்தம் ஏந்தி போரிட்டு வெல்ல முடியாது. தமிழீழம் கோரிக்கை கிடையாது . புலிகள் மீதானதடை குறித்து கேட்டால் பதில் கூராதிருப்பது .இந்த இரண்டு நாட்களுக்கு முன்புவரை தனித் தமிழீழம் என்றவர் இப்படி மாறி பேசுவதானால் நாம் அவரை பார்த்து கேட்கும் கேள்விகள்
1 இந்தியாவின் நலன் கெட கூடாதென நினைத்து செயல் படுகிறீர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதைபற்றி ஏன் யோசிக்கவில்லை பழுத்த அரசியல்வாதி ஏன் புரட்டு அரசியல்வதியானிர்கள்? 2 . ராணுவ கட்டமைப்பு கொண்ட நாட்டை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போரிட்டு வெல்ல முடியாதென கூறுகிறீர்கள் ஒக்கனேகலில் எல்லைதாண்டி வந்த எடியுரப்பாவை கூட எதிர்க்க துணிவற்ற நீங்கள் இப்படித்தான் பேசுவீர் .ஒரு வீரனுக்கு அழகு தன்னை போல பலம் போருந்தியவனுடனோ அல்லது அவனை விட மிக்க பலமுள்ளவனுடனோ மோதுவது.அப்படி இந்தியத்துடன் மோத சிறிதும் விரும்பாத நீங்கள் சுண்டெலிகளை நசுக்குவது போல் ஈழத்திற்காக தமிழகத்தில் போராடியவர்களை நசுக்கி மக்களை படுகொலை செய்த இந்தியத்தை காப்பாற்றினீர் இது போன்று நடக்க ஒரு சாணக்கியமும் தேவையில்லை பணம் பெற்றுக்கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களை நசுக்கும் பணியை இங்கு லட்சம் பேர் செய்கிறார்கள் . விடுதலை புலிகள் சிங்கள ராணுவத்துடன் போர் மட்டும் செய்யவில்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியில் அரசாட்சி புரிந்து வந்தார்கள் .சிங்கள படையால் புலிகளை ஒன்றுமே செய்ய முடியாது தவியாய் தவித்ததை உலகம் அறியும். உங்கள் பெயர் கொண்ட துரோகியை துணைக்கு வைத்தும் 20 நாட்டு கூட்டு படைகளை துணைக்கு அழைத்துதான் புலிகளை சிங்களவன் விழ்த்தினான் என்பதை ஏன் மறந்தீர்கள்? 3. ஈழத்திற்காக நாங்களும் 30 ஆண்டுகளாக போராடுகிறோம் என்கிறீர்கள் என்ன முடிவு கண்டீர்கள் வெற்றியா தோல்வியா? 4 . ராஜபக்சே தமிழர்களை கொன்றது அவன் இனத்தை காப்பாற்ற…. நீங்கள் தமிழர்களை கொல்ல விட்டு வேடிக்கை பார்த்தது இந்தியத்தை காப்பாற்றவா இல்லை உங்கள் குடும்பத்தை காப்பாற்றவா ? நீங்கள் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்திருந்தாலே இன்னும் அங்கு போர் இன்னும் நடந்து கொண்டிருக்குமே தவிர இன்றைய நிலை வந்திருக்காது
கருணாநிதி இப்படி ஏன் நடக்கிறார்?
அரசியல் செய்து பணம் பண்ண இந்திய காங்கிரஸ் ஆதரவு தேவை தமிழாகளிடம் துரோகி பட்டம் ஒழிய ஏதாவது அவ்வப்போது நாடகங்கள் நடத்த வேண்டும்
அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும் ஆம் அன்று மே 13 1985 இல் எம் ஜி ஆருக்கு எதிராக அரசியல் நடத்த-அரசியலுக்காக டெசோ வை நடத்தினார் .டேசொவை ஏற்படுத்த அய்யா பழ நெடுமாறன் தேவைபட்டார். பின் கலைக்கும்போது அவரை கேட்காது கலைத்தார்
அப்போதும் டேசொவை இந்திய ஆதரிக்கவில்லை ஈழ தமிழ் தலைவர்களை தமிழ் நாட்டைவிட்டு அனுப்ப உத்தரவிட்டது அதனை எதிர்த்து புதுதில்லிசென்று போராடினர் பலர் . அய்யா பழ நெடுமாறன் அவர்கள் தன் உயிரை பணையம் வைத்து ஈழத்திற்கு சென்று அங்கு தமிழர்கள் படும் துயரத்தைபடமாக்கி அதை ராஜிவிடம் காண்பிக்க அனுமதி கேட்டார். கிடைக்கவில்லை
கட்ச தீவை தன் சுய நல அரசியலுக்கு விட்டு கொடுத்ததன் விழைவு பின்னாளில் பல மீனவர்கள் தங்கள் உயிரை காவுகொடுக்க வேண்டியதாயிற்று.தன்னால் எதையும் மீட்கமுடியாதென தெரிந்தும் சும்மா இருக்காது தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லைதாண்டி செல்வதால்தான் சிங்களர்சுடுகிறார்கள் என்றார்
உண்ணாவிரதத்தை கைவிட்டவர் போர் நிற்கவில்லையே என்றால்….மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்றார் .
இலங்கை பிரச்சனையில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதை தன் வாயால்
“ மலையிலிருந்து வெண்ணை உருண்டு கிழே வருகிறது.அதை எடுக்கலாம் என்றால் எனக்கு இரண்டு கையும் இல்லை நடந்து செல்ல காலும் இல்லைசரி யாரையாவது அழைத்து எடுக்க சொல்லலாமென்றால் வாயும் ஊமை . கை காலிலில்லாத முடவனாய் வாய் பேசமுடியாத ஊமையாய் ஒன்றுமேசெய்யமுடியாதவனாய் இருக்கிறேன் ”
இப்படி தமிழகத்திற்கு முதல்வராக இருக்கும்போது வாய்கூசாது சொன்ன கருணாநிதி ஈழம் அமைத்து தருவார் என நம்பி அவர்பின்னால் போவதைநினைத்து நினைத்து கருணாநிதி சிரிப்போ சிரிப்பென சிரித்து வாழ்வார் …தமிழர்கள் கதி ………………….?
.தமிழர்களே தமிழகத்திற்கு ஒரே ஒரு அரசியல் மட்டுமே தேவை தமிழ் இனத்திற்காக தன்னுயிரை தந்த விடுதலை புலிகள் ஆதரவு அரசியல் நாம் இழந்ததை எண்ண முடியாது இழந்ததை பெற தியாக சீலர்களின் வழி அரசியல் தேவை
ஆயுதம் ஏந்தி போராடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லையென சொல்லி சும்மா இருந்துவிட முடியாது இங்கு நாம் அவர்களிடமிருந்து எடுத்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது தியாக மனப்பான்மை,ஒழுக்கம், நேர்மை ,கொண்ட கொழ்கையில் உறுதி .தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் இல்லாத பெரும் நற்குணங்களை அவர்களிடமிருந்து எடுத்துகொள்வோம் இன நலன் சார்ந்த தியாக மனப்பான்மையோடு கூடிய அரசியல் அந்த தியாகம் நிறைந்த தெழிவான சிந்தனையோடு திட்டமிட்டு முன்னேறினால் ஈழம் நாளை நம் கையில். புலி ஆதரவை எவர் எதிர்க்கிறார்களோ அது திருட்டுத்தனம் நிறைந்ததாகவே இருக்கும். தியாகம் செய்தவர்கள் வழிநின்று நம் இனத்திற்குபோராட போகிறோமா? இல்லையா? என்பதே நம் ஒவ்வொருவர் முன்னும் நிற்கும் நிற்க வேண்டிய கேள்வி
ஈழம் அமைய கூடாதென நினைக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிப்போம்
ஈழம்தான் தீர்வு என்று சொல்லும் அரசியல் கட்சிகள் ஈழத்தை எதிர்ப்பவர்களுடம் எந்த வகையிலும் கூட்டு சேர கூடாது
அப்படி கூட்டு சேர எந்த வித காரணத்தை கூறினாலும் அது ஈழ கோரிக்கையை வலுவிழக்க உதவுமே தவிர கூர்மைபடுத்த ஒருபோதும் உதவாது
தமிழர் முன்னேற்றக்கழகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக