சனி, 21 ஜூலை, 2012

உதவ முன் வாருங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் சோகம்!

உதவ முன் வாருங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் சோகம்!

கார்த்திக்


இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘செய்தி’ பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் திரைநீதி செல்வம்.
இனக்கலவரத்திற்கு பின் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர், இங்கு திரைப்பட செய்தி தொடர்பாளராகவும், மனோரமா போன்ற நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
ஓரளவு பிரச்சினையின்றி நகர்ந்து கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீர் புயல். அவரது மகள் தாரணியின் கணவர் எஸ்.சீனிவாசன் (வயது 48) திடீர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தன்னாலான முயற்சியால் சுமார் 2 லட்சம் வரை செலவழித்துள்ள அவர் இன்று மிக மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
சீனிவாசனுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர் கீமோ தெரபி சிகிச்சை அளித்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை. ஒவ்வொருமுறை கீமோதெரபி செய்யும் போதும் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே திரைநீதி செல்வத்தின் நெருக்கடியைத் தீர்க்க முன்வரும் நண்பர்கள், வாசகர்கள் கீழ்காணும் மருத்துவமனை முகவரிக்கே தங்களின் உதவியை காசோலை மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அளிக்கலாம்.
Vasantha Subramanian Hospital pvt.ltd என்ற பெயரில் காசோலையோ, டி.டி.யோ அனுப்பலாம். பின்புறத்தில் மறவாமல் s.srinivasan. I.D.No 9041 என்று குறிப்பிடவும்.
வங்கி முகவரி- அக்கவுன்ட் நம்பர் O.D.121168
city union bank. Annasalai. Chennai


திரை நீதி செல்வத்தின்தொலை பேசி எண்ணை யும் தெரிவிக்கலாம். வங்கிக் கணக்கு விவரம் (சேமிப்புக் கணக்கா அல்லது நடப்புக் கணக்கா?,வங்கிக் குறியீட்டு எண் முதலியன இருப்பின் பணம் அளிப்பவர்கள் எளிதில் அனுப்ப இயலும். தமிழ் மருத்துவம் மூலம் பலர் புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளனர். விரைவில் திரு சீனிவாசன் நலம் பெறுவாராக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

2 கருத்துகள்:

  1. Cancer -புற்றுநோய்
    கேன்சர் (புற்றுநோய்) பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களைப்பற்றிய முழு விபரங்களுடன் naturalfoodworld@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும். இல்க்குவனார் திருவள்ளுவன் ஆசிப்பபடி குணமடைய நிறைய வாய்ப்பு உண்டு. நம்பிக்கையுடன் செயல்படவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை மருததுவத்திலும் நலமாக்க இயலும். ஆனால், பெரும்பாலும் இறுதிக்கட்டத்தில்தான் இதுபோன்ற மருத்துவமுறையை நாடுகின்றனர்.

      நீக்கு