புதன், 18 ஜூலை, 2012

பதக்கம் வெல்வேன்

தினமலர்

"ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்'

பளு தூக்கும் வீராங்கனை மாலா: நான் தற்போது, கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில், ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு படிக்கிறேன். அப்பா கந்தசாமி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்.பள்ளி நாட்களில், விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என் பயிற்சியாளர் அறிவுரைப்படி, பளு தூக்குவதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்; ஆர்வத்துடன் பயிற்சிகளில் ஈடுபட்டேன். முதலில், மாவட்ட, மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில், என்னை நிலை நிறுத்திக் கொண்டேன்.போட்டிகளில் கிடைத்த பரிசுகளும், பாராட்டுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றின. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இடைவிடாத பயிற்சி மற்றும் உழைப்பால், பரிசுகள் என்னைத் தேடி வர ஆரம்பித்தன.கடந்த, 2011ம் ஆண்டு, ஜப்பான் நாட்டின், கொபே நகரில், ஆசிய பளு தூக்கும் போட்டியில், 63 கிலோ உடல் எடை கொண்டோருக்கான, ஜூனியர் பிரிவில், நான் பங்கேற்றேன். 21 நாட்டு வீராங்கனைகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், எனக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 260 கிலோ எடை தூக்கி, இரண்டாம் இடம் வந்தேன்.இதே போல, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அதற்காக, இன்னும் சிறப்பாக என்னை தயார்படுத்தி, போட்டிகளில் பங்கேற்பேன்.சமீபத்தில், தமிழக முதல்வர், எனக்கு மூன்று லட்சம் ரூபாய் வெகுமதி கொடுத்து, உற்சாகப்படுத்தினார். இந்தப் பரிசு என்னை, இன்னும் உத்வேகத்துடன் செயலாற்ற வைக்கிறது. காமன் வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்வதே என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக