வெள்ளி, 30 அக்டோபர், 2009

மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் சந்திப்பு மேலும் பயன்படும்: கருணாநிதி



சென்னை, அக். 29: ""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு மேலும் பயன்படுகின்ற சந்திப்பாக இருக்கும்'' என்று முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்: "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' அமைப்பின் சார்பில், என்னைச் சந்திக்க அனுமதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் ஒரு வாரத்துக்கு முன்பே எனக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் கண்டவுடன் அதற்கு ஒப்புதல் தெரிவித்து இருந்தேன். தலைமைச் செயலகத்தில் கடந்த திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு, என்.வரதராஜன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு என்னைச் சந்தித்தது. "அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்த பலவற்றை திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது என்று அவர்களிடம் விளக்கினேன். மேலும் சிலவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்று தெரிவித்தேன். மேலும், அருந்ததிய குலவீரன் மாவீரர் ஒண்டிவீரன் பகடைக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலித்து ஆவன செய்வதாகக் கூறியுள்ளேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு திமுக அரசு ஆற்றியுள்ள பணிகள் ஏராளம். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு பயன்பட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இது, மேலும் பயன்படுகின்ற சந்திப்பு'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

கண்டிப்பாக இச்சந்திப்பு மேலும் பயன்படும் , கூட்டணி அமைவதற்கு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2009 2:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக