drama லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
drama லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மார்ச், 2013

Karunanidhi indicates quitting GOI if international investigations not taken up

Karunanidhi indicates quitting GOI if international investigations not taken up

[TamilNet, Saturday, 16 March 2013, 13:17 GMT]
If the Government of India is not going to take an effort to modify the US-tabled resolution at Geneva, to have provisions without any ambiguity for an independent international investigation on the genocide that took place in Ilangkai [Sri Lanka], for the identification of the war criminals responsible and for action within a stipulated period of time, there would be no point in the DMK continuing any further in the cabinet of the Government of India, said a press statement of the DMK chief Mr. M. Karunanidhi, released from the DMK Headquarters on Friday.

DMK Chief M Karunanidhi
DMK Chief M Karunanidhi
In the wake of varied campaign on the US-tabled resolution at the UNHRC, the DMK wants to make clear of its position with assurance, the press release of Mr. Karunanidhi further said.

The press statement coming from Mr Karunanidhi himself is significant in the background of varied approaches to the issue found followed earlier in the DMK camp, political observers in Chennai said.



Chronology:

சனி, 9 மார்ச், 2013

மார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி

குற்றவாளிகளைக் காவலர்களாகக் காட்டும் முயற்சி - சாத்தான் ஓதும் வே தம்

தெசோ அறிவித்துள்ள மார்ச்சு12 வேலைநிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்: கருணாநிதி



டெஸோ நடத்துவதாக அறிவித்திருக்கும் மார்ச் 12 வேலை நிறுத்தத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்; அன்று ரயில், விமானங்களை ரத்து செய்து, போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து அவர் இன்று கடித அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவருடைய முழுமையான கடித அறிக்கை:

12-3-2013 அன்று தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம்! “டெசோ” அமைப்பின் வேண்டுகோள் இது!
இலங்கையில் சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சேவால் நடத்தப்பட்ட தெல்லாம் தமிழினப்  படுகொலையே; அவர் அடுக்கடுக்காகச் செய்த தனைத்தும் போர்க் குற்றங்களே; அவர் தனது மன  சாட்சியை நசுக்கி அழித்து விட்டு மீறியதெல்லாம் மனித உரிமைகளையே; எனவே அவரைச்  சர்வ தேசப் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும்; இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, நம்பகத் தன்மையுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்;  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12-வயது மகன், பாலச்சந்திரனைச் சுட்டுக் கொலை செய்தது உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களையும், பெண்களையும், முதியோர்களையும் கொன்றழித்த சரித்திரம் காணாத கொடுமைகளுக்கு ராஜபக்சே சர்வதேசச் சட்டப்படி பொறுப்பேற்று, உலக நாடு களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்; இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை யைக் கண்டிக்கும் வகையில் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்தை இந்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் முழு மனதோடு ஆதரிப்பதாக அறிவிக்க வேண்டும்; இந்திய அரசே, ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் பொது வாக்கெடுப்புக்கென தக்கதொரு தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; என்பவைகளுக்காக கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் - ஜனநாயக நெறிபிறழாமல் - அமைதியான முறையில் - அறவழியில் - ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் - இது நம்முடைய தொப்புள் கொடிச் சொந்தங்களான ஈழத் தமிழர் களுக்காக நாம் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டிய அடிப்படைக் கடமை என்ற உணர்வோடு - அனைவரும் பங்கேற்க வேண்டுமென்ற எனது வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாகச் சிலருக்கு சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்படலாம். அவற்றையெல்லாம் அன்புகூர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த வேலை நிறுத்தத்தை “டெசோ” இயக்கத் தின் சார்பில் அறிவித்த காரணத்தால் ஒரு சிலர் தமிழ் இனப் பற்றை தங்கள் உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்துவிட்டு, இது ஏதோ திசை திருப்புகின்ற செயல் என்றெல்லாம் காழ்ப்புணர்ச்சி யோடும், எதிர்ப்பு அறிக்கை கொடுக்காவிட்டால் யாரோ கோபப்பட்டு விடுவார்களோ - அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்பதற்காகவும், ஏதோ ஒரு உள்நோக்கத்தோடும் அறிக்கை விடுத்த போதிலும், இந்த வேலை நிறுத்தம் என்பது முழுக்க முழுக்க இன்னல்களால் உழன்று வரும் ஈழத் தமிழர்களுக்கு தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு என்ற உணர்வோடு; அதை வெற்றி கரமாக ஆக்கித் தர வேண்டுகின்றேன்.
எங்கே ஈழத் தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழரெலாம் ஒன்றுபட்டு விடுவார்களோ, அதனால் தி.மு.க.விற்குப் பெயர் வந்து விடுமோ என்ற ஆதங்கத்தில், இப்போதே ஒரு சில “அவாள்” பத்திரிகைகள் இந்தப் பொது வேலை நிறுத்தம் வெற்றி பெறாது என்றும், மற்றக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றும் தாங்களாகவே செய்தி வெளியிட்டுக் கொண்டு திருப்தி அடைய எண்ணுகிறார்கள்!
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது ஏதோ ஒரு கடை திறக்கப் பட்டிருக்குமானால், அல்லது யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் தனது வாகனத்தை சாலையில் ஓட்டினால், அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது ஒரு நாள் இலாபமே பெரிது என்று திறந்து வைத்தால், அவர்கள் எல்லாம் நம்முடைய ஈழத் தமிழர்கள் பால் ஆழ்ந்த பற்றற்றவர்கள் அல்லது ஈழத் தமிழர்களின் துன்ப துயரங்களையும், பிரச்சினைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்று ஆகிவிடும்.
பிரபாகரனின் மகனாகப் பிறந்த ஒரே குற்றத்திற் காக, பள்ளிக்குச் சென்று பயில வேண்டிய பச்சிளம் பாலகன், பாலச்சந்திரன் தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்று புரிந்து கொள்ளக் கூட முடியாத பருவத்தில், அவன் மார்பிலே ஐந்து குண்டுகளைப் பாய்ச்சினார்களே, குலை நடுங்கும் அந்தக் கோரக் கொடுமைகளைக் கண்ட பிறகும், இந்தப் பொது வேலை நிறுத்தம் என்பது திசை திருப்பும் செயல் என்றோ, தேவையில்லாத ஒன்று என்றோ நினைக்க முடிகிறதா?
லண்டனைத் தலைநகராகக் கொண்ட ‘சேனல்-4’ தொலைக்காட்சி நிறுவனம் எத்தனையோ ஆபத்துக்கிடையே படம் எடுத்து, தயாரித்த அந்தக் கொடுமையான காட்சிகள்தான் எத்தகையவை? பாலச்சந்திரன் கைக்கும் வாய்க்கும் இடையே ரொட்டித் துண்டுடன் இருந்ததையும், அடுத்த படத்தில் அவன் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கிப் பிணமாகக் கிடந்ததையும் விளக்கிடும் காட்சி; தாயும் குழந்தையும் ஒன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு வீழ்ந்து கிடந்த காட்சி; அப்பாவிப் பெண்கள் ஆடைகள் நீக்கப்பட்டு, நிர்வாண நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டிருக் கும் காட்சி ; விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ் என்பவர் முகம் சிதைந்த நிலையில் கொல்லப்பட்டு பிணமாகக் கிடக்கின்ற காட்சி; பெண்புலி இசைப்பிரியா என்ற இளம்வயது பெண்ணை சிங்கள ராணுவம் சீரழித்து, படு கொலை செய்த காட்சி; ஆண்களை நிர்வாண மாக்கி, கண்களைக் கட்டி, கைகளைப் பின்னால் கட்டி, முதுகிலே சுட்டுக் கொல்கின்ற காட்சி; ஆகிய இதயத்தைக் கசக்கிப் பிழிந்திடும் காட்சிகளையெல்லாம் கண்ட பிறகும், இந்த ஒரு நாள் வேலை நிறுத் தத்தில் நாம் கலந்து கொள்ளாவிட்டால் அந்தச் சிங்களக் காடையரின் கொடுமைகளையெல்லாம் நாம் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டவர்களாகி விட மாட்டோமா?
பாதுகாப்பு வளையங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும், மருத்துவ மனைகளிலும் கொத்துக் கொத்தாகக் குண்டுகள் வீசப்பட்டு தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டதற்குப் பிறகும் - தமிழினத்தின் பண் பாட்டுக் கூறுகளை அழித்திடும் நோக்கில் அவற்றின் வேர்களைச் சிதைத்திடும் கொடுமை யான முயற்சிகளையும், தமிழர்களுடைய பூகோள அடிப்படையிலான வாழ்க்கை நெறிகளை அழித் திடும் முனைப்பையும் கண்டதற்குப் பிறகும் - ஈழத் தமிழர்களின் கல்விக் கூடங்கள், கோயில் கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றைத் தகர்த்தும், தமிழர்களின் மொழி அடையாளத்தைச் சிதைத்தும், நூற்றுக்கணக்கான தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றியும், இலங்கையில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலையும், ஆக்கிரமிப்பு அக்கிரமத்தையும் கண்டதற்குப் பிறகும் - இவற்றையெல்லாம் கண்டிப்பதற்காக நடைபெறும் வேலை நிறுத்தம் தேவையற்றது, திசை திருப்பும் செயல் என்றெல்லாம் கூறுவது மனசாட்சிக்கு மாறான கூற்றா இல்லையா?
நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய விவாதம் நேற்றையதினம் நடைபெற்றபோது நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர்.பாலுவின் குரலோடு இணைந்து, பா.ஜ.க. போன்ற கட்சிகள் எல்லாம் பிரச்சினையின் கடுமையை உணர்ந்து, தாமாகவே முன்வந்து நம்முடைய இனத்திற்காகக் குரல் கொடுக்கின்ற நிலையில், மத்திய அரசு தனது பதிலில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு உறுதி அளிக்காத நிலையில், அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதால், ஒரு நாள் வேலை நிறுத்தத் திற்கு ஒத்துழைப்புத் தரவேண்டியது நம்முடைய கடமை அல்லவா?
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து எத்தனையோ ஆண்டுக் காலமாகக் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்; சிறைபிடிக்கப்படுகிறார்கள்; அவர்களின் மீன்பிடிச் சாதனங்கள் எல்லாம் கடலிலே தூக்கி வீசி எறியப்படுகின்றன; பிடித்த மீன்கள் எல்லாம் கைப்பற்றப்படுகின்றன; மனிதாபி மானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். நேற்றையதினம் கூட ஒரேநாளில் தமிழக மீனவர்கள் மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்கள். இதுபற்றி ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கலக்கமடைந்து கண்ணீர் சிந்துவதும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் அதற்காக அறிக்கைகளை வெளியிடுவதும், அரசின் சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு மீனவர்களை விடு விக்க முயற்சிப்பதும் என்பது நீண்ட தொடர்கதை யாக நிகழ்ந்து வருகின்றது.
அவர்களின் நெடுங்காலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையோடு நடைபெறும் இந்தப் பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பது என்பது ஒவ்வொருவரின் கடமை என்ற உணர் வோடு பங்கேற்க முன்வர வேண்டாமா?
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் - அதிலே நம்மிடையே உள்ள சகோதர யுத்தத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது - நம்மிடையே ஒற்றுமை உள்ளது என்றாலே சிங்கள அரசு அஞ்சி நடுங்கும் என்று எண்ணித்தான், “டெசோ” சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதுகூட, கட்சிச் சார்பற்ற முறையில் அரசியல் காழ்ப் பில்லாமல் ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் வேலை நிறுத்தம் இது என்று அறிவித்தோம். அந்தத் தீர்மானத்தை அ.தி.மு.க. கூட எதிர்த்து ஒரு வார்த்தை கூறாததற்கு முன்பாகவே, நம்முடைய தீர்மானத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தாலே, அது யாருக்கோ “குளுகுளு” என்றிருக்கும் என்ற எண்ணத்தோடு, இந்த வேலை நிறுத்தத்தை திசை திருப்பும் முயற்சி என்று ஒருசிலர் அறிக்கை விடுகிறார்கள். இவர்களின் இந்த அறிக்கையைப் படிக்கும் உலகத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும் என்னதான் எண் ணிக் கொள்வார்கள்? தேர்தலில் இவர்களுக்கு இரண்டொரு இடங்கள் வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் தம்மை மறந்து - தரம் தாழ்ந்து அறிக்கை விடுகிறார்களே, கடந்த காலங்களில் நம்மிடம் பாசமாக இருப்பதைப் போல எப்படி யெல்லாம் நேச வேடம் போட்டார்கள் என்று எண்ணிக் கொள்ளமாட்டார்களா?
அவர்கள் எப்படியோ போகட்டும்; அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரையில் நாம் தெளிவாக இருக்கிறோம். ஒரு சிலரைத் தவிர, மற்ற அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் எல்லாம் நம்மைத் தொடர்பு கொண்டு இந்த வேலைநிறுத்தத்திற்குத் தங்களின் முழு ஒத்து ழைப்பையும் தருவதாகத் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் - அவர்களுடைய தமிழ் இன உணர்வைப் போற்றி, எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு நாள் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பொதுமக்களிடம், நம்மினத்தவர் இலங்கையிலே நாளும் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் செய்கின்ற எள்ளளவு தியாகம் என்ற உணர் வோடு, அதனை ஏற்றுக் கொள்ள முன்வரவேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த வேலை நிறுத்தத்தின்போது, பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறிய சிறிய நிறுவனங்கள் - பெரிய, சிறிய வர்த்தக நிறுவனங்கள் - கடைகள் அனைத்தும் மூடப் பட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள் கிறேன். சாலைகளிலே ஆட்டோக்கள் ஓடக் கூடாது என்றும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் அன்று ஒரு நாள் பன்னிரண்டு மணிநேரம் தங்கள் தியேட்டர்களை மூடி காட்சிகளை நிறுத்த முன் வரவும் வேண்டுகிறேன்.
தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள்; ஏன் இந்திய அரசே முன் வந்து அன்றையதினம் புகைவண்டி கள் மற்றும் விமானங்கள் தமிழ கத்திலே ஓடாது என்று அறிவித்திட வேண்டும்; தமிழக அரசின் பொறுப்பிலே இருப்போரும், இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய இன மக்களுக்காக நடைபெறுகின்ற ஒன்று என்ற உணர்வோடு அரசு அலுவலகங்களையெல்லாம் அன்று ஒரு நாள்-12 மணி நேரம், இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்காக விடுமுறை விட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இது இலங்கை அரசுக்கான கண்டனம் மாத்திரமல்ல; அங்கே வாழ்ந்து மறைந்த ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலியுடன், இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்காக தாய்த் தமிழகம் காட்டுகின்ற ஆதரவு - அரவணைப்பு என்ற உணர்வோடு, இந்த வேலைநிறுத்தத்தில் நம்முடைய ஒற்றுமையை உறுதியாக வெளிப்படுத்திட முன்வர வேண்டுமென்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக எத்தனையோ வகைப் போராட்டங்களை 1956ஆம் ஆண்டிலிருந்து நடத்திப் பழக்கப்பட்ட தி.மு.கழகத்தின் தலைவன் என்ற முறையிலும், “டெசோ” இயக்கத்தின் தலைவன் என்ற முறையிலும், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், கட்சியினருக்கும், அனைத்துப் பொதுமக்களுக்கும், சமுதாயத்தின் எல்லாப் பிரிவினர்க்கும், தோழமைக் கட்சிகளின் சோதரர்க்கும், கழக உடன்பிறப்புக்களுக்கும் நான் விடுக்கின்ற வேண்டுகோள் இது!
மார்ச் 12 - காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை! 12 மணிநேரம்! தமிழகமே ஒன்று திரண்டு வேலை நிறுத்தத்தில் அழுத்தமாக நின்றது என்று தெரிந்தாலே ராஜபட்ச நடுங்குவார். அதற்கொரு வாய்ப்பு என்ற முறையில் இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்பீர்! எப்போதும்போல இந்த வேலை நிறுத்தத்தில் மருத்துவமனைகள், பத்திரிகை அலுவலகங்கள் போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கும்; இது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்; விதி விலக்கு உண்டு. பாவிகளின் கொலைவெறிக்கு பலியான பாலகன் பாலச்சந்திரனின் மரணத்திற்குப் பிறகும், இந்த வேலை நிறுத்தத்தைக் களங்கப்படுத்த நினைப்போர் - திசை திருப்பி குளிர்காய எண்ணுவோர் - எவராயினும், தமிழ் இனம் சகித்துக் கொள்ளாது! அவர்கள் யார் என்று புரிந்து கொள்ளும்! பொது வேலை நிறுத்தம் வெற்றி வெற்றி என்ற செய்தியை, இன்னல்களுக்கு ஆளாகி யிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக வழங்குவோம்! சங்கம் முழங்கிடுவோம்! “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” என்று சங்கம் முழங்கிடுவோம்!

இந்த பகுதியில் மேலும்

செவ்வாய், 17 ஜூலை, 2012

டெசோ விற்கு மாற்றாக என்ன பெயர் வைத்து நடத்த ப் போகிறார்?

டெசோ விற்கு பதிலாக என்ன பெயர் வைத்து நடத்த ப் போகிறார்?

டெசோ மாநாட்டில் தமிழீழ கோரிக்கை கிடையாது- கருணா.

அப்படியானால் டெசோ  (thamizh eezha supporters organisation ) டெசோ விற்கு பதிலாக என்ன பெயர் வைத்து நடத்த போகிறார்?
மீதமுள்ள ஈழ தமிழர் பாதுகாப்பதற்காக மாநாடு நடத்துவதாக அறிந்தேன் .அதாவது Remainig Eezha Thamizhs Save OrganisationRETSO என்ற புது பெயரிலா ?
மீதமுள்ளோறும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்து …எங்கோ ஒரு சில தமிழர்கள் உள்ளார்கள் அவர்களை பாதுகாக்கஎன்னைவிட்டால் வேறு ஆழ் இல்லை என அந்த நேரம் ஒரு மாநாடு நடத்துவார் அரிய ஈழ தமிழர் பாதுகாப்பு மாநாடு அதாவது ரெட்சோ RETSO Rare Eezha Thamizhs Save Organisation
கருணாநிதியின் துரோகத்தின் விழைவு முள்ளிவாய்க்கால் படுகொலையோடு நின்றுவிடவில்லை சிங்களனால் இன்றைய நிலையில் தினமும் 90 பேர்அளவில்   செத்து மடிகின்றனர்,அதில்  கொல்லப்படுபவர்கள் அதிகம் ,தினமும் 100 க்கு குறைவில்லாது எம் சகோதர சகோதரிகள்கற்பழிக்கப்படுகின்றனர் அதை கண்டும் காணாது விட்டுகொண்டிருப்பவர் சமிபத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை வைத்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினார் எதற்க்காக என எல்லோருக்கும் தெரியும் 
இப்படிப்பட்ட கொடுமைகளை  தொடர்ந்து செய்யும் சிங்களனுக்கு ஆதரவாக கருணாநிதி இப்போதும் செயல்படும் முகமாக அவரின் பேசுக்கள்அமைகின்றன ,உணர்த்துகின்றன  இனி சிங்களனுடன் ஆய்தம் ஏந்தி போரிட்டு வெல்ல முடியாது. தமிழீழம் கோரிக்கை கிடையாது . புலிகள் மீதானதடை குறித்து கேட்டால் பதில் கூராதிருப்பது .இந்த இரண்டு நாட்களுக்கு முன்புவரை தனித் தமிழீழம் என்றவர் இப்படி மாறி பேசுவதானால் நாம் அவரை பார்த்து கேட்கும் கேள்விகள்

 1 இந்தியாவின் நலன் கெட கூடாதென நினைத்து செயல் படுகிறீர்கள் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்புவரை அதைபற்றி ஏன் யோசிக்கவில்லை பழுத்த அரசியல்வாதி ஏன் புரட்டு அரசியல்வதியானிர்கள்?   2 . ராணுவ கட்டமைப்பு கொண்ட நாட்டை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போரிட்டு வெல்ல முடியாதென கூறுகிறீர்கள் ஒக்கனேகலில்  எல்லைதாண்டி வந்த  எடியுரப்பாவை கூட எதிர்க்க துணிவற்ற நீங்கள் இப்படித்தான் பேசுவீர் .ஒரு வீரனுக்கு அழகு தன்னை போல பலம் போருந்தியவனுடனோ அல்லது அவனை விட மிக்க பலமுள்ளவனுடனோ மோதுவது.அப்படி இந்தியத்துடன் மோத சிறிதும் விரும்பாத நீங்கள்   சுண்டெலிகளை நசுக்குவது போல் ஈழத்திற்காக தமிழகத்தில் போராடியவர்களை நசுக்கி மக்களை படுகொலை செய்த இந்தியத்தை காப்பாற்றினீர் இது போன்று நடக்க  ஒரு சாணக்கியமும் தேவையில்லை பணம் பெற்றுக்கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களை நசுக்கும் பணியை இங்கு லட்சம் பேர் செய்கிறார்கள்  . விடுதலை புலிகள் சிங்கள ராணுவத்துடன் போர் மட்டும் செய்யவில்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்கள் பகுதியில் அரசாட்சி புரிந்து வந்தார்கள் .சிங்கள படையால் புலிகளை  ஒன்றுமே செய்ய முடியாது தவியாய் தவித்ததை உலகம் அறியும். உங்கள் பெயர் கொண்ட துரோகியை துணைக்கு வைத்தும் 20 நாட்டு கூட்டு படைகளை துணைக்கு அழைத்துதான் புலிகளை சிங்களவன் விழ்த்தினான் என்பதை ஏன் மறந்தீர்கள்? 3. ஈழத்திற்காக நாங்களும் 30 ஆண்டுகளாக போராடுகிறோம் என்கிறீர்கள் என்ன முடிவு கண்டீர்கள் வெற்றியா தோல்வியா? 4 . ராஜபக்சே தமிழர்களை கொன்றது அவன் இனத்தை காப்பாற்ற…. நீங்கள் தமிழர்களை கொல்ல விட்டு வேடிக்கை பார்த்தது இந்தியத்தை காப்பாற்றவா இல்லை உங்கள் குடும்பத்தை காப்பாற்றவா ? நீங்கள் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்திருந்தாலே இன்னும் அங்கு போர் இன்னும் நடந்து கொண்டிருக்குமே தவிர இன்றைய நிலை வந்திருக்காது

கருணாநிதி இப்படி ஏன் நடக்கிறார்?
அரசியல் செய்து பணம் பண்ண  இந்திய காங்கிரஸ் ஆதரவு தேவை    தமிழாகளிடம் துரோகி பட்டம் ஒழிய ஏதாவது  அவ்வப்போது நாடகங்கள் நடத்த வேண்டும்

அரசியல் பிழைப்பு நடத்த வேண்டும் ஆம் அன்று மே 13 1985 இல் எம் ஜி ஆருக்கு எதிராக அரசியல் நடத்த-அரசியலுக்காக டெசோ வை நடத்தினார் .டேசொவை ஏற்படுத்த அய்யா பழ நெடுமாறன் தேவைபட்டார். பின் கலைக்கும்போது அவரை கேட்காது கலைத்தார்
அப்போதும் டேசொவை இந்திய ஆதரிக்கவில்லை ஈழ தமிழ் தலைவர்களை தமிழ் நாட்டைவிட்டு அனுப்ப உத்தரவிட்டது அதனை எதிர்த்து புதுதில்லிசென்று போராடினர் பலர் . அய்யா பழ நெடுமாறன் அவர்கள் தன் உயிரை பணையம் வைத்து ஈழத்திற்கு சென்று அங்கு தமிழர்கள் படும் துயரத்தைபடமாக்கி அதை ராஜிவிடம் காண்பிக்க அனுமதி கேட்டார். கிடைக்கவில்லை
கட்ச தீவை தன் சுய நல அரசியலுக்கு விட்டு கொடுத்ததன் விழைவு பின்னாளில் பல மீனவர்கள் தங்கள் உயிரை காவுகொடுக்க வேண்டியதாயிற்று.தன்னால் எதையும் மீட்கமுடியாதென தெரிந்தும் சும்மா இருக்காது தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லைதாண்டி செல்வதால்தான் சிங்களர்சுடுகிறார்கள் என்றார் 
உண்ணாவிரதத்தை கைவிட்டவர் போர் நிற்கவில்லையே என்றால்….மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்றார் .
இலங்கை பிரச்சனையில் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதை தன் வாயால்
“ 
மலையிலிருந்து வெண்ணை உருண்டு கிழே வருகிறது.அதை எடுக்கலாம் என்றால் எனக்கு இரண்டு கையும் இல்லை நடந்து செல்ல காலும் இல்லைசரி யாரையாவது அழைத்து எடுக்க சொல்லலாமென்றால் வாயும் ஊமை . கை காலிலில்லாத முடவனாய் வாய் பேசமுடியாத ஊமையாய் ஒன்றுமேசெய்யமுடியாதவனாய் இருக்கிறேன் ”
இப்படி தமிழகத்திற்கு முதல்வராக இருக்கும்போது வாய்கூசாது சொன்ன கருணாநிதி ஈழம் அமைத்து தருவார் என நம்பி அவர்பின்னால் போவதைநினைத்து நினைத்து கருணாநிதி சிரிப்போ சிரிப்பென சிரித்து வாழ்வார் …தமிழர்கள் கதி ………………….?

.தமிழர்களே தமிழகத்திற்கு ஒரே ஒரு அரசியல் மட்டுமே தேவை தமிழ் இனத்திற்காக தன்னுயிரை தந்த விடுதலை புலிகள் ஆதரவு அரசியல்  நாம் இழந்ததை எண்ண முடியாது இழந்ததை பெற தியாக சீலர்களின் வழி அரசியல் தேவை

ஆயுதம் ஏந்தி போராடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லையென சொல்லி சும்மா இருந்துவிட முடியாது இங்கு நாம் அவர்களிடமிருந்து எடுத்துகொள்ள வேண்டியது நிறைய உள்ளது தியாக மனப்பான்மை,ஒழுக்கம், நேர்மை ,கொண்ட கொழ்கையில் உறுதி .தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் இல்லாத பெரும் நற்குணங்களை அவர்களிடமிருந்து  எடுத்துகொள்வோம்  இன நலன் சார்ந்த தியாக மனப்பான்மையோடு கூடிய அரசியல் அந்த தியாகம்  நிறைந்த தெழிவான சிந்தனையோடு திட்டமிட்டு முன்னேறினால் ஈழம் நாளை நம் கையில். புலி ஆதரவை  எவர் எதிர்க்கிறார்களோ அது திருட்டுத்தனம் நிறைந்ததாகவே இருக்கும். தியாகம் செய்தவர்கள் வழிநின்று நம் இனத்திற்குபோராட போகிறோமா? இல்லையா? என்பதே நம் ஒவ்வொருவர் முன்னும் நிற்கும் நிற்க வேண்டிய கேள்வி
    ஈழம் அமைய கூடாதென நினைக்கும் அரசியல் கட்சிகளை புறக்கணிப்போம்

ஈழம்தான் தீர்வு என்று சொல்லும் அரசியல் கட்சிகள்  ஈழத்தை எதிர்ப்பவர்களுடம் எந்த வகையிலும் கூட்டு சேர கூடாது

அப்படி கூட்டு சேர எந்த வித காரணத்தை கூறினாலும் அது ஈழ கோரிக்கையை வலுவிழக்க உதவுமே தவிர கூர்மைபடுத்த ஒருபோதும் உதவாது

                                                                                                                                                                                                                                   நன்றி

                                                                                                                                                                                                                                      அதியமான்
                                                                               பொது செயலாளர்
 தமிழர் முன்னேற்றக்கழகம்

சனி, 21 ஏப்ரல், 2012

மண்டியிடச் சென்ற சுசுமா

எல்லாரும் எங்கள் பக்கம்தான் என இறுமாப்பைக்காட்ட அழைத்திருப்பான் கொலை வெறியன் பக்சே.நாங்களும் உங்கள் கூட்டாளியாகத்தான் இருப்போம் என உறுதியளிக்க மண்டியிடச் சென்றுள்ளார் சுசுமா சுவராசு. பிற உறுப்பினர்களுக்குத் தன்மானம் இருப்பின் இனி அவர் தலைமையில் குழுவில் இருக்கமாட்டோம் எனக் கூற வேண்டும். ஆனால், பரிசு மயக்கத்தில இருப்பவர்களுக்கு உணர்வு எங்கே இருக்கும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

ராஜபக்சேவை தனியாகச் சந்தித்த சுஷ்மா சுவராஜ்

First Published : 21 Apr 2012 11:11:42 AM IST

கொழும்பு, ஏப். 21 : வெள்ளிக்கிழமை மாலை இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்கூட்டியே நேற்று காலை சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவை தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளார்.நாடாளுமன்றக் குழுவினருக்கு ராஜபக்சேவுடன் சனிக்கிழமை விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதனை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்து செய்யுமாறு கூறியிருந்தனர்.இந்த நிலையில்தான், சுஷ்மா சுவராஜ் நேற்று காலை ராஜபக்சேவை தனிமையில் சந்தித்து அவர் அளித்த காலை விருந்தில் கலந்து கொண்டுள்ளார். சக இந்தியக் குழுவினரை தவிர்த்து விட்டு சுஷ்மா சுவராஜ் மட்டும் போய் ராஜபக்சேவைச் சந்தித்திருப்பது மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் நடந்திருக்குமா என்ற சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மா சுவராஜுக்கு ராஜபக்சே விருந்து:தனியாக சந்தித்ததால் சர்ச்சை

புதன், 18 ஜனவரி, 2012

பாரதி வருகிறார்!




ஞாயிறு கொண்டாட்டம்
பாரதி வருகிறார்!

First Published : 15 Jan 2012 12:00:00 AM IST

திருச்சி அருகே சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகளுக்கிடையே அரங்கேறிய முப்பது நிமிஷ நாடகம் சமூக அவலங்களை அம்பலப்படுத்திக் காட்டியது."பாரதி வருகிறார்' இதுதான் நாடகத்தின் தலைப்பு. மாணவ, மாணவிகளே நடித்த இந்த நாடகத்தை இயக்கியவர் பார்த்திபராஜா. திருப்பத்தூர் கல்லூரிப் பேராசிரியர்.பாரதியாரும், செல்லம்மாளும் உயிர் பெற்று சுதந்திரமடைந்த இந்த தேசத்தைக் காண வருகின்றனர். ஆசை ஆசையாய் இந்த மண்ணில் கால் வைத்த அவர்கள் இங்கு நடைபெறும் நிகழ்வுகளால் படும்பாடுதான் நாடகத்தின் கரு."காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்...' பாடல் பின்னணியில் பாரதியும், செல்லம்மாளும் வருகின்றனர்.""மறைந்து வெகுகாலம் ஆகிய பிறகு நம் தாய்த் தமிழ் நாட்டைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு, நல்ல வாய்ப்புதானே...'' என்கிறார் பாரதி.""ஆமாம்... ஆமாம்...' என ஆமோதிக்கிறார் செல்லம்மாள்.இருவருக்கும் தாகம் எடுக்கிறது. தொலைவில் தெரியும் அடிபம்பில் தண்ணீர் குடிக்க ஆர்வத்துடன் வருகின்றனர். பாரதி குழாயை அடிக்க செல்லம்மாள் தண்ணீர் குடிக்க முற்படுகிறார். தண்ணீர் வரவில்லை; காற்றுதான் வருகிறது. இருவரும் மாறி மாறி அடித்துப் பார்க்கின்றனர்.அந்த வழியே "இஞ்சி இடுப்பழகி...' பாட்டைப் பாடிக் கொண்டே செல்லும் ஓர் இளைஞன், இந்த இருவரையும் பார்த்துவிட்டு "யாருய்யா நீங்க, கார்ப்பரேஷன் குழாயைக் கழட்டிட்டுப் போக பார்க்குறீங்களா?' என அதட்டுகிறார்."இல்லை இல்லை, குழாயில் தண்ணீர் வரவில்லை' என்கிறார் பாரதி.""அடப்பாவி, என்னிக்குயா கார்ப்பரேஷன் குழாயில தண்ணீர் வந்திருக்கு?'' என்கிறார் வழிப்போக்கன்.ஒரு வழியாக பெட்டிக் கடைக்கு வழிகாட்டிவிட்டார் அவர். பெட்டிக் கடைக்காரரிடம் "அய்யா வணக்கம்' என்கிறார் பாரதி. செல்லம்மாளை தன் மனைவியென அறிமுகம் செய்து வைக்கிறார். "இருக்கட்டும் இருக்கட்டும்... என்ன வேணும்?' என்கிறார் சாவகாசமாய் பெட்டிக் கடைக்காரர்.""குடிப்பதற்கு...'' என்று பாரதி சொல்லி முடிப்பதற்குள், "அக்வாபினா' வழங்கப்பட்டது. குடித்துவிட்டு காலி பாட்டிலை பத்திரமாக கடைக்காரரிடம் கொடுக்கிறார் பாரதி. அப்போதே கடைக்காரருக்கு ஏதோ புரிந்துவிட்டது.""மிக்க நன்றி அய்யா, சென்று வருகிறோம்'' என்று கூறிவிட்டு விடைபெறுகிறார்கள் பாரதியும், செல்லம்மாளும்!கழுத்தில் கிடந்த துண்டைப் போட்டு மடக்கினார் பெட்டிக் கடைக்காரர்.""தண்ணி பாட்டிலுக்கு பதினாறு ரூபாய் எண்ணி வெச்சிட்டு நடையைக் கட்டுங்க... இல்லேன்னா இங்கேருந்து போவமுடியாது...'' என்கிறார்.பாரதி இதை எதிர்பார்த்திருக்கவில்லை.""பார்த்தாயா செல்லம்மா, தண்ணீரும் விலையாகிவிட்டது. காற்றுக்கும் விலை வைத்துவிடுவார்கள் போலிருக்கிறதே... அவமானம், அவமானம், வெட்கக்கேடு..'' என்கிறார் பாரதி.""பணம் இல்லை...'' என்றார் பாரதி.""போய்த்தொலை...'' என்று விட்டுவிடுகிறார் அந்த நல்ல மனதுக் கடைக்காரர்!வழியில் அரசியல்வாதிகள் நடத்தும் பாரதி விழா. ஓரமாக நின்று பார்க்கின்றனர். முன்னுரைகள் முடிந்து பேசத் தொடங்குகிறார் அந்தத் தலைவர்.""பாரதியார் ஒரு தொழிலதிபர்..' என்றதும் ஏகக் கைத்தட்டல். (உண்மையில் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களிடமிருந்தும்)"இந்தியாவில் எத்தனையோ தொழிற்சாலைகளை நிறுவியிருக்கிறார் பாரதி. அவர் தொடங்காத தொழில் இல்லை. நான் அனில் அம்பானியையும், முகேஷ் அம்பானியையும் கேட்கிறேன்... இன்று பாரதி இருந்திருந்தால்... அவரோடு உங்களால் போட்டி போட்டிருக்க முடியுமா?'' - முழங்குகிறார் அரசியல்வாதி.வெறுத்துப் போன பாரதி, கூட்டத்தில் குறுக்கே நுழைந்தே விட்டார்."கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரன் நுழைந்துவிட்டான், அவனை கல்லால் அடிக்க வேண்டாம், சோடா பாட்டில் வீச வேண்டாம்' என அந்தத் தலைவர் சொல்லச் சொல்ல, அத்தனையும் பாரதிக்கு நடக்கிறது.அங்கே பரிதாபமாக காவல் பணியில் இருந்த காவலர்கள் பாரதியையும், செல்லம்மாளையும் விசாரிக்கின்றனர்.""யார் நீ, என்ன பண்ற?''""நான் பாரதி. இது என் மனைவி செல்லம்மாள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்கிறார் பாரதி.இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். பாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.அப்போது வந்த ஒருவர் தனது கவிதையை யாரோ திருடிவிட்டதாகப் புகார் கூறுகிறார். என்ன கவிதை என்று கேட்டதற்கு, "ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' என அந்தக் கவிஞர் மெல்லத் தொடங்க, பாரதி முழுவதுமாகப் பாடி முடிக்கிறார்.இதனால் கவிதையைத் திருடியவர் பாரதி என்று முடிவு செய்கின்றனர். "இது என் கவிதை அய்யா' என்று விளக்கம் தருகிறார் பாரதி. வழக்கம்போல போலீஸார் சில விசாரணைகளைச் செய்து, பாரதி போலிக் கவிஞன் என்று முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.காவல் துறை அதிகாரி மிரட்டுகிறார். வெறுப்பின் உச்சத்தில் வெளியேறுகின்றனர் பாரதியும், செல்லம்மாளும். வெளியே அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார் பாரதி. அந்த வழியே சென்ற குழந்தைகளிடம் ""நான் யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்கிறார்.""அய்யோ பூச்சாண்டி..'' என்கின்றனர்.""குழந்தைகளே நான் பாரதி'' என்கிறார்.""நிச்சயமாக நீ பாரதியாக இருக்க முடியாது, எங்கள் பாரதி அழமாட்டார், வீரமாகப் பாடியவர்'' என்று குழந்தைகள் சொன்னதும், குழந்தைகளை அணைத்துக் கொள்கிறார் பாரதி.""குழந்தைகள் என்னை மனதில் கொண்டிருக்கிறார்கள். எதிர்கால இந்தியா நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது'' என்கிறார் பாரதி.""பாரதின்னா துடிப்பு, பாரதின்னா வேகம், பாரதின்னா சத்தியம், பாரதின்னா அறிவுத் தீட்சண்யம்.... இங்கே அப்படியான பாரதிகள் ஏராளம் உண்டு... பத்தாய், நூறாய், ஆயிரமாய், லட்சமாய்... இதோ... இதோ...'' எனச் சொல்லச் சொல்ல, பாரதி வேஷமிட்ட ஏராளமான குழந்தைகள் மேடையில் ஏறுகின்றனர். நாடகம் நிறைவு பெறுகிறது.

வியாழன், 16 ஜூன், 2011

Veera velu nachiyar - drama: ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

''வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் பத்தொன்பது ஒற்றுமைகள்” – ஈழத்தை நினைவுபடுத்தும் ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

யூகி
பதிவு செய்த நாள் : June 15, 2011

சென்னை மையத்தில் உள்ள நாரத கானசபா.   தமிழ் உணர்வாளர்களும், பழ.நெடுமாறன்,  தமிழருவி மணியன்,  வீர.சந்தானம்,  சத்யராஜ் போன்ற பலரும் திரண்ட நிலையில் நிறைந்திருந்தது அரங்கம்.
வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் வைகோ. அவருடைய தயாரிப்பிலும், ஊக்கத்திலும் உருவாகியிருந்தது ”வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம்.
கி.பி.1730 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போட்டியிட்ட வேலுநாச்சியார் வரலாற்றின் ஒரு பகுதியைப் பின்னணியாகக் கொண்ட நாடகம். துவங்கியதில் இருந்து பல தகவல்களை விவரித்தபடி ஒரு ”வாய்ஸ் ஓவர்”
”ஆறுமொழிகளை அறிந்த நாச்சியார் தளராத ஊக்கத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தவர். தமிழ் மண்ணை மீட்டவர். சிவகங்கை பூமிக்குச் செல்வோம்” என்று குரல் ஓய்ந்ததும் துவங்குகிறது நாடகம்.
பிரிட்டிஷாருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த சிவகங்கைச் சீமையில் மன்னரான முத்துவடுக நாதரை தந்திரமாக கோவிலில் வைத்துக் கொல்கிறார்கள் ஆங்கிலேயர். அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார் மனைவியான வேலுநாச்சியார். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேயப்படை விரட்டுகிறது. கண்காணித்துத் துரத்துகிறது. வேலுநாச்சியார் தப்பித்து மக்கள் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் சென்று திப்புசுல்தானின் உதவியுடன் சிவகங்கையை மறுபடியும் மீட்கிறார். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் நாடகமாக்கியிருந்தார் இயக்குநரான ஸ்ரீராம் சர்மா. எண்பதுக்கும் மேற்பட்ட நடனக் குழுவினரின் நடனங்கள்,  ரகுநாதனின் இசை, மாறும் காட்சிகள் என்றிருந்தாலும் – காட்சி மாறும்போது இடையில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அத்துடன் வேலுநாச்சியாரை பிரிட்டிஷ்படை தேடும்போது அவருக்கு உதவியதற்காக பலியான உடையாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பற்றிய காட்சியில் – அவரை ஆங்கிலேயர் வந்து விசாரிப்பதும்,  அவள் சொல்ல மறுத்ததும் கொல்லப்படுகிற காட்சியை ஏன் இணைக்காமல் விட்டுவிட்டார்கள்?
வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை சர்மாவின் நடிப்பும், விரைவான நடனமும் நாடகத்திற்கு வலுவான அம்சம். இன்னும் ராம்ஜி, பிரியதர்ஷிணி என்று பலருடைய பங்களிப்பு நாடகத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கிறது. இஸ்லாமியப் பாடலையும் தகுந்த விதத்தில் பரத நாட்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
எதை இழந்தாலும் கால இடைவெளியில் தகுந்த துணை, மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதைக் காட்சிமொழியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ புராணங்களை முன்வைத்து நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல ஈழம் சார்ந்த நம்பிக்கையையும் புத்துணர்வோடு சொல்கிறது நாடகம். நாடகத்தின் இறுதியில் வரும் ”ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்கிற வரிகள் அந்த நம்பிக்கையைத் தான் புலப்படுத்துகின்றன.
எந்த நாட்டிய மரபாக இருந்தாலும் அதை அரசியல் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம்.
”வேலுநாச்சியார் ஜான்சிராணிக்கு முன்பே வாழ்ந்து போராடியிருந்தாலும் அவரை சரித்திரப் புத்தகங்களில் காண முடியாதிருப்பது வருத்தமான விஷயம்.
அப்படி இதுவரை காட்டப்படாத சரித்திரத்தை வைகோ மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடகம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்க
வேண்டும். பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் நடத்த வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கும் போது நாட்டுக்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்த மண்ணில் பிறந்த நடன அசைவுகளை நாம் கண்டோம். நல்ல விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும்”  என்றார் பத்மா சுப்ரமணியம்.
நிறைவாகப் பேசினார் நாடகத்தைத் தயாரித்த வைகோ. ”இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கலை. இனியொரு வீர சரித்திரத்திற்குத் தயாராக வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக இந்த நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி வாழ்ந்த 77 ஆண்டுகளுக்கு முன்னால் வாளேந்திப் போராடியவர் வேலுநாச்சியார். இந்த வரலாற்றைச் சொல்லும் நாடகம் என்பதால் இதைத் தயாரிப்பதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன்.
“வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் இருக்கின்றன. இத்தகைய வீரம் பொருந்திய நாடகத்தை உயிரோட்டத்துடன் நடத்தியிருக்கிறார்கள். வீரமும், மானமும் தமிழர் மரபோடு வந்தவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். ஈழம் அமைய வேண்டும், அமையும் என்பதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறோம்.” என்று பேசிய வைகோ இந்த நாடக உருவாக்கத்திற்காகச் செலவழித்த காலம் – நான்கு மாதங்கள்.

சனி, 23 ஏப்ரல், 2011

jkalaignar condemns jaya : உண்ணாவிரதத்தை கபடநாடகம் என விமர்சிப்பதா? செ.,வுக்கு க் கருணாநிதி கண்டனம்

உலகமே அதனை நாடகம் என்றுதான் சொல்லிக் கொண்டு உள்ளது. உணர்வின் அடிப்படையில் அமைந்தஉண்ணா நோன்பைக் காங்.  நாடகமாக ஆக்கும் வகையில் தவறான தகவலைத் தந்தது என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


சென்னை: ""இலங்கையில் போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் அங்கு சென்று வந்ததையும் ஜெயலலிதா தேவையில்லாமல் குறைகூறியுள்ளார்'' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இந்தோனேசிய அரசின் முன்னாள் தலைமை வக்கீல் தலைமையில் விசாரணை கமிஷனை ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் அமைந்தார். அந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது குறித்து கருத்து என்ன?

பதில்: கடந்த ஒன்பது மாதங்களாக நடந்த விசாரணை அறிக்கை இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதும் அதில் முக்கிய பகுதிகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அந்த அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அறிக்கைவிட்டுள்ள ஜெயலலிதா வழக்கம்போல், தேவையில்லாமல், போர் நடந்தபோது, நான் உண்ணாவிரதம் இருந்ததை கபட நாடகம் என்றும், தமிழக எம்.பி.,க்கள் இலங்கை சென்று வந்ததை குறைகூறியும், ஒரு அநாகரிகமான, அவருக்கே உரிய நடையில் தெரிவித்துள்ளார்.

கேள்வி: நான்கு வெளிநாட்டுக்காரர்கள் சென்னை வந்திருப்பதாகவும், அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மாற்றம் செய்யப்போவதாகவும் சுப்பிரமணியசாமி ஒரு தகவலை கூறியிருக்கிறாரே?

பதில்: இதற்கு பதில் சொல்லவேண்டிய பொறுப்பு தேர்தல் கமிஷனுக்குதான் உள்ளது. இந்த செய்தியில் தவறு இருப்பின், அடிக்கடி இப்படிப்பட்ட தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி பீதியில் ஆழ்த்தும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கையாவது எடுக்க முன்வரவேண்டும்.

கேள்வி: புட்டபர்த்தி சாய்பாபா உடல்நிலை மேலும் மேலும் மோசமாகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகிறதே?

பதில்: தமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் புட்டபர்த்தி சாய்பாபா ஆழ்ந்த அன்பு கொண்டவர். தனிப்பட்ட முறையில் என் மீதும் பாசம் கொண்டவர். அவர் உடல்நிலை குறித்து வந்துள்ள செய்திகளை அன்றாடம் மிகுந்த கவலையோடு படித்து வருகிறேன். சாய்பாபா உடல் நலம் தேறுவதற்கு பிராத்தனை செய்யும் பக்தர்களின் நம்பிக்கை வெற்றி பெற நானும் உளமாற வேண்டுகிறேன்.

செவ்வாய், 8 மார்ச், 2011

D.M.K. - cong. seats agreement : திமுக-காங்கிரசு தொகுதி உடன்பாடு

உடன்பாட்டுப் பேச்சு:  கா. 63; தி 60; கா 62; தி 61; கா 63; தி 60;  . . . . .  பின்னார்  இருவர் உரை: 1) ஏணி-பாம்பு ஆட்டம் மாதிரி என்ன நடக்குது? 2) தொகுதி உடன்பாடு பற்றிய பேச்சு. 1) மாறி மாறி எண்களைச்சொன்னால் அதுதான் பேச்சா? 2) இல்லை.  பேரம் முடிந்ததும் தொலை பேசி வரும். மணி அடிக்கும் பொழுது  யார்முறை வருகிறதோ அவர் சொன்னதுதான் எண்ணிக்கை. 1) எங்கிருந்து வரும்? 2)  உண்மையான உடன்பாடு நடக்கும் இடத்தில்  இருந்து வரும். இதோ மணி யடித்து விட்டது. கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை எனப் பெருமை கொள்ளும் வகையில் 63 தொகுதிகளைத் தாரை வார்த்தாகி விட்டது.  நாடகம்  இனிதே முடிந்தது. பங்கேற்ற  அனைவருக்கும் பார்வையாளர்களுக்கும் பாராட்டுகள். நாடகததைக் கண்டவர்களில் ஒருவனான 
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /


திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு


புதுதில்லி, மார்ச் 8- திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த தொகுதி பங்கீடு பிரச்னை இன்று மாலை முடிவுக்கு வந்தது.காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்க திமுக ஒப்புக் கொண்டது.இத்தகவலை மத்திய அமைச்சரும் தமிழக காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான குலாம் நபி ஆஸாத் இன்று தில்லியில் தெரிவித்தார்.முன்னதாக, சோனியாவின் வீட்டில் திமுக சார்பில் அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் அகமது பட்டேல், குலாம் நபி ஆஸாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் தொகுதி உடன்பாடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிய வருகிறது.
கருத்துகள்

eppadi koottani amaiththal enna intha kollaikkara koottaniyai makkal oda oda virattap povathu nijam.
By srirangam murali
3/8/2011 7:43:00 PM
நம் நாட்டை அந்நியனக்கு விற்ற இந்த தேசத் துரோகியை மக்கள் அடையலாம் கொண்டுக்கொள்வார்களா?
By இராஜா
3/8/2011 7:43:00 PM
இந்த நாடகத்தை நம்பி அந்தம்மா சி.பி.ஐ., சி.பி.ஐ.எம் , ம.தி.மு.க. வை இழுத்து அடித்தது மானங்கெட்ட பொழப்பு இல்லையா?
By elango
3/8/2011 7:40:00 PM
டே ஜால்ரா வாய மூடு
By ராஜேந்திரன்
3/8/2011 7:39:00 PM
மேட்டர் சப்புனு போச்யா ... போங்கய போங்க
By Maideen
3/8/2011 7:39:00 PM
நாடகம் ஒரு வழியாக முடிந்தது . இந்த நாடகம் எதனால் முடிவுக்கு வந்ததோ அது கடவுளுக்கு தான் வெளிச்சம். இது எப்படி போனாலும் 2g விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் நல்ல ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும் ,தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் இது தான் மக்கள் நினைப்பது .
By kalavenkat
3/8/2011 7:07:00 PM
மறுபடியும் சரணாகதி ஆகிவிட்டார் கருணாநிதி.நேரு குடும்பத்தின் காலடியில் எப்போதும் இருப்பவர் அல்லவா?இனி ராகுல் கூட இவரை புத்தி கோயிலில் சென்று பார்ப்பார்.போங்கய்யா நீங்களும் உங்கள் வீராப்பும்.
By கே.சுகவனம்
3/8/2011 7:04:00 PM
கூட்டு கொள்ளை கூட்டணி உருவாகி விட்டது.இனி ஒவ்வொரு தமிழ் உறவின் கடமையும், இந்த கூட்டணியை தோற்கடிக்க சபதம் கொண்டு.தமிழ் இன துரோக ஆட்சி, மற்றும் இரு குடும்ப ஆட்சியை வர விடாமல் தோற்கடிக்க சபதம் ஏற்க வேண்டும்.
By bparani
3/8/2011 7:03:00 PM
பைத்திய காரர்கள் - நாய்கள் காசுக்காக எதையும் செய்வார்கள்
By divya
3/8/2011 7:02:00 PM
நண்பர்களே! நான்தான் அப்பவே சொன்னேனே.. இந்த பெருசு சும்மா "பிலிம்" காட்டுதுன்னு. பெருசு ரொம்பவும் பிகு பண்ணினா, அப்புறம் அவனுங்க CBI-யை வைத்து இவனுங்க அத்தனை பேரையும் பிராண்டிப் புடுவானுங்க. எல்லாத்தையும் நம்ப ஏமாந்த சோனகிரிங்க நாமதான் இருக்கோமே!!!
By Abdul Rahman - Dubai
3/8/2011 7:01:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


D.M.K. ministers resignation drama postponed: திமுக அமைச்சர்கள் பதவி விலகல் நாளை வரை ஒத்திவைப்பு

காங்.-தி.மு.க. கூட்டணி உடையும் என எண்ணியவரகள் கனவு தகர்ந்தது.இடையிலே புகுந்து சால் ஓட்ட எண்ணியவரகள் சதி சிதைந்தது. எங்களிடையே உள்ள உறவு பிரிக்க முடியாத உறவு. நீரடித்து நீர் விலகாது.  கணவன் மனைவி  இ.டையே ஏற்படும் சிறு சிறு ஊடலை எல்லாம் வளர்த்துப் பகை மூட்ட எண்ணியவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். எங்கள் கூட்டணி மகத்தான  வெற்றி பெறும்.  இடையிலே வந்த கனவை மறந்து உற்சாகமாகக் கொண்டாடுவோம். -இப்படி ஓர் அறிக்கையை வெளியிட ஊடகங்கள் ஆயத்தமாக இருக்கட்டும்! வெட்கங் கெட்டவர்களின் நாடகத்தை  வேடிக்கை பார்ப்பவர்களில் ஒருவனான இலக்குவனார் திருவள்ளுவன்
 / தமிழே விழி! தமிழா விழி! /

திமுக அமைச்சர்கள் ராஜிநாமா நாளை வரை ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 7- கூட்டணி பிரச்னைக்கு தீர்வு காண பிரணாப் முகர்ஜி ஒருநாள் அவகாசம் கேட்டுள்ளதால், மத்திய அரசில் இடம்பெற்றுள்ள திமுக அமைச்சர்கள் ராஜிநாமா செய்வது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.திமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, இன்று இருமுறை முதல்வர் கருணாநிதியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் ஸ்டாலின் கூறினார்.இதனிடையே, திமுக-காங்கிரஸ் இடையேயான பேச்சு தொடர்கிறது என்றும், முழுத் தகவல் நாளை தான் தெரியவரும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள்

தொண்டர்களே தலைவர்களை நம்பி அண்ணன்,தம்பி மாமன், மச்சான் இவர்களை பகைத்து கொள்ளதிர்கள் நாளை அரசியலில் தலைவர்கள் தமிழ் இனத்தின் கொள்கைகளை எளிதில் அடகு வைத்துவிடுவார்கள் உண்மையான தமிழன் நாம் தான் நாணி குறுகி வெட்கபட்டு தலைகுனியவேண்டும்
By கே.vijayakumaar
3/7/2011 11:18:00 PM
நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு, நான் சொன்ன கேட்பது யாரு நாளும் நீ பேப்பர பாரு! நீ போட்டு நானும் போட்டு என்னாச்சு நம்ம ஒட்டு! கூத்தாடி பொழப்பா போச்சு ஜனங்க பாடு இப்போ ததீங்கனதம் ? கவிஞர் வாலி 23 வருடங்களுக்கு முன் எழுதியது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது இப்போது தெரிகிறது, கவிஞர் வாலி அவர்களே உங்கள் நண்பர் கருணாநிதிக்கு ஒரு முறை இந்த பாட்டை பாடி காண்பிக்கவும்
By சுந்தர்
3/7/2011 10:43:00 PM
டே டே, போதுமடா ஒங்க டிராமா, இந்த மாதிரி நீங்க கொவிசுகறதும் அவங்க வந்து சமாதானம் பண்றதும்., எல்லோருக்குமே தெரியும்.
By முட்டாள்
3/7/2011 10:30:00 PM
kuttani illama yarume jeyika mudiyada.ellam bayam thaan kaaranam.suya balam illadavan thaan kuttu serndhu eppadayavadhu thannai kaathu kholla ninaippan.
By prabakaran
3/7/2011 10:29:00 PM
இப்படி நடக்கும் என்று ஏற்கனவே தெரியும் நீங்க போடுற டிராமா ... காங்கிரஸ் போடுற குட்டிகரணம் .... ஏதோ காரணம் இருக்கு..அத்தனையும் ஓட்டையாக போக போகுது....
By tamilkkattan
3/7/2011 9:52:00 PM
பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் spectrum ஊழல் கட்சியோடு எதற்காக இத்தனை தூரம் கெஞ்சவேண்டும் தைரியம் இருந்தால் தனித்து நின்று சொந்த பலத்தை நிருபிக்கலாமல்லவா? மீண்டும் கூட்டணி சேர்ந்தால் இளங்கோவன் காங்கிரசை விட்டு வாய் மூடி ஒதுங்கி இருப்பாரா?
By ஷர்மிளாகோபு
3/7/2011 9:49:00 PM
Both DMK & Cong are hand in hand in corruption and looting public money.They will not opt for divorce.It is hard bargaining.Only common man will be made fool.The politicians are worried only about their survival.It is only eye wash.People should throw the cong-Dmk alaiance
By sundaresan
3/7/2011 9:40:00 PM
"நான், அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ, அழுவது போல அழு" என்பது போல, தி மு கவும், காங்கிரஸ் கட்சியும் சொல்லி வைத்து கொண்டு ' நாடகம் ' போடுகிறார்களா? கேட்கிறவன், கேன பயலாக இருந்தால், கேழ்வரகில் நெய் வடியுமாம். கதை, சுவாரசியமாக தான் போகிறது.
By பி.டி.முருகன் திருச்சி
3/7/2011 9:29:00 PM
onrume puriyavillai.naam seiwadu sariyaga irundaal yarukkum anja vendiyadillai
By prabakaran
3/7/2011 9:28:00 PM
ஆஹா! பிளாக் மெயில் நாடகத்தில் அடுத்த கட்ட ஒரு நாள் suspense ?
By m perumal
3/7/2011 9:24:00 PM
நாடகமெல்லாம் கண்டேன் உன் ஆடும் மொழியிலே .......... சும்மா டிராமா போட்டு காரியம் சாதிக்க நெனைப்பு. என்ன நெனைச்சு என்ன பண்ண. இந்த தடவை ஆப்பு தயார்.
By மோகன் வியன்னா
3/7/2011 9:11:00 PM
மானம் கெட்ட ஜென்மங்கள் இவர்களின் நாடகங்கள் மக்களுக்கு தெரியாது என எண்ணிவிட்டார்கள்.. த்து.எச்சில் நாய்கள்.
By பாளையம், சைனா.
3/7/2011 8:38:00 PM
மக்களை ஏமாற்ற நினைக்கும் இவர்களுக்கு மக்கள் அல்வா கொடுப்பர்
By Kumaresh
3/7/2011 8:33:00 PM
ரூம் போட்டு யோசிபங்களா ...நாளைக்கு சொல்லுவானுங்க எங்கள் கூட்டணி பலமிருக்கு .எங்களை பிரிக்க எதிர்கட்சிகள் திடமிட்டர்கள் அது நடக்காது என்று ...எவன் செத்தால் எனக்கு என்ன
By kiln
3/7/2011 8:10:00 PM
ஊழலில் இருந்து விடுதலை இதுதான் திமுக கொங்கிரஸ் அடிப்படை பிரச்சனை இல்லாவிட்டால் தேர்தலுக்கு களைஞர் டீவீயும் இல்லாமல் போகும் கனிமொழிக்கு சிறை பயம் அதுதான் இப்படி
By pillai
3/7/2011 8:08:00 PM
அழகிரி தன் பங்குக்கு ஒன்னும் சொல்ல?
By Jagadeesh
3/7/2011 8:06:00 PM
நன்று, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ,
By chandru
3/7/2011 8:04:00 PM
mindum kankirasutan kuuttani thimukkaukku palakinamay
By ragul
3/7/2011 8:01:00 PM
தி மு க முழு வெற்றி பெற வேண்டுமானால் என் தலைவர் சிறுது விட்டூ கொடுதல் போதும், ௦௦
By ஜான் selvan
3/7/2011 7:58:00 PM
பில்டிங் ஸ்ட்ரோங் பசெமென்ட் வீக் ....
By ANAND (BANGALORE)
3/7/2011 7:49:00 PM
தமிழ் நாட்டு மக்களுக்கு நடந்தது அனைத்தும் நாடகம் என்று தெரியும். பிறகு என்ன ? நாளை மீண்டும் கூட்டணி என்ற செய்தி இதே தினமணியில் வரும்.
By சுரேஷ்
3/7/2011 7:39:00 PM
இது தி மு க வின் நாடகம்
By மணிகண்டன்
3/7/2011 7:36:00 PM
ரெண்டு பயலுகளும் மானங்கெட்ட பயலுக!
By தமிழ்த்தேனீ
3/7/2011 7:32:00 PM
In 1970's there used to sell one "Quick-fix"- something similar to 'Fevicol'- which was sold with a famous slogan, "It can join anything except broken hearts". We may as well add the following terms too; "It can join anything except broken hearts and broken alliance-parties before an important assembly polls". ???
By MURTHY
3/7/2011 7:26:00 PM
ரோசமிருந்தால் இன்னைக்கே ராஜினாமா பண்ணி தொலைய வேண்டியதுதானே என்ன மானங்கெட்ட பொழைப்புக்கு நாளைக்கு வரை காத்துகிட்டு அப்ப உங்களுக்கு உண்மையிலேயே சூடு சொரணை இல்லை ஆமாம் இல்லாவிட்டால் யாரு நாளைக்கு உள்ளே போயி களி தின்கிறது
By இனியவன்பாரூக் மலேசியா
3/7/2011 7:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *