அக்டோபர் 03,2008,10:30 IST
தனக்குத் தானே தலைவனாயிருக்கும் அளவிற்கு தன்னை
தகுதிப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன் ஆவான். இப்படிப்பட்டவன்
ஆண்டவனுக்கு நிகராக மதிக்கத் தக்கவன். தரும சிந்தனை என்பது
உயர்ந்தவர்களுக்கு மட்டுமே உள்ள குணம் என்று நினைக்கிறோம். அது
ஒவ்வொருவரும் தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படை
கடமையாகும். தியானத்தை ஒருபோதும் கைவிடாதீர்கள். அதனால் உண்டாகும் சக்தியை
எளிதாக எடை போடாதீர்கள். மனிதன் தான் நினைத்தபடியே வாழும் தகுதியை தியானம்
தரவல்லதாகும். கலியுகம் எதுவரை நீடிக்கும் என்றால், மனிதன் எதுவரை
அநியாயம் செய்கிறானோ அதுவரை நீடிக்கும். அநியாயம் நீங்கினால் உலகில்
கலியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.
இந்த உலகத்திலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத்துன்பம் மிகவும் கொடியது. வறுமையே எல்லாச் சிறுமைகளிலும் மோசமான சிறுமையாகும். மற்ற உயிர்களிடம் கருணையும் அன்பும் கொண்டால் உயிர் வளரும். அன்பிருக்கும் இடத்தில் ஜீவசக்தி குடிகொண்டிருக்கும். அவனிடத்தில் உலகவுயிர்கள் அனைத்தும் நட்போடு உறவாடும்.

பாரதியைப் பாரதியாகக் காட்டியமைக்கு நன்றி. படங்கள் இல்லாதோருக்குக் கற்பனைப் படங்களைத் தேடவேண்டும். நம்காலத்தில் வாழ்ந்த நம் மூதாதையரால் பார்த்துப் பழகிய பாரதிக்கு வேறு படங்களைப் பயன்படுத்துதல் என்ன வகையில் நியாயம்? நன்றி நண்பரே, நன்றி!
பதிலளிநீக்கு