வெள்ளி, 30 அக்டோபர், 2009

நிருபர்களுக்கு இலங்கை அமைச்சர் அழைப்பு



சென்னை, அக். 29: இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். "இலங்கை முகாம்களின் நிலை குறித்து கண்டறிய வேறு நாட்டு ஊடகங்களை உங்கள் நாட்டு அரசு அனுமதிப்பது இல்லையே ஏன்?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ""ஏன் அனுமதிப்பதில்லை; அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தார்கள்'' என்றார். மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், ""நீங்களும் இலங்கை வந்து நிலைமையைப் பாருங்கள்'' என்றார்.
கருத்துக்கள்

துரோக ஊடகக் குழு ஒன்றைத் தெரிவு செய்துவிட்டார்களோ! அழைக்கின்றார்.முதலில் அவர்கள் நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், ஊடகங்கள் , பன்னாட்டு அமைப்பைச் சார்ந்தோர், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோரைப் பார்வையிட வைக்கட்டும். வணங்காமண் கப்பல் மூலம் வழங்கிய பொருள்களைக் கூடத் தர மறுக்கும் வஞ்சகர்கள் பொய்மூட்டைகளை எப்படித்தான் அவிழ்த்து விடுகின்றனரோ! என்ன செய்வது? சூத்திரதாரிகளாக இருப்பது நமது அரசியல் வாதிகள் ஆயிற்றே!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக