புதன், 28 அக்டோபர், 2009

மேலும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரின் விசா ரத்து

27 October, 2009 by admin

இலங்கைக்கு எதிரான பொய்யான அறிக்கைகளை வெளியிட்டமை சம்பந்தமாக நொன் வயலன்ட் பீஸ் போஸ் என்ற சர்வதேச அமைப்பின் தலைவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வீசா அனுமதியை நீடிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

இந்த சர்வதேச அமைப்பின் ஜப்பான் கிளையின் தலைவரான சுதாகா தனாடா மற்றும் நிரோப அன்டோ ஆகிய இருவர், இலங்கைக்கெதிராக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அரசாங்கத்திற்குத் தெரியவந்துள்ளது எனவும் இலங்கைக்கெதிராக பொய்யான அறிக்கையை அனுப்பியது சம்பந்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நான்காவது வெளிநாட்டவர் இவராகும் எனவும் திவயின தெரிவித்துள்ளது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 1437

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக