tamil medium லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil medium லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழில் படித்தால் கிடைக்குமா வேலை? - இராணி இதழில் என்கருத்துரை job priority to tamil medium students?



தமிழ் வழிக்கல்வி  தொடர்பாக என் கருத்தைக் கே ட்டு வெளியிட்ட  இராணி இதழுக்கு நன்றி.


அண்ணன் பேராசிரியர்  முனைவர் மறைலை அவர்கள் அமெ ரிக்காவில் தமிழ் கற்பித்த நினைவு மேலோங்க  ‌ அமெ ரிக்காவில் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த பே ராசிரியர் என இடம் பெ ற்றுள்ளது என எண்ணுகிறேன். நான் தமிழ் நாட்டிற்கு வந்த சில சப்பானியர்களுக்கும் இங்கு பயிலும் அயல் மாநில மாணாக்கர்களுக்கும் நடை முறை வாழ்க்கைக்கும் பணி வாழ்க்கைக்கும் தேவையான  சிறிதளவு தமிழ‌ை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதனை எண்ணிய   பாராட்டிற்குரிய செய்தியாளர் திரு இரா.சின்னதுரை  அவ்வாறு குறிப்பிட்டு விட்டார் போலும். எனினும் தமிழ் வழிக்கல்வி பயில்கின்றவர்களுக்கு  வே லை வாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்  என விழை யும்  அவருக்கும்  இராணி ஆசிரியருக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

புதன், 23 பிப்ரவரி, 2011

Refused loan to tamil med.eng.student: தமிழைத் தேர்வு செய்ததால் வங்கிக் கடன் மறுப்பு: படிப்பிற்கு முழுக்கு போடபொறி.மாணவர் முடிவு

இப்படிப் பாலமுருகன்கள் பலர் இருக்க வேண்டும். இச் செய்தியை வெளியிட்ட தினமலருக்குப் பாராட்டுகள். அரசு உடனே தலையிட்டு உரிய கடன் உதவி அளிக்கவும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழ் வழிப் பயில்வோர் வேலைக்கு உறுதி அளிக்க வேண்டும்.  தமிழ் வழி மாணவர்க்கான கட்டணைத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
<  தமிழே விழி! தமிழா விழி! >
 
ராமநாதபுரம் : "தமிழைத் தேர்வு செய்த இன்ஜினியரிங் மாணவருக்கு, வங்கிக் கடன் வழங்க முடியாது' என, அதிகாரிகள் கைவிரித்து விட்டதால், படிப்புக்கு முழுக்கு போடும் நிலையில் மாணவர் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
 

வாசகர் கருத்து (18)
Kavee - Jeddah,சவுதி அரேபியா
2011-02-22 11:01:38 IST Report Abuse
மேடைக்கு மேடை, டிவி க்கு டிவி, கல்யாணம், கருமாதின்னு கூட பாக்காமல் வாய் கிழிய தமிழ் தமிழ்னு கத்தி தமிழர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களே அரசியல்வாதிகளே இந்த செய்தி படிச்சீங்களா? ராமநாதபுரம் தமிழ் நாட்டுலே தானே இருக்கு வங்கி அலுவலர்களின் வார்த்தை கேட்டீர்களா!!! இவரை போல எத்தனை எத்தனை படித்த / படிக்க ஆசை படும் இளைன்ஞர்கள் தமிழ் நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்காததால் படும் வேதனை ........ சொல்லி மாளாது மாணவ மணிகளே இந்த வீணர்களின் பேச்சை நம்பி எதி காலத்தை கோட்டை விட்டு விடாதீர்கள் .... அவனவன் அவன் குடும்பம் நலனுக்குத்தான் ...நாமும் நம் வளத்துக்கு மட்டும்... இனி யாரை நம்பியும் பயன் இல்லை ..... நமக்கு நாமே
  • Rate it:
  • 4
  •  
  • 2
Share this comment
Raja Durairaj - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:59:20 IST Report Abuse
அட கொடுமையே ! தமிழுக்கு இது சாப கேடு
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Johnson Ashok - ooty,இந்தியா
2011-02-22 10:46:07 IST Report Abuse
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்த பாலமுருகன்(18) என்பவருக்கு வங்கி கடன் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன். தமிழ் தமிழ் என்று பறைசாற்றுவது வெறும் பெயரளவில் இருகின்றதே தவிர, அதை முழுமையாக செயல்படுத்தவதில் பலர் முன் வருவதில்லை. தமிழ் என்றால் வேலையே இல்லை என்று சொல்லி உதவி செய்யாமல் விட்டு விடுவது மிகவும் வருத்ததிற்குரியது.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Michael - Singapore,சிங்கப்பூர்
2011-02-22 10:44:25 IST Report Abuse
நான் ஒரு தாய்மொழி ஆர்வலன். மக்கள் அனைவரும் அவரவர் தாய்மொழியை தாயைப் போல கருத வேண்டும் என்று நினைக்கிறவன். ஆனாலும் கூட, தற்போதைய சூழ்நிலையில் தமிழில் பொறியியல் கல்வி கற்கலாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. முதலாவதாக, விரும்புகிறோமோ இல்லையோ, உலகத்தோடு ஒன்றிணைய ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கணக்கற்ற எண்ணிக்கையில், ஆங்கிலத்தில், உலகின் ஒவ்வொரு மூலையிலிமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அவற்றை தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்ய நமக்கு வளங்கள் இல்லை, குறிப்பாக நேரமில்லை. இந்தி வேண்டாம் என்று நம் உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான நிலைப்பாடு வெற்றி பெற வேண்டுமென்றால், நம் பிள்ளைகள் ஆங்கிலத்தில் உச்ச தேர்ச்சி அடைந்தேயாக வேண்டும். அதற்கு இடைஞ்சலாக இந்த தமிழ் வழி பொறியியல் படிப்பு இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த மாணவன், இப்படி ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. வங்கி, இப்படி ஒரு காரணத்தை கூறி இருப்பது அதிகப்பிரசங்கித்தனம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பது நமது அரசாங்கத்தின் தெளிவற்ற நிலையையே எடுத்துக் காட்டுகிறது. என் நிலைப்பாடு இதுதான்: தாய் மொழி தமிழை உணர்வுப்பூர்வமாக கற்றுத் தேருங்கள். ஆங்கிலத்தை, உலகுடன் ஒன்றுவதற்கு, அறிவுபூர்வமாக கற்றுத் தேருங்கள். உணர்வுடனும் அறிவுடனும் வாழும் தமிழ் மாந்தருக்கு, தமிழும் ஆங்கிலமும் இரு கண்கள்.
  • Rate it:
  • 8
  •  
  • 2
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
2011-02-22 10:41:38 IST Report Abuse
உண்மை சுடுகிறதோ ...?
  • Rate it:
  • 0
  •  
  • 3
Share this comment
Balasubramanian - chennai,இந்தியா
2011-02-22 09:48:20 IST Report Abuse
பாலமுருகனுக்கு மட்டும் இது போன்று நடக்கவில்லை நண்பர்களே, வங்கிகள் கடன் கொடுக்க மாட்டோம் என்பதற்கு காரணங்களைத் தேடுகிறார்கள். தம்பி பாலமுருகா ஆர் பி ஐ இல் புகார் செய்யுங்கள். உங்களுக்கு வங்கிக் கடன் உறுதியாக கிடைக்கும். வழிகாட்டு உதவி தேவை எனில் www.ssda2009.blogspot.com.இந்த வலைத்தளம் உதவும். இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள் email - ssadbookbank@yahoo.in
  • Rate it:
  • 5
  •  
  • 0
Share this comment
Mansoor - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-02-22 09:41:02 IST Report Abuse
இதுக்கு நம்ம தமிழ் காவலர் என்ன சொல்றார்? - " இதை வங்கியிடம் போய் கேளுங்கள்" - என்று பதில் அளித்துவிடுவார்
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
gomshankar vetrivel - singapore,சிங்கப்பூர்
2011-02-22 09:18:22 IST Report Abuse
தயவு செய்து பாலமுருகனுக்கு உதவி செய்ய முன் வரலாமே! நடப்பவைகளுக்கு நாமும் நம்மை சுற்றி இருக்கும் தமிழ் சமூகம் ஒரு காரணம் தான். எந்த வித ஒருங்கிணைந்த எதிர்ப்போ கருத்தோ ஒற்றுமையோ இல்லை. என்ன நடந்தாலும் தமிழகமே வீழ்ந்தாலும் விமர்சனம் செய்ய தவறுவதில்லை, மாறாக இனிமேல் நடக்காமிருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்போம் செய்வோம்.
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
PR Makudeswaran - madras,இந்தியா
2011-02-22 09:09:04 IST Report Abuse
தமிழ் பற்று வேண்டியதுதான்!! ஆனால் வாழ்க்கை பயணத்திற்கு தமிழ் அறிவு மட்டும் கை கொடுக்காது ?அரசியல்வாதிகள் மொழி பற்றி பேசுவார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு எல்லா மொழி அறிவும் கிடைக்க வழி வகை செய்வார்கள். நாம் அவர்களை பின்பற்றினால் நம் கதி அதோ கதிதான்.வங்கி பொருளாதாரம் என்பது நாட்டின்,நம் மக்களின் பொருளாதாரம். அதை காக்க வேண்டும்.கடன் கொடுத்தால் அதை திருப்பி செலுத்த வேண்டும்.அப்பொழுதான் அடுத்த நபருக்கு கடன் வாய்ப்பு கிடைக்கும். வங்கி பணத்தை கொள்ளை அடிக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் அடியோடு களை எடுத்தே ஆக வேண்டும் .
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
°ღ• ŚÁŤℋℐŶÁ ÁℛÚПÁČℋÁĹÁ� - tirunelveli ,இந்தியா
2011-02-22 08:51:18 IST Report Abuse
யாரோ ஒரு சில குள்ள நரிகளின் தந்திர வாழ்விற்கு இலக்கு இளைய சமுதாயம். இதை உணர தாமதமாகும் போது காலம் வெகு தூரம் கடந்திருக்கும். இளைஞனே இனியாவது விழித்திரு. கயவர் யார்? கள்வன் யார்? காரியவாதி யார்? என அலசி உன் வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் சரியான ஒரு தீர்ப்பு வழங்கு. உன் ஒட்டு குள்ள நரி கூட்டத்திற்கு வைக்கும் வேட்டு.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
par ban - london,யுனைடெட் கிங்டம்
2011-02-22 07:10:43 IST Report Abuse
எல்லாம் கலைஞர் செயல், கலைஞர் இருக்க பயம் ஏன்?
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
sathya / ilangai - colombo,இலங்கை
2011-02-22 07:09:50 IST Report Abuse
மஞ்ச துண்டு "செந்தமிழ்" மாநாட்டு செலவு செய்த பணத்த இங்க குடுத்தா அட்லீட்ஸ் ஒரு குடும்பமாவது பொழைக்கும்.."election " சமயத்துல இந்த நியூஸ் வந்தது நல்லதா போச்சு...டவுசர் தாஸ் லருந்து, தா.பாண்டியன் வரைக்கும் queue ல நின்னு இவருக்கு பணம் குடுப்பாங்க, அந்த வங்கி அதிகாரிக்கு ஆப்புதான்...இதுதான் அரசியல்...சரி நான் வர்றேன் விஜயகந்த் கூவறாரு
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
2011-02-22 05:12:45 IST Report Abuse
வங்கி அதிகாரிகள் மக்கள் பணத்தில் விளையும் காளான்கள். ஆனால், ஏழைகள் மீது இளக்காரம்.
  • Rate it:
  • 20
  •  
  • 3
Share this comment
Srinivasan N - chennai ,இந்தியா
2011-02-22 05:01:51 IST Report Abuse
மஞ்ச துண்டை போல் தமிழில் படியுங்கள் வாழலாம் என்ற தவறான உபதேசத்தை தராத அதிகாரிகளை பாராட்டுகிறேன்...மாணவரின் கல்வி பாதிக்காத வகையில் வேறு உதவிகளை செய்திருக்கலாம்..
  • Rate it:
  • 18
  •  
  • 7
Share this comment
Govind - Delhi,இந்தியா
2011-02-22 04:19:20 IST Report Abuse
இந்த அளவுக்கு மாணவனின் மனதை நோகடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .. என்னுடைய நண்பர்கள் ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமிழ் நாட்டின் மிக சிறந்த கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டபடிப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் சில வருடம் காத்திருந்ததை நானே பார்த்திருக்கிறேன் ..அப்படி இருக்கும் போது இந்த அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாது
  • Rate it:
  • 26
  •  
  • 4
Share this comment
AMMIYA - DENHEDLER,நெதர்லாந்து
2011-02-22 03:54:00 IST Report Abuse
இது நல்ல அழகான வேடிக்கையா இருக்கிறது......பாலமுருகன் சொன்னதுபோல செம்மொழி தமிழாம் என்று கோடிக்கணக்கில் செலவுசெய்து நடாத்தினார்கள்???????..ஆனால்,தமிழ் காத்தில பறந்து விட்டது.....வெறும் வாய்ச சவால் தானா?...பாலமுருகனுக்குக் கலைகுடும்பம் பதில் சொல்லுமா?அல்லது பே..பே.. தானா??????
  • Rate it:
  • 28
  •  
  • 2
Share this comment
KADAYANALLUR SHAHUL HAMEED - LONDON,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
2011-02-22 01:33:39 IST Report Abuse
TAMIL COULD BE BETTER THAN MOST LANGUAGES IN THE WORLD IN MANY WAYS. BUT PRACTICALLY OUR POLITICIANS DID NOT RAISE ANY CAREER PROSPECTS FOR THE TAMIL ASPIRANTS. WE ALL TAMILS SHOULD UNDERSTAND THAT WE MUST NEVER EVER TRUST POLITICIANS REGARDING TAMIL. IF THEY SHOUT ABOUT TAMIL, IT MEANS VOTES. TAMIL CONFERENCES ARE JUST FOOLING AROUND THE PEOPLE. I KNOW KARUN USING ENGLISH WORDS DURING PRESS INTERVIEWS TEN YEARS BACK. LEARN AS MANY LANGUAGES AS YOU CAN. OR PREPARE YOURSELF FOR THE WORST CONSEQUENCES




செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

Education through Thamizh/tamil medium : தமிழ்வழிக் கல்வியும் கலைச்செல்வங்களும்

உலகத்தாய்மொழிநாளை (௨௧.௨.) முன்னிட்டு இக்கட்டுரையை வெளியிட்ட தினமணிக்குப் பாராட்டுகள். நல்ல கட்டுரையை அளிக்கும் கட்டுரையாளர் இடையிடையே <<கடைப்பெயர்கள் தமிழில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இது போலித்தனமானதும் துரோகத்தனமானதுமாகும். >>என்பது போல் குழும்புகிறார். தாய்மொழிக் கல்வி தேவை என்பதற்குத் தமிழில் பெயர்பப்லகை வைப்பது எப்படி போலி நடவடிக்கை ஆகும். வேலை வாய்ப்பு மொழியாகத் தமிழை மாற்றினால் - தமிழ் அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலை தொழில் வாய்ப்புகள் என அரசு நடைமுறைப்படுத்தினால் -மிக விரைவில் தமிழ் வழிக் கல்வியும் நடைமுறைக்கு வரும். தெளிவில்லாத கட்டுரையாளரிடம் தெளிவான செயதிகளும் வெளிப்பட்டமைக்குப் பாராட்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்வழிக் கல்வியும் கலைச்செல்வங்களும்

ஓரு வளமான நாட்டுக்கு அடிப்படை வளமான கல்வி முறையே ஆகும். அதுவும் தாய் மொழிக் கல்வி முறையே ஆகும். உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் - இந்தியா உள்பட ஒரு சில ஆசிய ஆப்பிரிக்க நாடுகளைத்தவிர, தாய்மொழி மூலமாகவே கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மனித ஆற்றலை வளமையாக்கவும், ஒருவரது படைப்பாற்றலை அதிகப்படுத்தவும் தாய்மொழிக் கல்வியால் மட்டுமே முடியும். இது அறிவியல்பூர்வமாக நிரூபணமான உண்மை. பல முன்னேறிய நாடுகள் இதற்குச் சான்றுகளாக இருக்கின்றன. மனிதனது சிந்தனைத் திறனுக்கும் தாய்மொழிக்கும் தொடர்பு இருக்கிறது. தாய்மொழியிலேயே ஒருவர் அதிகம் சிந்திக்க முடியும். ஒருவரது சிந்தனை ஆற்றல் முழுவதும் தாய்மொழியில் ஊடாடி மூளையில் பதிந்து போகிறது. வெளிஉலகத்தைப் பார்க்கத் தொடங்கும் குழந்தையின் மூளையில் வெளிஉலகமே, தாய்மொழியில்தான் பதிந்து போகிறது.சிந்தனை ஆற்றலை வளர்ப்பதும், படைப்புத் தன்மையை உருவாக்குவதும், நாகரிகமான சமூக மனிதராக மாற்றுவதும், சமூகப் பண்பாட்டைக் காப்பாற்றிக்கொண்டே அதை மேம்படுத்துவதும் சிறந்த கல்வியின் நோக்கம். நம்முடைய கல்விமுறை - குறிப்பாக, நாலைந்து பாடத்திட்டங்களைக் கொண்ட ஆங்கில வழிக் கல்விமுறை - மேற்கண்ட திறமைகளை வளர்ப்பதற்குப் பயன்படுகிறதா என்று மனசாட்சிப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  மொழி என்பது நமது கருத்துகளை, அறிவை, தகவல்களை மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவி என்று மட்டும் சுருக்கிக்கொள்ள முடியாது. சமூகத்தில் நிலவுகிற வளமான செறிவுள்ள அறிவுபூர்வமான கருத்துகள் அந்தச் சமூகத்தில் புழங்கும் மொழியைச் சிறப்பான நிலைக்குக் கொண்டு செல்கிறது. கருத்துகள், கருத்துகள் அடிப்படையிலான செயல்கள் இன்றி மொழி இல்லை. ஒரு மொழியை - வடிவம் மற்றும் வார்த்தைகள் தெரிந்து - பேசுவதாலேயே அந்த மொழியில் திறமைசாலியாகிவிட முடியாது. ஒரு மொழியில் உள்ள அறிவியல் மற்றும் கலைப்பொக்கிஷங்களை அறிந்தால் மட்டுமே அதில் திறமைசாலியாக முடியும். ஆனால், நமது அன்றாட வாழ்வில் ஆங்கிலம் பேசுவது, தமிழரின் அதிகபட்சத் திறமை என்பது பழகிப்போன ஒன்று. இதற்குக் காரணம் என்னவென்றால் தற்காலத்தில் பிழைப்புவாதமே  தமிழரின் கலாசாரமாகிப்போனதுதான். அப்படியெனில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் மூன்று வயதுக் குழந்தைமுதல் இறக்கப்போகிற முதியோர்வரை அனைவரும் மிகுந்த திறமைசாலிகளே. ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த முதலாளிகள், ஆங்கிலமும் தெரிந்த குமாஸ்தாக்களையே விரும்புகிறார்கள். அதிகச் சம்பளம் தருகிறார்கள் என்றவுடன் எது திறமை என்பதை மறந்து, ஆங்கிலம் பேசுவது திறமையாகிப் போகிறது. இந்தச் சந்தர்ப்பவாத வாழ்க்கைமுறையில் நாட்டுப்பற்று, தேசமுன்னேற்றம் திறமை, படைப்பாற்றல் எல்லாம் காணாமல் போய்விடுகின்றன. அறிவியல் என்பது உலகம் முழுவதும் பொதுவான ஒன்று. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியில் இருக்கிறதே தவிர, அதன் சாராம்சமும் உள்ளடக்கமும் ஒன்றுதான். கூடங்குளம் அணுஉலையில் தாய்மொழியில் படித்த ரஷியப்  பொறியாளர்கள்,  புகலூர் காகித ஆலையில்  தாய்மொழியில் படித்த ஜப்பான் பொறியாளர்கள் ஆங்கிலம் தெரியாமலும், தமிழ் தெரியாமலும் இயந்திரங்களை நிறுவிவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை, தாய்மொழியில் படிக்காத ஆங்கிலம் தெரிந்த நமது பொறியாளர்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். நம் நாட்டில் - குறிப்பாக, தமிழ்நாட்டில் - தமிழ்வழிக்கல்வி அவசியம் என்று அறிவுஜீவிகள் மனப்பூர்வமாகவும், ஆளும் அரசியல்வாதிகள் பேச்சளவிலும்  சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அது முடியாமல் போய்க்கொண்டு இருக்கிறது.தமிழ்மொழியை அரசியலாக்கி, தேர்தல் வெற்றிக்குப் பயன்படும்பொருளாக மாற்றி, உணர்வுரீதியாக பொதுமக்களை மாற்றி இருக்கிறார்களேயன்றி அறிவுரீதியாக இல்லை. மேடைதோறும் தமிழ் வளர்ப்போம் என்று சவால் விடுகிறார்கள். கடைப்பெயர்கள் தமிழில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.  இது போலித்தனமானதும் துரோகத்தனமானதுமாகும். எதனால் ஒரு மொழி வளருமோ அதைவிட்டுவிட்டு, போகாத ஊருக்கு வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு மொழியை வாழ்வாதாரமாக, அறிவை உள்ளடக்கியதாக, வேலை வாய்ப்பை உருவாக்குவதாக ஆக்காமல் அதை எப்படி வளர்க்க முடியும்? சரி, தமிழ்மொழி எப்பொழுதுதான் வளரும். இது தமிழ்மொழி வழிக் கல்வி நடைமுறையில் இருந்து  அதன்மூலமாகக் கண்டிப்பாகச் சாத்தியமாகிற சிறந்த விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் உருவாகி அறிவியலிலும் கலைத்துறையிலும் உலகத்தரமான படைப்புகள் வரும்போது தமிழ்மொழி வளரும். ஏனெனில், உலகில் மற்ற மொழிக்காரர்கள் அப்பொழுதுதான் தமிழைப் படிக்கத் தொடங்குவார்கள்.அறிவுத்தளத்தில் தமிழில் என்னென்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள அறிவாளிகள் தமிழைப் படிக்கத் தொடங்குவார்கள். அப்படித்தான் இப்பொழுது ஆங்கிலம் ஜெர்மன், ருஷ்ய, சீன மற்றும் பிற மொழிகளை உலகம் முழுவதும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.   ஆனால், இன்றைய தமிழ்ச்சூழலில் ஆங்கிலம் தெரியாமல் நாங்கள் எப்படி அமெரிக்கா செல்வது என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பாத்தியமும்  சொகுசு வாழ்வுமே குறிக்கோளாக இருக்கிறது. நல்ல சம்பாத்தியம்கூட நம்முடைய பண மதிப்பில்தான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வறுமைக்கோட்டுச் சம்பளம் நம்முடைய ரூபாயில் லட்சங்களாக இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு பதில்கள் உண்டு. அந்தப்  பதில்களும் ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்து இருக்கலாம். தெரியாதது மாதிரி நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அதனால், நாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. ஐரோப்பிய  நாடுகளில் அவரவர் தாய்மொழியில் படித்தே எங்கும் வேலைபார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் அறிவுப்பரிமாற்றமும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மொழிபெயர்ப்புச் செய்து கொள்கிறார்கள்.  அதுவும்போக, அமெரிக்காவில் ஆங்கிலம் தெரிந்த இந்திய கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அதற்கும் மேலாக சீனாவைச் சேர்ந்த கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆங்கிலம் தெரியாமல் அங்கு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு மொழி ஒரு பிரச்னை இல்லை. அப்படியும் ஆங்கிலம் வேண்டுமென்றால் கல்வியைத் தாய்மொழியில் கற்றுக்கொண்டு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தைப்  பேசவும் எழுதவும் பள்ளிக் கல்வி முடிக்கும் முன்னரே அனைவருக்கும் கற்றுக்கொடுக்கலாம். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் இங்கிருந்து மேற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டுக்குள் அவர்கள் மொழியைக் கற்றுக்கொடுத்து அந்த மொழியில்தான் பட்டப்படிப்பையும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.தமிழ்நாட்டில் இருந்து பிழைப்புத் தேடி மும்பை செல்லும் படிக்காத இளைஞர்கள்கூட ஆறு மாதத்தில் இந்தி பேசமுடியும்பொழுது ஆங்கிலத்தைப் பேசவும் எழுதவும் 12-ம் வகுப்புக்குள் கற்றுக்கொள்ள முடியாதா?ஆங்கிலப்பாடத்தில் மனனம் செய்து மதிப்பெண் பெறும் முறையை ஒழித்து மாணவர்கள் பங்கேற்கும் கல்வி முறையால் எளிதாக ஆங்கிலம் படித்துவிடலாம்.  எனவே, தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொள்ளலாம்.  நமது துரதிருஷ்டம் என்னவென்றால், மெத்தப் படித்த மேதாவிகள் அமெரிக்கா, ஐரோப்பா என்று சென்று வேலை பார்த்ததாலும் அங்குள்ள கல்வி முறையைப் பற்றி இங்கு வந்து வாய்திறப்பது இல்லை. அதுதான் இந்திய மனதின் வினோதநிலை. அங்கெல்லாம் தாய்மொழிக்கல்வி சமச்சீராக இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊர் போய் சிறந்த பள்ளி என்று பிள்ளைகளைச் சேர்க்க முடியாது. ஏனெனில்,  எங்கும் ஒரே பாடமுறை, ஒரே தரத்தில் தாய்மொழிக்கல்வி எனும்போது, அதற்குத்  தேவையும் இல்லை.நமது ஆங்கிலவழிப் பள்ளிகளிலும், கட்டடங்களும், நுனிநாக்கு தமிங்கிலமும் இருப்பதே திறமை என்று பெற்றோர்கள், மாணவர்களை அங்கு சேர்க்கிறார்கள். சிறந்த அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் தன் பிள்ளையை அந்த மாதிரியான தனியார் பள்ளியில்தான் சேர்க்கிறார்.எது நல்ல கல்வி என்று புரியாமல் போனதுதான் இதற்குக் காரணம். தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளில், கல்வி முறை உயிரோட்டமாக இல்லாமல், இயந்திரத்தனமாய் இருப்பதால், ஒரு தலைமுறை குழந்தைகளை ஆங்கிலப்  புலமையும் இன்றி, தமிழ்ப் புலமையும் இன்றி திரிசங்கு நிலையில் வைத்திருக்கிறோம்.  மிகுந்த படைப்பாற்றலோடு பள்ளிக்கு வரும் ஒரு குழந்தையை-மொழி, கலாசாரத்தில், இந்தியத் தன்மையுடன் 3 வயது வரை நல்ல நிலையில் இருந்த குழந்தையை ஆங்கில வழிக் கல்வி என்று புரியாமல், சிந்தனைத் திறனற்ற, மனனம் செய்யும் கல்விமுறையில் விடுவது என்பது உண்மையான திறமையை அழிப்பது அல்லாமல் வேறு என்ன? தற்சமயம், சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் பாரட்டப்பட வேண்டிய ஒன்று. கட்டுரையாளர்: (வேதியியல் துறைப் பேராசிரியர்).

வெள்ளி, 14 ஜனவரி, 2011

priority to tamilmedium: govt.explanations: தமிழ் வழிக் கல்வியில் யாருக்கு முன்னுரிமை? தமிழக அரசு விளக்கம்

இதுதான் சட்டம் என்பது புரிகிறது.  ஆனால்  தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு -  தமிழ் இளங்கலை, முதுகலை, புலவர் படித்தவர்களுக்கு -  முன்னுரிமை வழங்கப்படாதது அநீதியல்லவா? குறிப்பிட்ட பணி நிலைக்கான படிப்பில் தமிழ் வழி பயின்றவர் இல்லாத பொழுது அதற்குக் குறைவான கல்வி நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லவா? முன்னுரிமை எனக் கூறி ௨௦ % மட்டும்  தந்து பின்னிலைக்குத் தள்ளாமல்  ௮௦ % தருவதுதானே முறை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ் வழிக் கல்வியில் யாருக்கு முன்னுரிமை? தமிழக அரசு விளக்கம்


சென்னை, ஜன. 13: தமிழ் வழியில் எப்படி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு தாற்காலிகத் தடை விதித்துள்ளது.  இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்வு அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் வழிக் கல்வி என்பது எதுவரை? கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி என்பது என்ன? என்றெல்லாம் வரையறுத்துக் கூறப்படவில்லை. இதனால், பெரும் குழப்பங்கள் அரசுத் துறைகளிலும், தேர்வர்கள் மத்தியிலும் நிலவியது.  இந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ள உத்தரவு:  அரசுத் துறைகளின் பணிகளில் நேரடி நியமனங்களில் ஒவ்வொரு பதவிக்கான விதிகளில் அல்லது உத்தரவுகளில் நேரடி நியமனத்துக்கான வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி அல்லது கல்வித் தகுதிகளைத் தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிக்கு எட்டாம் வகுப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  அதேபோன்று, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிக்கும் பத்தாம் வகுப்பினை தமிழ் மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இளங்கலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இளங்கலை பட்டப்படிப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு முதுகலை பட்டப்படிப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் எந்தப் பயிற்று மொழியில் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றுள்ளனர் என்பதை கண்டறிய முடியாத நிலையில் அதற்கான சான்றிதழை அந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பயின்ற கல்வி நிறுவனத்தில் இருந்து விண்ணப்பதாரர் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.  இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்ட பின்பு விதிகளை பின்பற்றலாம் என்று வெங்கட்ரமணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.



சனி, 8 ஜனவரி, 2011

stay order to the G.O. of employment preference to tamil medium: தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை: அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அரசாணை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ௨௦ % தருவதன் மூலம ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ௮௦ % தரும் தவறான ஆணை. இந்த ஆணையைக் கூடத் தடை பெறாத வகையில் பிறப்பிக்க அதிகாரிகள் தவறி விட்டார்கள். நீதிபதியும் தடை விதிக்காமல் வழக்கினை மட்டும் நடத்த இசைவளித்திருக்கலாம்.  உடனே அரசு தலையிட்டுத் தடையை நீக்க வேண்டும். தமிழ் அமைப்புகளும் தங்களை இணைத்துக்  கொண்டு வாதாடி வெற்றி பெறலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத முன்னுரிமை: அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை


சென்னை, ஜன. 7: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி என்பவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார்.  அதில் அவர் கூறியிருந்தது: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 30.9.10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சட்ட விரோதமானது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்றவற்றில் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக உள்ளன. தவிர, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன.  இந்த நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதென்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 16 ஆகியவற்றுக்கு எதிரானது.  அரசின் உத்தரவால் ஆங்கில வழியில் படித்த பலர் பாதிக்கப்படுவார்கள். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்பு கடந்த டிசம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்திருந்தார்.  அந்த வழக்கு இப்போது நீதிபதி வினோத் கே. சர்மா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

திங்கள், 8 நவம்பர், 2010

பேரவைக் கூட்டம் - தமிழ் வழிக் கல்விக்கான சட்டம்

பேரவைக் கூட்டம் இன்று தொடக்கம்: நான்கு மசோதாக்கள் நிறைவேறுகின்றன


சென்னை, நவ. 7: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 13-வது சட்டப்பேரவையின் 14-வது கூட்டத்தொடர் இதுவாகும்.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டமாக கடந்த மார்ச் 19-ம் தேதி நிதிநிலை (2010-2011) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின், 40 நாள்களுக்கும் மேலாக கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த நிலையில், சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது.நான்கு முக்கிய மசோதாக்கள்: சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாள் நடத்துவது? என்னென்ன விஷயங்களை விவாதிப்பது என்பது பரிசீலிக்கப்படும். இதன்பின், பேரவை நடைபெறும் நாட்களை பேரவைத் தலைவர் தெரிவிப்பார்.திங்கள்கிழமை தொடங்கும் பேரவை கூட்டத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரின்போது, நான்கு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது; கூட்டுறவுச் சங்க தனி அதிகாரிகளுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு; சொத்துப் பதிவின்போது வசூலிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணம் மீது 50 சதவீதம் மேல்வரி விதிக்கப்படுகிறது.இது, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு வழங்குவதைப் போன்று பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் வழங்க வகை செய்யும் சட்ட மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளன.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் இரண்டாவது பெருந்திட்டத்தில் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதாவும் பேரவையில் கொண்டு வரப்படுகிறது.பிரச்னைகளைக் கிளப்பும்: குழந்தைகள் கடத்திக் கொலை, அரசியல் பிரமுகர்கள் வெட்டிக் கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவைகளைச் சுட்டிக்காட்டி சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேரவையில் பிரச்னையைக் கிளப்பக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு ஏற்படும் எதிர்ப்புகள், இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் தலைவர்களின் கைது உள்ளிட்ட சம்பவங்களை பேரவையில் அந்தக் கட்சியினர் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் அரசு எடுத்து வரும் நிலைப்பாடுகள் பற்றியும் எதிர்க்கட்சிகள் பேரவையில் கடும் விமர்சனத்தை முன்வைக்கும் என்று கூறப்படுகிறது.குளிர்கால கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே நடைபெறும் என சட்டப் பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
கருத்துகள்

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஐந்தில் ஓரிடம் என அவர்களை ஒதுக்கி வைக்காமல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனச்சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். அதுதான் உண்மையாகவே தமிழ் வழியில் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் தமிழ் வழிக் கல்வியைப் ப்ரவலாக்கி அறிவியல் மேதைகளை உருவாக்க வழி வகுப்பதாகவும் அமையும். ஆனால், அரசிற்கு அது குறித்துக்கவலை இல்லை என்னும் வருந்தத்தக்க நிலைதான் உள்ளது. அனைவரையும் தமிழ் வழியில் படிக்கச் செய்வோம்! தரணியெங்கும் தலைமையுறச் செய்வோம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/8/2010 3:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் - சங்கப்பலகை 26.09.2010

அன்பிற்குரிய நண்பர்களே! வணக்கம். தமிழ் வழிப் பயின்றவர்களுக்குப் பணிமர்த்தததில் முன்னுரிமை வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அறிவீர்கள். இதன் அடிப்படையில் தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் என்னும் தலைப்பில் வரும் ஞாயிறு 26.09.2010 இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் தோழர் தியாகுவுடன் நான் உரையாடுகிறேன். காணவும் பிற அன்பர்களைக் காணச் செய்யவும் கருத்தினைத் தெரிவிக்கவும் அன்புடன் வேண்டுகின்றேன். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

திங்கள், 19 ஜூலை, 2010

தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருள்: வேலைவாய்ப்புத் துறை திட்டம்

சென்னை, ஜூலை 18: தமிழ்வழிக் கல்வி கற்றவர்களை பட்டியலிட தனி மென்பொருளைப் பயன்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திட்டமிட்டுள்ளது.  இதற்காக அரசாணை முறைப்படி வந்ததும் அந்த பணிகள் முடுக்கிவிடப்படும் என்று தெரிகிறது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், "தமிழில்படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட, உரிய சட்டம் தமிழக அரசின் சார்பில் இயற்றப்படும்' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.  இது குறித்த அரசாணை எந்த நேரமும் வெளியாகலாம் என்ற நிலையில் அடுத்த கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.61 லட்சம் பேர் பதிவு:  கடந்த ஏப்ரல் 2010 வரை தமிழகத்தில் 61 லட்சத்து 45 ஆயிரத்து 483 பேர் தங்களது கல்வித் தகுதிகளைப் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்து உள்ளனர். இவர்களில் 28 லட்சத்து 43 ஆயிரத்து 605 பேர் பெண்கள்.  ஆனால் இவர்களில் தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள், ஆங்கில வழியில் கல்வி கற்றவர்கள் என தனித்தனியாக பிரித்து பதிவு செய்யவில்லை. செம்மொழி மாநாட்டு அறிவிப்பால் இதற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. எனென்றால் அரசு வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் போது தமிழ் வழியில் கல்வி கற்றவர்களின் பதிவு மூப்பு விவரம் குறித்து அரசு கேட்டால், அதை வழங்க வேண்டியது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பணி.  ஆனால் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களை தனியாக பிரிப்பது தனி மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும். ÷இதுதவிர தமிழ் வழிக் கல்வி கற்றவர்களையும் தனியாக இனம் காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தினால் அந்த முகாம்களை எங்கெங்கு நடத்தலாம், மாவட்டங்கள் தோறும் எத்தனை மையங்களில் நடத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துக்கள்

படிப்புச் சான்றிதழ் எதிலும் தமிழ்வழியாகப் படித்தது பற்றிய குறிப்பு இருக்காது. அவ்வாறிருக்க கணியம் (மென்பொருள்) வழி அறிவது என்னும் முயற்சி தேவையற்ற கேலிக் கூத்தாகும். சிறப்பு முகாம்கள் மூலமும் புதிய பதிவிற்கு வாய்ப்பளிப்பதன் மூலமும் தமிழ்வழியாகப் பயின்றவர்களைக் கண்டறியலாம். அனைத்திலும் முதன்மையானது எந்தத்தடையாணையும் குறுக்கே வராத வகையில் விரைவில் அரசாணை பிறப்பிப்பதாகும். இல்லாவிடில் பொய்யான புள்ளிவிவரத்திற்கு உதவும் ஆரவாரப் பேச்சாகத்தான் தமிழில் படித்தவர்க்கான முன்னுரிமை என்பது அமையும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/19/2010 5:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 12 ஜூலை, 2010



தமிழ்வழி பொறியியல் படிப்பில் ஏராளமானோர் சேருவர்: மாணவர்கள் மீது கருணாநிதி நம்பிக்கை



காங்கிரசு ஆட்சியில் ஒப்புக்குச் சப்பாணியாக ஒரே ஒரு கல்லூரியில் மட்டும் தமிழ் வழிக் கல்வியை அறிமுகப்படுத்திய பொழுது அத்திட்டம் எவ்வாறு பயன்தரவில்லையோ அவ்வாறுதான் இப்பொழுதும் அமையும். முதல்வரின் நம்பிக்கையால் பயன் இல்லை. படிக்க வருவோருக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கைதான் தேவை. அதற்கான முன்னுரிமை ஆணையை உடனே அரசு பிறப்பித்தால் ஏராளமான மாணவர்கள் தமிழ்வழியில் பயில முன் வருவர். இதற்கு மாறான பொய்யான நம்பிக்கை வாழ்வளிக்காது. அதேநேரம் தமிழ் வழியில் உயர்கல்வி கற்க விரும்புபவர்களுக்கு எதிராக நேயர் ஒருவர் கருத்து பதிந்துள்ளதும் தவறாகும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2010 3:42:00 AM

சனி, 10 ஜூலை, 2010

தமிழில் படித்தவருக்கு அரசு வேலை: முதல் நியமன உத்தரவை வழங்கினார் முதல்வர்


சென்னை, ஜூலை 9- தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி முதல் நியமனமாக பொ. பேதுரு என்பவருக்கு நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான நியமன உத்தரவை அவரிடம் இன்று முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில் அவர் நகல் பெருக்கியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

அவசரப்படுத்தி விளம்பரப்படுத்தியிருக்க வேண்டா. மேலும் பல நியமனங்கள் ஆனபின்பு வந்திருந்த போட்டியாளர்களில் தமிழ்வழி படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுத்த பணியிடங்கள் என்ற அளவில் விரிவாக வெளியிட்டிருக்க வேண்டும். பொறுப்புள்ள பணி ஒன்றில் தமிழ்வழி பயின்றவர் என்ற அடிப்படையில் முன்னுரிமை அளித்து நியமனம் வழங்கியிருந்தால் பெருமை கொள்ளவும் வாய்ப்பாக இருந்திருக்கும். இப்பொழுது் அடிப்படைப்பணி (கடைநிலைப்பணியை)யைப் போன்ற பணிகளுக்குத்தான் தமிழில் படித்தால் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் ஏற்படும். மேலும் அரசாணை பிறப்பிக்காமலேயே தமிழில் படித்தவர் என்ற முன்னிரிமை அடிப்படையில் இப்பொழுது வேலை வழங்கியிருந்தால் இதற்கு முன்பு இந்த நடை முறையைப் பின்பற்றாதது ஏன் என்ற வினாவும் வெளிவரும். கருணை அடிப்படைப்ப ணியமர்த்தம்போல் தோன்றும் இப்பணியமர்த்தத்திற்குரிய பணியிடம் பெயர் ஒளிப்பட இயக்கியர் என்பதாகும். நகல் பெருக்கியாளர் என்பது முன்பு வெட்டச்சுத்தாள் (stencil paper)மூலம் படிப்பெருக்கியில் படிகள் எடுக்கும் பணியிடத்தைக் குறிப்பதே. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2010 3:38:00 AM
டேய் நாதாரி புதியவன் ராஜ்,உங்க தலைவர் ...தமிழிலில் படித்தவருக்கு ..ஒரு கல்லூரி விரிவுரையாளர் பதவியோ ..அல்லது ஒரு உயர்த்த அரசு பதவியோ ...தகுதியின் அடிப்படையில் வழங்கி இருந்தால் பெருமை படலாம்...இதற்கு...ஏனடா ...இந்த விளம்பரம்....பண்ணாடைகள...
By Rajendran
7/9/2010 11:33:00 PM
சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற தி.மு.க. வின் கொள்கைக்கு ஏற்ப தமிழில் படித்தவருக்கு வேலையில் முன்னுரிமை என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றிய கலைஞருக்கு பாராட்டுக்கள். முன்னுரிமையில் பேதுருவுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அவர் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். நல்ல விசயங்கள் காமாலை கண்களுக்கு தெரிவதில்லை அதான் வழக்கம் போல தூற்றுகிறார்கள்.
By புதியவன் ராஜ்
7/9/2010 9:32:00 PM
Xerox operator? For this you need only to push some buttons. One need not need Tamil. Even a lay man can operate. Xerox also will come in any language and not only in classical Tamil. What for this dramas? Appoint vice chancellors, professors,teachers, Chief Secretaries, secretaries etc., if Tamil need to be respected. Appointing a xerox operator is just to see the opposition and court cases, RTI applications etc. rushing for the act and to stop the drama, citing the cases.
By karunakaran
7/9/2010 8:12:00 PM
வேலை அவருக்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது . அவர் கட்சிகாரரா , வேலைக்கு அவர் மபு செய்திருந்தாரா , அவர் தமிழில் எதுவரை படித்திருக்கிறார் . இல்லை இந்த பெயரில் வேலை பெறுவதற்கு எதாவது செலவு செய்தாரா. நல்ல தமிழ் நாடு , வேலை ஆணையைக் கூட விழா நடத்திக் கொடுப்பது. பொது நல வழக்குப் போட நல்ல காரணம். ஆனால் தலைவிதி தமிழனுக்கு , கூத்தாடி கூத்தாடி , போட்டு உடைக்கிறாண்டி கருப்புக் கண்ணாடி. கண்ராவி
By ambalavanan
7/9/2010 7:57:00 PM
only can do karunanithi, play like this ugly ugly drama, see what this posting xerox operator, what a shame man. 60 lack employee has been with out any job. please dont issue like this news please.
By riyas ksa
7/9/2010 6:53:00 PM
தலைவா போதும் உங்கள் தமிழ் பற்று, தமிழும் திராவிடமும் பேசி, இந்தியா ஆத்திரம் அடைந்து லட்சகனக்கான தமிழர்களை கொன்றுவிட்டது, இன்னும் கோடிக்கணக்கான தமிழர்கள் சாவுக்கு வழி செய்து விடாதீர்கள்.
By CH
7/9/2010 4:49:00 PM
அவனவன் இங்கிலிஷ்ல படுச்சுப்புட்டு ..வக்கீல் ஆகுறான்!!!...தமிழன் தமிழ்ல படுச்சுப்புட்டு அந்த வக்கீலுக்கு பியுனாவும் ::பெல்பாயாவும் ...கக்கூஸ் கூட்டவும் பணி நியமனம் பெற்று இன்புறுகிறான் ! எண்ணற்ற மொழிகளில் புலைமை பெறுவதில் தவறில்லையடா தமிழா !!!!! நீ கிணற்றுத் தவளையாக இருந்து குண்டிச் சட்டிக்குள் குதிரை ஒட்டாதேட என் இன்பத் தமிழா !!! @ rajasji
By rajasji
7/9/2010 4:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 9 ஜூலை, 2010

தமிழ் வழி பி.இ. விரிவுபடுத்தப்படும்: க. பொன்முடி



சென்னை, ஜூலை 8: தமிழ் வழி பி.இ. படிப்புகள் அடுத்த ஆண்டு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி கூறினார்.  பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.  கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை வரை 8,391 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,279 பேர் வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 25 பேர் பி.இ. இடம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். மேலும், ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதன்படி, இதுவரை 7,086 இடங்கள் நிரம்பியுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 2,474 இடங்கள் நிரம்பின.  முன்னதாக, உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வைப் பார்வையிட்டார்.  அப்போது அவர் கூறியது:  இதுவரை நடைபெற்ற கலந்தாய்வு முலம் 7,086 மாணவர்கள் பி.இ. இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களில் 2,332 பேர் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள். அண்ணா பல்கலைக்கழகங்களின் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் உள்ள தமிழ் வழி பி.இ. படிப்புகளில் இதுவரை 15 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  தற்போது சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமே தமிழ் வழியில் உள்ளன. தமிழ் வழி பி.இ. படிப்புக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கள்
 
பாராட்டுகள். அடுத்த ஆண்டு அனைத்து நிலைகளிலும் தமிழ்வழிப் பொறியியல் வரும் வகையில் திட்டமிட்டுச் செயலாற்றுக. தமிழ் வழி பயின்றவர்களுக்குப் பணி முன்னுரிமை என விரைவில் ஆணை பிறப்பித்தால் தமிழ் வழி படிப்போர் பெருகுவர்; நாடு நலம பெறும்.ஆவன ச‌ெய்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2010 6:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 7 ஜூலை, 2010

தமிழ் வழி கல்விக்கு மாணவர் சேர்க்கை இல்லை



திருநெல்வேலி, ஜூலை 6: பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு நடைபெற்று வரும் கலந்தாய்வில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், தமிழ் வழி கல்விக்கும் மாணவர்கள் சேர்க்கப்படாததால் 300 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிகழ் கல்வியாண்டு முதல் தமிழில் பொறியியல் பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களிலும் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக கல்லூரிகளிலும் இந்த கல்வியாண்டு முதல் தமிழ் வழி பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது, சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டு அவற்றில் மொத்தம் 1,800 மாணவ, மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொறியியல் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதல் கட்ட கலந்தாய்வில், சென்னை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும், அவற்றின் கல்லூரிகளுக்கும் தமிழ் வழி பாடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, கோவை அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு அவற்றின் கல்லூரிகளுக்கு மட்டுமே தமிழ் வழி பாடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் தலா 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்ததால் இப்போது தமிழ் வழிக் கல்வியை விரும்பும் 240 மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோகியுள்ளது. கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்கள் 2007-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டன. இவற்றில் கோவை மற்றும் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களுடன் அந்தந்த இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள் இதுவரையில் இணைக்கப்படவில்லை. இணைப்புக்கு அரசு பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த திட்டம் காலதாமதமாகி வருகிறது. எனினும், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை இங்குள்ள அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி பாடப் பிரிவுகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி அங்கு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, திருநெல்வேலியிலும் உள்கட்டமைப்பு வசதி இல்லை எனக் கூறி மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இங்கு வாடகை கட்டடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பல்கலைக்கழக துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. எனினும், மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்திருப்பது மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.மாணவர் சேர்க்கை இல்லை: இதுமட்டுமன்றி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 3 இளநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த பல்கலைக்கழக துறைகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். அதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு முதல் அந்த 3 பாடப் பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு மூலம் 180 மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்தது. அதன்படி, பல்கலைக்கழக துறைகளையும் பொது கலந்தாய்வு பட்டியலில் சேர்த்துக் கொள்ளும்படி திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தொழில்நுட்ப கல்வித் துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலந்தாய்வில் இப்பல்கலைக்கழக துறைகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி, நாகர்கோவில் பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, இனிமேல் நேரடியாக மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டால் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கிடைப்பது அரிது. ஆதலால், பல்கலைக்கழக கல்வித் தரம் குறைய நேரிடும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆக மொத்தத்தில் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பயன்பெற வேண்டிய 300 மாணவர்களின் வாய்ப்பு பறிபோயுள்ளது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துக்கள்


தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்துவது என்பது அதனை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல. வேலைவாய்ப்பிலும் தொழில் வாய்ப்பிலும் முன்னுரிமை அளிப்பது. சட்டக்கல்லூரியில் 90 விழுக்காட்டினர் ஆங்கிலவழியில் சேர்ந்து தமிழ்வழியாகக் கற்றாலும் தமிழ்வழியில் நேரடியாகச் சேராததன் காரணம் உரிய அறிந்தேற்பின்மைதான். 1960 இலேயே பட்டவகுப்புகளி்ல் தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆய்வுநிலை வரை தமிழ்வழி அறிமுகப்படுத்தாமையாலும் தமிழ் வழிக்கு முன்னுரிமை அளிக்காமையாலும் கண்துடைப்பு திட்டமாகத்தான் இருக்கின்றது. அதுபோல்தான் தமிழ்வழிப் பொறியியலும் ஆகும். எனவே, உடனடியாகப் படிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகக் கட்டணச் சலுகையும் வேலைக்காப்பு உறுதியும் வழங்க வேண்டும். தாய்மொழியைக் கொண்டாடி வரும் நாம் தாய்த்தமிழை மதித்தால்தானே தமிழன்னை மகி்ழ்வாள்? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2010 3:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *