திங்கள், 26 அக்டோபர், 2009

பகுத்தறிவுக் கொள்கையில் கருணாநிதி இரட்டை வேடம்: ஜெயலலிதா



சென்னை, அக்.25- பகுத்தறிவு கொள்கையில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் படித்தவர், காஞ்சிப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே கூறிக்கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், எமதர்மர் உயிரைப் பறிப்பதைப் போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்தரித்து, தன்னுடைய முகமூடியை தானே கிழித்துக் கொண்டு, தன்னுடைய சுயரூபத்தை, தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் தி.மு.க-வினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப்படுத்தியும், நிந்தித்தும் தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால், கருணாநிதி குடும்பத்தினரோ இறை வழிபாட்டில் தனிக் கவனம் செலுத்துவதிலும், ஜோதிடர்களை கலந்து ஆலோசித்து, பரிகாரங்கள் செய்வதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றனர். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே!

பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என்றால் கருப்பு துண்டு தானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்களை எழுப்பியும் அதற்கு சரியான விளக்கத்தை கருணாநிதி இன்று வரை அளிக்கவில்லை.

இவருடைய வேடத்தை மெய்ப்பிக்கும் விதமாக, திருக்குவளையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப் படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக, எமதர்மர் உயிரை பறிப்பது போலவும், அதை கருணாநிதி தடுப்பது போலவும் தமிழக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாள் இலை மறை காய் மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தனது முகமூடியை தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்த பிறகும், தன்னலத்திற்காக, தன் குடும்ப நலத்திற்காக மத்திய அரசில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழர்களின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த முடியாத கருணாநிதி, தன்னை 'காலம் வீசும் கயிற்றைத் தடுப்பவர்' போல் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருத்துக்கள்

WELL SAID!!!!!AT TIRUKKUVALAI , NATIVE PLACE OF KARUNANITHI , A KOIL IS BEING MAINTAINED BY HIS FAMILY !!!!OOORUKKUTHAN UBADESAM , YENAKKU ILLAI !!!

By L.C.NATHAN
10/26/2009 2:23:00 AM

Raja from Dubai, you proved well that you working as toilet cleaner in Dubai. First you learn how to talk about a women in public.. Idiot.

By Sankar
10/26/2009 1:47:00 AM

அடியே! நீ மற்றும் சினிமாவில் எத்தனை வேசம் போட்டு உள்ளாய்? எத்தனை நடிகணொடு படுத்து, புரண்டு,உருண்டு, பிடித்து, கட்டி அனைத்து, முத்தமிட்டு, அவனின் உறுப்பை நீ பிடித்து, உனது உறுப்பை ,மார்பை,அவன் பிடித்து,அவன் ஸொருக, நீ வாங்க, அப்பப்பா, என்ன எல்லாமோ சல்லாபம் புரிந்தாயே. அதை போல் இந்த கிழவனும் அவன் தகுதிக்கு பல வேசங்களை போட்டு , மொத்தத்தில் மக்களாகிய எங்களை நீங்கள் பைத்தியனாக ஆக்குகிறீர்கள். இந்த சினிமாக்காரர்களின் சகவசத்தை விட்டு தமிழகம் எப்போது ஒழுக்கமானவர்களின் கையில் ஆட்சியை கொடுக்குமோ அப்போது தான் நம் நாடு உருப் படும்.

By Ravi raja,dubai.uae.
10/26/2009 1:15:00 AM

இருவரும் மாறி, மாறி பல வேசங்கள் போட்டு மக்களை ஏமாற்றுக்கிறீர்கள். ஒருவ வழிப்பாடு கூடும்,என்றும், கூடாதது என்றும் கடவுளின் பெயரால் ஏமாற்றுக்கிறீர்கள். ஆக மொத்தம் உருவ வழிபாடு அற்ற ஏக இறை கொள்கை உடைய இஸ்லாமியர்கள் தான் இனி நாட்டை ஆல வேண்டும். அப்போது தான் இதற்கு ஒரு முடிவு ஏற்படும்.

By Haneef, sharjah,uae.
10/26/2009 12:56:00 AM

MK IS BEHAVING AS PADIPPATHU RAMAYANAM - IDIPPATHU PERUMAL KOIL" - YELLOW IS THE SIGN OF GURU. HE IS WEARING YELLOW TOWEL BECAUSE TO GET GURU KADAKSHAM ONLY - IF he REFUTES THAT AND DARES ENOUGH TO REMOVE THE YELLOW TOWEL THEN HIS DOWNFALL WILL START IMMEDIATELYH.THE VEERAMANI WHO HAS COME FROM THE PAASARAI OF EVR WILL NOT ASK KARUNANIDHI BECAUSE HE IS A NUMBER ONE JAALARA OF THE PERSON WHO COMES TO POWER. HIS SON MR.STALIN NEVER CRITICISES HINDUS OR GO AGAINST THE SENTIMENTS OF HINDUS. IF MK IS LIKE SON WHO WILL CRITICISE HIM. LET MK LEARN FROM HIS SON AS TO HOW TO NOT HURT THE HINDU'S FEELINGS.

By SAKTHIVEL
10/26/2009 12:11:00 AM

I believe the name given to Mr. Karunanidhi by his parents was Dakshinamurthy, other name of planet Guru, because he has Guru in a powerful position in his horoscope. It is Guru which gives Rajayoga. Yellow is the preferred colour of Guru and I think he never lost after starting wearing yellow towel. He must also been doing some other special poojas without public knowledge. He is also normally favourably disposed towards teachers. This if of course for the believers.

By Raam
10/25/2009 11:29:00 PM

Intha madhiri thalaivargalin pechai nambi andha kalaththil oru perum ilaignargal padaye nathigam pesiyadhu, indrum silar nadhigargalai ullanar, thangal kudumbaththai petrorai madhikkamal nathigam pesinar. antha emaligalai ninaithal sirippu than varugiradhu.

By Rajaganesh
10/25/2009 11:15:00 PM

who is this ssk.Are you an illiterate and school drop out.Always write releavant matters whether positve or negative.But do not write unnecessary things and matters with figment of imagination.

By legalfan
10/25/2009 11:05:00 PM

Amma solvathu pola naan adikiramathiri adikiran neenkal thatukira mathri thatunkal entruthan Mk ithuvarai seithu kondu irukkirar. Yemarum makkal irukkum varaikkum MK ithilai innamum seivar. Thatiketka aal illaiyenral ennamum sollikondaey iruppar. yemali

By yemali
10/25/2009 10:15:00 PM

கருணாநிதியை கட்டாய இந்துவக்க ஜெயலலிதா முயலுகிறார். கட்டாய மதமாற்ற சட்டத்தின் மாமிக்கு இது மிகப் பெரிய வெக்கக்கேடு!

By இல்லவே இல்லை
10/25/2009 9:08:00 PM

கருணாநிதி பகுத்தறிவுவாதி, கடவுள் நம்பிக்கையற்றவர் என்று யார் சொன்னது? அப்படி யாராவது நம்பினால் தவறு அவர்கள் மேல்தான். கோபாலபுரம் வீட்டிற்கு எதிரில் சிறிய அழகான ஒரு கோயில் இருக்கிறது. தினமும் தலைவர் வீட்டைவிட்டு வெளியில் புறப்படும் போது அக்கோயிலில் பூசை நடைபெறும். இவர் காரில் ஏறும் முன்பு தோளில் உள்ள துண்டு நழுவி கீழே விழும். பூமியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்வார். பிறகுதான் காரில் ஏறுவார். பகுத்தறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நம்மைப் போன்ற மக்களை ஏமாற்றத்தான். ஜெயேந்திரர்(ஜெ. வுக்கு ராஜகுரு என்பர் சிலர்) விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய கண்டிப்பை நாம் கருணாநிதியிடம் எதிர்பார்க்க முடியாது. கருணாநிதியுடன் இருந்த காவல்துறை, அரசு அதிகாரிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மனம் விட்டுப் பேசிப்பாருங்கள். இன்னும் பல அரிதான விஷயங்களைப் பெறலாம்.

By Murugadoss K
10/25/2009 8:21:00 PM

அ.தி.மு.க.-வும் *திராவிட* கட்சிதானே? நீங்களும் பெரியார் வழி வந்தவர்கள்தானே? நீங்கள் ஆடாத ஆட்டமா அம்மா? ஜோசியக்காரன் சொன்னான் என்பற்காக எத்தனை யானைகளை இம்சை செய்தீர்கள்? அவர் பங்குக்கு வெறும் ஒரு மஞ்சள் துண்டுதானே போட்டுக்கொண்டு இருக்கிறார். உங்களது இந்த அறிக்கைக்கு அவர் ஒரு அறிக்கை விடுவார். எல்லாவற்றையும் கேட்டுகொண்டிருக்க அப்பாவிகள் (கேனப்பயல்கள்) நாங்கள் இருக்கிறோமே?

By abdul.com - dubai
10/25/2009 6:46:00 PM

கலைஞர் மட்டுமல்ல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேருமே கொள்கைகள், இலட்சியங்கள் அற்ற சுயநலமிக்க சந்தர்ப்பவாதிகள்.இவர்களது இலட்சியம் கொள்கை எல்லாம் பதவியை அடையவும் அதை தக்க வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படும் மூன்றாம் தரமான வியாபார தந்திரமிக்க முதலீடுகள்.இந்த வியாபார முதலீடுகளை காலத்திற்கேற்ற முறையில் வடிவமைத்து தமிழினத்தை ஏமாற்றுவது இவர்களது வாடிக்கை. இவர்களை நம்பும் தமிழினம்தான் ஏமாந்த சோனகிரிகள். கலைஞரின் பகுத்தறிவு கொள்கையும் அவர் போட்டுவரும் எண்ணற்ற கபடநாடகமிக்க வேடங்களில் ஓன்றே அன்றி வேறொன்றும் இல்லை.

By tamildesian
10/25/2009 6:44:00 PM

கலைஞர் மட்டுமல்ல தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேருமே கொள்கைகள், இலட்சியங்கள் அற்ற சுயநலமிக்க சந்தர்ப்பவாதிகள்.இவர்களது இலட்சியம் கொள்கை எல்லாம் பதவியை அடையவும் அதை தக்க வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படும் முதலீடுகள். இவர்களை நம்பும் தமிழினம்தான் ஏமாந்த சோனகிரிகள். கலைஞரின் பகுத்தறிவு கொள்கையும் அவர் போட்டுவரும் எண்ணற்ற கபடநாடகங்களில் ஓன்றே அன்றி வேறொன்றும் இல்லை.

By tamildesian
10/25/2009 6:33:00 PM

தமிழகத்தை, தமிழ் மக்களைப் பிடித்த பீடைகள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். இந்த இரண்டு பீடைகள் இல்லாத நாள், தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் புதிய விடியலை உருவாக்கும் நாள். "இறைவனிடம் கை ஏந்துங்கள்.அவன் இல்லைஎன்று சொல்லுவதில்லை". ஆம், இந்த இரண்டு பீடைகளும் இல்லாத தமிழ் நாட்டைக் கொடுங்கள்" என்று தமிழ் மக்கள் ஒன்றுசேரப் பிரார்த்தியுங்கள்.இறைவன் அருள் புரிவான். தமிழன்

By தமிழன்
10/25/2009 6:16:00 PM

இதுல ஆச்சர்ய பட என்ன இருக்கு? எல்லாருக்கும் தெரிஞ்சது தானே. இது அரசியலுக்காக போட்ட வேஷம். அப்படி இருந்தும் ஏன் ஒட்டு போடுறீங்கன்னு கேட்குறீங்கள. இந்த பாழும் மனசு கேட்குதா , காசுக்கு ஆசப்பட்டு(வோட்டு போடுறோம்) தமிழ் நாட்டையும் தமிழையும் அடமானம் வெச்சிட்டோம் !!!. உபதேசம் ஊருக்கு தானே!!!

By கிட்டு மாமா
10/25/2009 5:35:00 PM

தினம் நாலு அறிக்கை விட்டாலும் தேதிமுக வை நிச்சயம் முந்த முடியாது.... உங்களை விட பழுத்த மரத்தை கல்லடி கொடுப்பதில் விஜயகாந்த் வல்லவராகி விட்டார்.

By ssk
10/25/2009 4:56:00 PM

Good statement. We should think about Karunanidhi's gimmick.

By V.L. Santhosh
10/25/2009 4:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக