வியாழன், 19 ஜூலை, 2012

டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை க் கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு த் தமிழருவி மணியன் கண்டனம்

டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை க் கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு த் தமிழருவி மணியன் கண்டனம்
டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு  தமிழருவி மணியன் கண்டனம்
சென்னை, ஜூலை. 17-
 
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழ் ஈழக் கோரிக்கை இப்போதைக்கு இல்லை என்றும் தனி ஈழத்துக்கான போராட்டமோ, கிளர்ச்சிகளோ நடத்தும் எண்ணம் இல்லை என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ அளிக்கவில்லை. ஈழப் பிரச்சினையில் எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்காத கருணாநிதி இப்போதும் அப்படியே நடந்துக் கொண்டிருக்கிறார்.
 
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு (டெசோ) என்ற செத்துப்போன அமைப்பிற்கு காலாவதியான காலத்தில் உயிர்கொடுக்க முயன்று தற்போது, ஈழக் கோரிக்கை எதையும் மாநாட்டில் தீர்மானமாக வைக்கப்போவது இல்லை என்று கூறி ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் தமது துரோக முகத்தை வெளிக்காட்டி உள்ளார் கருணாநிதி.
 
ஈழம் மலர வேண்டும் என்று பேசுவாராம், தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசையோ, உலக நாடுகளையோ வலியுறுத்த மாட்டாராம். ஈழம் மலருவதற்கு இன்னமும் அவகாசம் தேவையாம். எப்போது, எஞ்சிய தமிழர்களையும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொன்று தீர்த்த பின்னரா? என்பதை கருணாநிதிதான் உலகிற்கு விளக்க வேண்டும்.
 
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தம்மை சந்தித்து அரசியல் பேசவில்லை என்றால், இரண்டு பேரும் சேர்ந்து என்ன பேசினார்கள்? சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை எப்படி மடை மாற்றம் செய்யலாம் என்பது குறித்தா? அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தா? என்பதை விளக்க வேண்டிய கடமை கருணாநிதிக்கு உண்டு.
 
ஐந்து முறை முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி தமது பதவிக்காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. செயல்பட்டதும் இல்லை. இப்போது உலகத்தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும், மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள், பேச்சுகள், பேட்டிகள் கொடுத்து தம்மை மிகச்சிறந்த குழப்பவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
 
காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் துரோகத்தால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ, ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
வாசகர்களின் கருத்து
Wednesday, July 18,2012 08:23 PM, விஜயன் m said: 0 0
திரு கருணாநிதிக்கு மக்களின் கவலையைவிட அவர் மக்களின் கவலை தான் தெரிகிறது
Wednesday, July 18,2012 08:21 PM, ராஜன் r said: 0 0
குடியரசு தலைவர் பதவிக்கு இலங்கை தமிழர்களின் வாழ்கையை அழித்த பிரணாப் முகர்ஜியின் வெற்றிக்கு வெற்றிகரமாக ஆதரவு தந்தவர் எப்படி தமிழ் ஈழ கோரிக்கையை தேசோ மாநாட்டில் கொண்டுவருவார்.. கனவு காணுங்கள்
Tuesday, July 17,2012 07:14 PM, ஜெய் said: 3 17
எந்த ஒரு கருத்தையுமே யார் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம் அப்போதுதான் அந்த கருத்து எடுபடும் அது எவ்வளவு முக்கியமான கருத்தாக இருந்தாலும் சரி எதையுமே சொல்பவர்கள் சொன்னால்தான் கருத்தில் கொள்ளப்படும் இது உலக நியதி!....... காரணம் அது சொல்லப்படும் விதம்...... அன்று ஆனந்த விகடனில் படித்த திரைப்பட விமர்சனம் ஒன்று ஞாபகம் வருகிறது........ "என் தமிழ் என் மக்கள்" என்று வாலிப கவிஞர் வாலி கைவண்ணத்தில் நல்ல பாடல் கதை வசனத்துடன் தன் கடைசி காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளி வந்தது! படம் படு தோல்வி! அவரின் சொந்த கட்சியும் காணாமல் போய்விட்டது! இத்தனை காலம் தேசிய கட்சியில் "ஜெய் ஹிந்த் (என்னை அல்ல) ஜெய் ஹிந்த்" என்று சிம்ம குரலில் கர்ச்சனை செய்து விட்டு கடைசி காலத்தில் வந்து....... "என் தமிழ் என் மக்கள்" என்று சொன்னால் எப்படி தமிழன் ஏற்று கொள்வான்? கசப்பு மருந்து உடம்புக்கு நல்லதுதான் ஆனால் அதை அதே கசப்புடன் கொடுத்தால் எந்த குழந்தையும் சாப்பிடாது! பெரியவர்களே சாப்பிட தயங்குவார்கள்! அதுக்குதான் "தேனுடன்" கலந்து கொடுப்பார்கள். புரட்சி தலைவர் இதைதான் செய்தார். நல்ல கருத்தான விஷயங்களை இனிய இசை - வீர மிக்க சண்டை - கிளு கிளுப்பான காதல் - வாய் விட்டு சிரிக்கும் நகைசுவை காட்சிகளுடன் கலந்து பாடல்களாக படங்களாக படங்களில் தலைப்புகளாக மக்கள் திலகம் தந்து இருந்ததினால்....... அவர் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது! 1980 களில் தமிழன் சுரணையோடு இருந்ததற்கு காரணம் அன்று ஆட்சியில் இருந்தது புரட்சி தலைவர்! 2009 இல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் உள்ள 7 கோடி தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை! இப்படிப்பட்ட இன படுகொலையை தடுத்து நிறுத்தி இருந்திருக்க கூடிய ஒரே சக்தி அமரர் எம்.ஜி.ஆர். மட்டுமே என்று உலகில் உள்ள ஒவ்வொரு இன உணர்வு உள்ள தமிழனுக்கும் தெரியும்.! ஆரம்பத்தில் இருந்து மக்கள் திலகம் செய்த உதவிகள் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல....... அப்பப்பா அவைகளை ஏட்டில் சொல்லி விட முடியாது! சோனியா சீனா ராணுவம் ராஜபக்ஷே ரஷ்யா இதெல்லாம் புரட்சி தலைவருக்கு சப்ப மேட்டர்மா........ வாத்தியார் பாணியே தனி! புரட்சி தலைவர் ஒன்னும் பெருந்தலைவர் காமராசர் மாதிரி வெறும் நல்லவர் மட்டும் இல்லை கேரளா இந்தியாவில்தானே இருக்கிறது அப்படின்னு தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகளுக்கு தூக்கி கொடுப்பதற்கு! நல்லவருக்கு நல்லவர் கெட்டவனுக்கு கெட்டவன்! எதை எப்படி செய்யணுமோ அப்படி செய்து யாரை எங்கு அடிக்கணுமே அங்கு அடித்து லட்சகணக்கான தமிழர்கள் உயிர்களை காப்பாற்றி இருந்திருப்பார்....... களத்தில் தமிழன் என்றால் யார் என்று உலகை திரும்பி பார்க்க வைத்த முப்படை வைத்து போராடிய முதல் தமிழன் மாவீரன் தளபதி பிரபாகரன், அரியணையில் புரட்சி தலைவர்....... எப்படி இந்த கூட்டணி........ கேட்கவும் வேண்டுமா? சும்மா அதிர்து இல்லே! ஒரே வார்த்தையில் சொன்னால் இலங்கை தமிழர் விஷயத்தில் சரித்திரம் மாற்றி எழுத பட்டு இருந்து இருக்கும்! இன்று தமிழ் நாட்டில் பேரறிஞர் மாதிரி புரட்சி தலைவர் மாதிரி மாவீரன் பிரபாகரன் மாதிரி மக்களை வசீகரிக்கும் தன் ஆளுமையில் அரவணைப்பில் வைத்திருக்கும் தலைவர்கள் இல்லை. ஆகையால் இலங்கை தமிழ் மக்களுக்காக உண்மையாக குரல் கொடுக்கும் பழ நெடுமாறன், வைகோ, சீமான், தமிழருவி மணியன், மே 17 இயக்கம் திருமுருகன் போன்றோர்கள் இணைந்து செயல் பட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேண்டுகோள்! இதில் கலைஞர் கருணாநிதி, மருத்துவர் ராமதாஸ், சிறுத்தை திருமாவளவன் போன்றோரை நான் ஏன் குறிப்பிடவில்லை என்று இதை படிக்கும் அனைவருக்கும் தெரியும்....... நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்........
On Wednesday, July 18,2012 07:20 PM, kalaiselvan.j said : 1 2
எல்லாம் சரி. மே 21 1991 முன் அதற்கு பின் என்று ஈழ போராட்டத்துக்கான ஆதரவு எதிர்ப்பு நிலை உண்டு .மத்திய அரசின் ஆதரவின்றி ஒன்னும் எப்போதும் யாரும் செய்யவே முடியாது.
On Wednesday, July 18,2012 08:08 PM, peyarilla said : 0 0
மத்திய காங்கிரஸ் அரசு என்னத்தை இது வரையில் புடுங்கியது?? ஈழத் தமிழர் வீடு கட்டி தரும்படி கேட்கவில்லை,வேலை வாய்ப்பு கேட்கவில்லை,ஒன்றை மட்டும் கேட்டார்கள்,அது தான் சம உரிமை.அது இல்லாத வரையில் இனப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பு தான்.தொடர்ந்து அலட்டி கொண்டு இருந்தால் இந்தியா தனது இஸ்திரத்தன்மையை இழக்க நேரிடும்.இனக் கலவரங்களை உருவாக்கி தமிழர் வாழ்வை அழித்தது சிங்கள பேரினவாதம்.மூன்று வருடங்கள் முன்னர் மிகப் பெரிய படுகொலை ஈன இரக்கம் இல்லாமல் சரண் அடைந்தவர்களை,நிராயுத பாணிகளை சுட்டும்,வெட்டி சித்திரவதை செய்தும் கொன்றது புத்தரின் போதனையில் அடங்குதா??சம உரிமை என்றும் சிங்களவர் கொடுக்க போவதில்லை.கட்டி இருந்த வீடுகளை குண்டு போட்டு உடைத்தது யார்??எங்கு பார்த்தாலும் கூரை இல்லா வீடுகள்.அதை உரிமை கொண்டாட வேண்டியவர் இன்று உயிருடன் இல்லை,இந்தியா அல்ல எந்த கொம்பனும் இனி வந்து பேச முடியாது,புலிகளை ஒடுக்கும் போர் என்றும் போர் முடிந்தவுடன் இனப் பிரச்சினை தீர்வு என்றும் இந்தியாவுடன் சேர்ந்து உறுதிமொழி கொடுத்த ராஜபக்சே இன்று பின் வாங்குவது ஏன்?? இன்ற்ஹியா கண்டும் காணாதது போல கண்ணை மூடி கொண்டு இருப்பது எதற்கு? இனிமேலும் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.மேற்கு நாடுகள் இந்தியாவை இனி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா தனது வார்த்தையில் தவறி விட்டது.தமிழ் ஈழம் தான் உருவாக்க அமெரிக்கா அதன் ஆதரவை தெரிவித்து நாடு பிரிக்க வேண்டும்.தமிழர் நிரந்தர அமைதி அப்போது தான் அடைவார்.
On Wednesday, July 18,2012 09:57 PM, ஜெய் said : 0 0
திரு கலைச்செல்வன், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது........ ராஜீவ் படுகொலையை சம்பந்த படுத்தி பேசுகிறீர்கள்........ அவரின் மரணத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் என்ன சம்பந்தம்? பொழுது போவதற்காக பத்திரிகை படிப்பவர்கள் மாதிரி தயவு செய்து பேச வேண்டாம்....... நாட்டு நடப்பில் அக்கறை உள்ளவர்கள் சமுதாய சிந்தனை உள்ளவர்கள் ஒரு செய்தியை அப்படியே எடுத்து கொள்ள மாட்டார்கள்..... அந்த செய்தி எந்த சூழ்நிலையில் வெளியிடபடுகிறது எப்படி வருகிறது ஏன் அப்படி சொல்லபடுகிறது என்று பல கோணங்களில் பார்ப்பார்கள். இந்த மாதிரி ஒரு செய்தியை நீங்கள் எடுத்து கொண்டு பார்க்க கற்றுகொண்டால்....... அதன் ஆதியும் அந்தமும் புரிய ஆரம்பிக்கம். இன்னும் சொல்ல போனால் அந்த செய்தி இப்படி இந்த மாதிரி வந்து இருக்க வேண்டும் இதன் தொடர்ச்சியாக நாளை இப்படிதான் இந்த மாதிரிதான் வரும் என்று கூட சொல்ல முடியும்....... உதாரணத்துக்கு "கருணாநிதி டெசோ மாநாடு தனி ஈழம்" கருத்தில் அந்தர் பல்டி அடிப்பார் என்று அவரை ஆராம்பத்தில் இருந்து கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும். ராமதாஸ் கடைசியில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்த பிரணாப் முகர்ஜியைத்தான் திருமா மாதிரி ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பார் என்று ஆரம்பத்திலேயே ஊகித்து கொள்ள முடியும். இப்படி சொல்ல்கொண்டே போகலாம்...... சும்மா நச்சுன்னு ஒன்னு சொல்லி முடிக்கட்டுமா? புலிகள் எலியை கொல்வதில்லை! ராஜீவ் அரசியலில் ஒரு அமுல் பேபி....... அன்றைய சந்திரசேகர் தலைமையிலான ஜனதா மத்திய அரசு, தமிழ்நாடு காங்கிரஸ் குறிப்பா சு. சாமி, மரகதம் இவர்களுடன் அந்நிய விரோத சக்திகளான இஸ்ரேல், அமெரிக்கா இலங்கை இப்படி ஒரு கூட்டணி உருவானால் இதற்க்கு நித்தியா மாதிரி ஒரு சாமியார் தலைமயில் ஒரு குழு உருவானால் எப்படி இருக்கும்? மற்றது உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும்........ தமிழன் என்றால் சிந்திக்க தெரிய வேண்டும்!
Tuesday, July 17,2012 05:34 PM, Rajesh said: 0 19
அவருக்கு மக்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும் பழக்கம் கிடையாது. மிக முக்கியமான பிரச்சினைகளில் அவரே சுலபமாக கேள்வி கேட்டு பதிலும் அளித்து, அது என்னவோ நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தது போல் ஏமாற்றுவார். அதுவும் அண்மை காலங்களில் தப்பும் தவறுமாக பதில்களை எழுதி மாட்டிகொள்கிறார். அவர் உங்கள் கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லாமல் மழுப்புவார்.
Tuesday, July 17,2012 04:31 PM, ராஜ் said: 1 40
கருணாநிதியை பற்றி அவர் குடுமபத்தினர் தவிர்த்து மற்ற திமுகவினர் உள்ளிட்ட தமிழர்கள் அனைவரின் எண்ணத்தையும் கருணாநிதி பாணியிலேயே சொல்லிவிட்டார் தமிழருவி மணியன் அவர்கள். நன்றி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக