ஞாயிறு, 25 அக்டோபர், 2009

நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் வேண்டும்: சரத்குமார்



சென்னை, அக். 24: "நீதிமன்ற வழக்காடும் மொழியாக தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களுக்கு மருந்திடக் கூடிய வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அமைய வேண்டும். உயர் கல்விகளில் தமிழை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அமைச்சகத்தையும், அமைச்சரையும் உருவாக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் வேண்டும். சட்டம் இயற்றுவதும், சட்டங்களால் வாதாடுவதும் சட்டங்கள் அளிக்கும் தீர்ப்பிலும் தமிழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்'' என்று தனது அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

இன்றைய சூழலே நீடித்தால் நமது கொள்ளப் பேரன்களுக்குக் கொள்ளுப் பேரன்களும் இதே கோரிக்கைகளைத்தான் வைப்பர். எல்லாம் தமிழ் என்பது வீட்டளவில் கூட இல்லை; ஏட்டளவில்தான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2009 7:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக