திருச்சி, பிப்.14: மறைந்த எழுத்தாளர் விந்தன் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் அரசியல் தவிர்த்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வழிகாட்டும் வகையான, சாதாரண மக்களுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, குழந்தைகளுக்கு நற்பண்புகளையும், நம்பிக்கையும் தோற்றுவிக்கும் வகையான கருத்துகளைக் கருவாகக் கொண்டு ஏ-4 அளவு தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைந்திருக்க வேண்டும். கதைகள் இதுவரை பிரசுரிக்கப்படாத, சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.தேர்வு பெறும் சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். சிறுகதைகளை, வை.ஜவஹர் ஆறுமுகம், தலைவர், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம், 2/97, கிருஷ்ணமூர்த்தி நகர், திருச்சி-21 என்ற முகவரிக்கு 2011, மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
S.samy about the Control of the Teples: அரசின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுபடும்: சுப்பிரமணியன் சுவாமி
தமிழகக் கோயில்கள் ஆரியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடும் நாளே உண்மையான இறைநெறி நாளாகும். தமிழர்கள் தமிழர்களுக்காகத் தமிழர்கள் பொருளிலும் தமிழர்கள் உழைப்பிலும் தமிழர் நாட்டில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர் தெய்வங்களை வணங்கத் தமிழ் மொழித் தகுதியில்லை எனத் தவறாகக் குறிக்கப்பட்டுப் புறக்கணிக்கப் படுவது முறை அல்ல. இறைவா! இறைவா! நீயே சொல்வாய்!
முறைதானா இதுவும்! அறம்தானா இதுவும்!
உனை வாழ்த்த உன் தமிழுக்குத் தடையா?
உனைப் போற்ற தாய்த் தமிழுக்குத் தடையா?
சொல்வாய் நீ சொல்வாய்! இறைவா நீ சொல்வாய்!
சொல்வாய் நீ சொல்வாய்! இறைவா நீ சொல்வாய்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
வேலூர், பிப்.14: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆயிரம் இந்து கோயில்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் வெளிவந்துவிடும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்தார்.வேலூரில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நகைகள் உள்ள பெட்டக சாவியை அரசிடம் தரவேண்டும் என்ற மதுரை பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து இந்து தர்ம ஆச்சாரிய சபா அமைப்பிற்காக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளேன்.சிதம்பரம் நடராஜர் கோயிலை திமுக அரசு கைப்பற்றியது தொடர்பான வழக்கில் இறுதி வாதம் இம்மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது. அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் 45 ஆயிரம் கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன. இது சட்டத்துக்கு புறம்பானது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இவ்வாண்டு இறுதிக்குள் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். அப்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும். இஸ்லாமிய வங்கி வரக் கூடாது என நான் போட்ட வழக்கு கேரளத்தில் தோல்வி அடைந்ததாக தவறாக செய்தி பரவியுள்ளது. இந்திய சட்டப்படி இஸ்லாமிய வங்கியை ஏற்படுத்த முடியாது என்ற எனது கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. நாட்டின் சட்டவிதிகள் படி இஸ்லாமிய வங்கி நடத்த முடியாது என்பதை ரிசர்வ் வங்கி ஏற்றுக் கொண்டதை அடுத்தே வழக்கு தள்ளுபடி ஆனது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
nidhi awards: photoon: நிதியூட்டும் நிதி விருதுகள்
<<விருதுகள் பெயர சுத்த தமிழ்ல வெச்சிக் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும்.>>எனக் குறிப்பிட்டு விட்டுப் பாசா, போசனா முதலான சொற்களில் பட்டங்களைக் குறிப்பது ஏன்? கற்பனையிலும் தாய் மொழியை மறக்கலாமா? எனினும் உங்களுக்கு வாசகர்கள் சார்பில் கிண்டல் நிதி என்னும் பட்டம் வழங்குகின்றேன். அழிவு நிதி என்னும் பட்டம் வழங்குவதற்குள் மொழி அழிவு எண்ணங்களை வி்ட்டு விடுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
என்னவோ போங்க... மணிமணியா பட்டங்கள கொடுத்தாலும், ஆணியில சட்டம் போட்டு மாட்டத்தான் முடியுது. நிதிநிதியா பட்டங்கள கொடுங்க... அப்படியாவது எங்க நிதி நிலை மேலேறுதான்னு பாக்கலாம். எங்க பசங்க, பேரன் பேத்திகளுக்கு நிதிப் பெயரா வெச்சி என்னிக்கும் ஐயாவ நினைச்சுக்குவோம்... அப்படியே எல்லாருக்கும் ஒரே நிதிப் பட்டமா இல்லாம, தகுதி வாரியா பிரிச்சுக் கொடுத்தா நல்லாருக்கும். அதுவும், விருதுகள் பெயர சுத்த தமிழ்ல வெச்சிக் கொடுத்தா ரொம்ப நல்லாருக்கும். அதுவும், தலைமுறைகளை வாழவைத்துக் கொண்டிருக்கிற தலைவர் பெயரால இருந்தா இன்னும் நல்லாருக்கும். அதுதான்... தமிழர்களின் சொற்காலம். சோர்விலா பொற்காலம். உயிரோடு இருக்கும் உணர்வுக் காலம். உயிர்ப்போடு திகழும் உறக்க காலம். உணவுக்காய் அலைபாயும் உழவர் காலம்.கலைபேரில் கலங்கடிக்கும் கனவுக் காலம். இந்த விருதுகள் எப்பேர்ப் பட்ட விருதுகள்..?கொடுப்பவர் மகிழ பெறுபவர் நெகிழபரம்பரையே மகிழும் பட்டங்கள் ஆயிற்றே!என்ன விருதுகள்..?நம் எண்ண விருதுகள்...மொழிவல்லுநராக சுட்டப்படுபவர்களுக்கு - பாஷாநிதிகட்சிக்கு நிதி கொடுத்தவர்களுக்கு - போஷணாநிதிஆட்சியை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களுக்கு - தூஷணாநிதிஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் கவிஞர்களுக்கு - ஜால்ராநிதிபுகழ்ந்துரைத்து கவிதை படைத்தவர்களுக்கு - கற்பனாநிதிகட்சிப் பாடல் பாடகர்களுக்கு - காயகநிதிபிரசார பீரங்கி நடிகர்களுக்கு - நடிகநிதிபிரசாரமேடை நடிகையருக்கு - நடிகையர்நிதிகுத்தாட்ட நடனக் கலைஞர்களுக்கு - நடனாநிதிஇன்னும்...கோஷம் போடும் இளைஞர்களுக்கு - யுவநிதிகவிதைகேட்டு கைத்தட்டும் இளைஞியருக்கு - யுவதிநிதிஇரட்டைஅர்த்த நகைச்சுவை நடிகர்களுக்கு - ஹாஸ்யநிதிகோள்மூட்டும் அரசியல்வாதிகளுக்கு - கலஹநிதிஎதிர்க்கட்சித் தலைவருக்கு - வாய்தாநிதிஇன்னும் இன்னும்...அடிக்கடி கூட்டணிமாறும் தலைவர்களுக்கு - சந்தர்ப்பநிதிஅடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு - தாவல்நிதி எக்ஸ்ட்ரா லக்கேஜ் கூட்டணித் தலைவருக்கு - தொங்கல்நிதிஇன்னும் இன்னும் இன்னும்.... பின்குறிப்பு:வாசகர்களின் பரிந்துரையில் உள்ளது... விருதுகளின் பெயர்கள் பிறகு அறிவிக்கப்படும்!
கருத்துகள்
By பாமரன்
2/14/2011 9:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/14/2011 9:56:00 PM
திங்கள், 14 பிப்ரவரி, 2011
tamil daily for singhalam at yaazhppaanam: யாழ்ப்பாணத்தில் தமிழ் நாளிதழ் பதிப்பை தொடங்க இலங்கை முடிவு
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 13 Feb 2011 04:30:11 PM IST
Last Updated :
கொழும்பு, பிப்.13- இலங்கையில் தமிழர்களிடையே அரசுத் தரப்பு செய்திகளை பரப்பும் வகையில், லேக் ஹவுஸ் ஊடக நிறுவனத்தின் "தினகரன்" நாளிதழ் பதிப்பை யாழ்ப்பாணத்தில் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிபர் ராஜபட்சவின் உத்தரவின்படி இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ தமிழ் நாளிதழான "தினகரன்" யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரவுள்ளது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணத்தில், அடுத்த மாதம் 2-ம் தேதி முதல் "தினகரன்" நாளிதழ் வெளியாகும் என்றும் அந்த இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.யாழ்ப்பாணத்தில் இருந்து தினக்குரல், தினமுரசு, வலம்புரி, உதயன் ஆகிய நான்கு நாளிதழ்கள் ஏற்கெனவே வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
cash bags to ma.po.si.family: தங்க மகுடம், வீரவாள் ஏலத்தால் கிடைத்த தொகை ம.பொ.சி.மரபுரிமையருக்கு அளிப்பு
முதல்வரின் பாராட்டப்பட வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்றாகும். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தங்க மகுடம், வீரவாள் ஏலத்தால் கிடைத்த தொகை ம.பொ.சி. வாரிசுகளுக்கு அளிப்பு
First Published : 14 Feb 2011 03:45:07 AM IST
Last Updated :
சென்னை, பிப். 13: முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட தங்க வீரவாள், தங்க மகுடத்தை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த தொகை ம.பொ.சி.யின் மரபுரிமையர்களுக்கு (வாரிசுகளுக்கு) ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.ஏலத்தின் மூலம் கிடைத்த ரூ.55 லட்சத்தை ம.பொ.சி.யின் மகன் மறைந்த சி. திருநாவுக்கரசின் மனைவி ஜெகதீஸ்வரி, பேத்திகள் தி. பரமேஸ்வரி, சுந்தரி நித்தியானந்தம், நந்தினி, பேரன்கள் திருஞானம், ஞானசிவம் ஆகியோருக்கு தலா ரூ.3.05 லட்சம் வழங்கப்பட்டது.ம.பொ.சி.யின் மகள்கள் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு தலா ரூ.18.33 லட்சம் வழங்கப்பட்டது.இதற்கான வரைவு கேட்போலைகளை முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் வழங்கினார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் ரா. சிவக்குமார், தமிழ் வளர்ச்சி இயக்குநர் எழிலரசு ஆகியோர் உடனிருந்தனர்.
kerala people never think chennai as other part - said achuthanandhan: கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எசு. அச்சுதானந்தன்
உண்மைதான். சென்னையும் மலையாளிகள் நாடு என்று எண்ணிக்கொண்டுதான் பெருமளவு வணிகத்தலும் சொத்துக்கள் வாங்கதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டை அயல் நாடாகக் கருதியிருந்தால் தமிழையும் மதித்திருப்பர். தமிழர்கள் இளித்தவாயர்களாக உள்ளமையால் தமிழ்நாட்டை மலையாள நாடாகக் கருதிவாழ்கின்றனர். தமிழ் இலக்கியங்களை மலையாள நாட்டின் வாய்மொழி இலக்கியங்களாகக் காட்டிச் செம்மொழித் தகுதியை மலையாளத்திற்குப் பெறுபவர்கள் வேறு என்னதான் செயய மாட்டார்கள?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எஸ். அச்சுதானந்தன் ![]()

First Published : 14 Feb 2011 01:13:54 AM IST
Last Updated :
கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.
சென்னை, பிப். 13: கேரள மக்கள் சென்னையை அந்நியப் பகுதியாக எப்போதும் கருதியதில்லை என கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்.கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்ட கேரள இல்ல விடுதி வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது: மலையாள மொழி பேசும் மக்களுக்காக கேரள மாநிலம் உருவாகும் முன்னர் அப்போது மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் தமிழ் பேசும் மக்களும், மலையாள மொழி பேசும் மக்களும் இருந்தனர்.தமிழும், மலையாளமும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்ட மொழிகள் அல்ல. அப்போதிருந்தே சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலையாளிகள் குடியேறி வசித்து வருகின்றனர்.இதனால், சென்னையை எப்போதும் நாங்கள் வேறு பகுதியாக கருதியதில்லை.தமிழர்களும், கேரள மக்களும் மொழிக்கு அப்பாற்பட்டு எப்போதும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மும்பை, தில்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகம் கட்டப்பட்டுள்ளது. 95 அறைகள் கொண்ட இந்த வளாகத்தில் டீலக்ஸ் தரத்தில் உள்ள 10 அறைகள் அரசு பணிகள் நிமித்தம் சென்னைக்கு வரும் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்படும்.மேலும், இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரங்கம் மற்றும் 5 அறைகள், இங்குள்ள கேரள மக்கள் மற்றும் சங்கங்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.குறிப்பிட்ட காலத்துக்குள் சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகத்தை கட்டிமுடிக்க அனுமதி மற்றும் உதவிகள் அளித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.உலக சுற்றுலா வரைப்படத்தில் கேரளத்துக்கு முக்கிய இடம் கிடைக்கச் செய்ய இந்த நடவடவடிக்கைகள் பெரிய அளவில் உதவும்.தமிழர்கள், கேரள மக்களிடையேயான சகோதர உணர்வை மேலும் வளர்க்க இந்த இல்லமும் விடுதி வளாகமும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன்.கேரள உள்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது:கேரள மாநிலம் சுற்றுலா துறை மூலம் ரூ. 13,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலா துறையின் பங்களிப்பு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.குறிப்பிட்ட 5 நிறுவனங்களை தவிர்த்து கேரளத்தில் உள்ள மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 4 ஆண்டுகளில் லாபத்தில் இயங்குகின்றன.இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும். இதன்மூலம் கேரளம் புதிய தொழில்கள் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த பகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
good period of poormen is golden period- kalaignar said: ஏழைகளின் நற்காலமே பொற்காலம்': முதல்வர்
சமசுகிருத அரங்கத்திலே தமிழை வேண்டுமென்றே இழித்தும் பழித்தும் பேசியவனை எங்ஙனம் நாணயமாக நேர்மையாகக் கருததுரை கூறுபவராகக் கலைஞர் எண்ணினார் என்பது வியப்பாக உள்ளது. தாயையே பழிப்பவன் காலம் மாறினால் வேறுவகையாகப் பேசுவது இயல்பு. நல்ல விருதை வீணாக்கி விட்டார் கலைஞ்ர். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, பிப். 13: ஏழை, எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, அதுவே பொற்காலம் ஆகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.தமிழக அரசின் சார்பில் "கலைமாமணி' விருது, சின்னத்திரை விருது வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த விருதுகளோடு, எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு "பாரதி' விருது, இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு "எம்.எஸ்.சுப்புலட்சுமி' விருது, பத்மா சுப்பிரமணியத்துக்கு "பாலசரசுவதி' விருது ஆகிய விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எழுத்தாளர் ஜெயகாந்தன் இது தமிழர்களின் பொற்காலம் என்று குறிப்பிட்டார்.பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஏழை, எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, அது எப்போது நீடிக்கிறதோ அதுதான் பொற்காலம் ஆகும்.ஜெயகாந்தன் நாணயமாக, நேர்மையாக விமர்சிக்கக் கூடியவர். எந்தவிதமான சலுகைகளையும் எதிர்பாராமல், பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் ஜெயகாந்தன்.அவர் பொற்கால ஆட்சி என்று சொன்னதை, தமிழர்களுக்கு இது பொற்காலம் என்று கூறியதை, இங்கே உங்களுக்கு வழங்கிய விருதுகள், பரிசுகளை விட, எனக்கு வழங்கப்பட்ட சிறந்த பரிசாக கருதுகிறேன். ஒருகாலத்தில் எங்களைப் போன்றவர்கள் எழுதி, இயக்கத்தின் பத்திரிகைகளில் அது வெளிவந்தபோது, ஜெயகாந்தன் எங்களை ஏற்றுக்கொண்டவர் அல்ல. அவர் இன்று எங்களை ஏற்றுக்கொண்டு பாராட்டுகிறார். அவருடைய விமர்சனத்தில் உண்மை இருக்கும். தேவையில்லாத வெறுப்பு இருக்காது. இவருடைய ஆற்றலுக்கு ஏற்றவாறு எழுதவேண்டுமே என்று நான் எண்ணியதுண்டு. இப்போது ஜெயகாந்தனே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்னுடைய எழுத்துகள் இருக்கின்றன. இந்த விழாவில் பொற்காலம் என்று குறிப்பிட்டார். பொற்காலத்தை கற்காலம் ஆக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்.இதை பொற்காலமாகவே ஆக்குவதற்கு ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துகள் பயன்பட்டாலும், இது பொற்காலமாகவும் இருக்க வேண்டாம்; கற்காலமாகவும் இருக்க வேண்டாம்; தமிழர்களுக்கு நற்காலமாக இருந்தால் போதும். 

முதல்வரிடம் விருது பெறும் தேவயானி, அனுஷ்கா, தமன்னா, சரண்யா, ஆர்யா.
இப்போது சின்னத்திரை விருதுகள் உள்பட 125 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலவசங்களை வாரியிறைப்பதைப் போல, கருணாநிதி விருதுகளை வாரியிறைக்கிறார் என்று பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலவசங்கள் என்று கூறி இன்று விருது பெற்றவர்களை அவர்கள் இழிவுப்படுத்தியுள்ளார்கள்.இலவசம் ஓர் ஏழைக்குக் கிடைத்தால், இல்லாதவனுக்குக் கிடைத்தால் என்ன மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை இந்த விருதுகளை உங்களுக்கு வழங்கிய நான் அடைகிறேன்.இந்த ஆண்டு 125 விருதுகள் வழங்கியிருக்கிறேன். அந்தப் பத்திரிகை கிண்டல் செய்ததற்குப் பிறகு, நீங்கள் எல்லாம் மனது வைத்து நான் மீண்டும் 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றால், 125 அல்ல, அடுத்த ஆண்டு 225 விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் இராம.நாராயணன், உறுப்பினர்-செயலர் இளையபாரதி, சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பேசினர். விழா துளிகள் முதல்வரிடம் விருது பெறும் சரோஜா தேவி, ராதிகா, நளினி, ரோகிணி, கருணாஸ்.
விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதைப் பெற்று ஏற்புரை ஆற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, "நான் இங்கு விருது வாங்குவதற்காகதான் வந்திருக்கிறேன். பேச வரவில்லை. இந்த விருதைப் பற்றி என்ன சொல்ல, என்றவர், ""காற்றினிலே வரும் கீதம்..'' என்ற எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிரபல பாடலைப் பாடி உரையை நிறைவு செய்தார்.2008, 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், 2009, 2010-ம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் உள்பட விழாவில் 125 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, ரோகிணி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோருக்கும், எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, ராஜேஷ்குமார், ராணிமைந்தன் உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு பார்வையாளராக வந்த கவிஞர் வைரமுத்து, திடீரென மேடைக்கு அழைக்கப்பட்டார். இதனால் ஒரே மேடையில் பல ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்துவும், இளையராஜாவும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தும் இருவரும் வாழ்த்துகளை பறிமாறிக் கொள்ளாததோடு, பேச்சின் போதும் ஒருவரையொருவர் குறிப்பிட்டுக் கொள்ளவில்லை.ஆர்யா, அனுஷ்கா, தமன்னா, சுகன்யா, ராதிகா, தேவயானி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கு விழாவில் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, ராஜேஷ்குமார், ராணிமைந்தன் உள்ளிட்ட பலருக்கு இருக்கைகளில் முன் உரிமை இல்லை.கலைமாமணி விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்கிய பிறகு ஆர்யா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் விழாவில் இருந்து புறப்பட்டு சென்றதால் இருக்கைகள் எல்லாம் வெறுமையாக காணப்பட்டன. எழுத்தாளர்களும், திரைத்துறை சாராத பிற கலைஞர்களும் விழா முடியும் வரை இருந்தனர்.இருக்கைகள் வெறுமையாக இருந்ததை தன் பேச்சில் சுட்டிக் காட்டினார் நடிகை குஷ்பு, ""முதல்வர் கருணாநிதியின் கையால் விருது பெற்றவர்கள் அவரின் சிறப்புரையை கேட்காமல் சென்றது வருந்ததக்கது'' என்றார் அவர்.thamizh culprit jeyakandhan about kalaignrar: எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் கருணாநிதி: செயகாந்தன்
தமிழை இழித்தும் பழிததும் பேசுபவனுக்குத் தரும் விருதுக் காலம் தமிழன்னைக்கு அவமானக் காலம். காந்தனின் கடந்த காலக் கதைப்படைப்புகளை எண்ணி விருது வழங்கியிருக்கலாம். எனினும் கெட்டுப்போன உணவைத் தூக்கித்தான் எறிய வேண்டும். தமிழால் வாழ்ந்தும் தமிழைப் பழிப்பவனுக்குத் தந்த விருது, தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்னும் பாவேந்தர் பாரதிதாசன் உறுதிமொழிக்கு முரணானது. தமிழன்னையை வெட்கித்தலைகுனியச் செய்த விருது வழங்கிய காலம் பொற்காலமல்ல; போதாக்காலம்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
சென்னை, பிப்.13: எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் கருணாநிதி என எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார். தமிழக அரசின் சார்பில் கவிஞர் பாரதி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆற்றிய ஏற்புரை:தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம். கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர் கருணாநிதி. அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால்தான் வெளிப்படுத்த முடிகிறது. எப்போதும் எழுத்தாளர்கள் மீது பற்றுக் கொண்டவர் அவர். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழுக்கும், கலைக்கும் செய்த பணிகளை அசை போடுவதற்கு நான் பயின்றுள்ளேன். இன்னும் பல எழுத்தாளர்களை வருங்காலத்தில் அவர் கௌரவப்படுத்த வேண்டும் என்றார்.விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியது: விருது பெறுவதற்கு ஒரு பெருமை வேண்டும். அவ்வாறு பெறுகிறவர்கள் யார் கொடுத்தாலும் பெற மாட்டார்கள். விருது தருகிறவர் யார் என கேட்பார்கள். அப்படி கேட்டு விருதுகளை நிராகரித்தவர்கள் அதிகம். முதல்வர் கருணாநிதி கொடுத்தால் எந்த கலைஞனும் விருதை ஏற்று கொள்வான். கலைமாமணி விருதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 1967-ல் அண்ணா கையால் விருது பெற்றவர்தான் முதல்வர் கருணாநிதி. அன்று கலைமாமணி பெற்றவர்; இன்று கலைமாமணி விருது வழங்குகிறார். இந்த விருதுகள் எல்லாம் பெருமைமிக்க விருதுகள். ஜெயகாந்தன் இந்த மேடையில் பேசும் போது, இது தமிழர்களின் பொற்காலம் எனக் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் ஆட்சி ஜெயகாந்தன் குறிப்பிட்டதை போல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொற்காலமாகத்தான் திகழ்கிறது. ஒரு சமுதாயம் உயிரோடு இருப்பது வேறு. உயிர்ப்போடு இருப்பது வேறு. உயிரோடு இருக்க உணவு, பாசம், செல்வம் இருந்தால் போதும். உயிர்ப்போடு இருக்க உணர்வு முக்கியம். அந்த உணர்வுக்கு கலை, கலைஞர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். அந்த உற்சாகத்தை கொடுப்பது முதல்வர் கருணாநிதி. இந்த கலைமாமணி பெற்ற படத்தை, விருதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். பேரன், பேத்தி என உங்கள் பரம்பரை மகிழும் என்றார் கவிஞர் வைரமுத்து.
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
America compels to release the embassy officer: கைது செய்யப்பட்ட "அதிகாரியை விடுவிக்காவிட்டால் பாகிசுதான் தூதரை வெளியேற்றுவோம்'
இறையாண்மை என்ற பெயரில் தேசிய உணர்வாளர்களைத் தண்டிக்கும் இந்தியம் நாட்டு மக்களைக் காப்பாற்ற எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொள்ளட்டும்! வல்லரசாக ஆசைப்பட்டால் போதாது. தன் நாட்டு மக்களுக்கான நல்லரசாகவும் செயல்பட வேண்டும் என்பதை இந்தியம் புரிந்து கொள்ளட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
இஸ்லாமாபாத், பிப்.11: லாகூர் போலீஸôரால் கைது செய்யப்பட்ட அமெரிக்க அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் (36) உடனடியாக விடுவிக்கப்படாவிட்டால், பாகிஸ்தான் தூதரை வாஷிங்டனிலிருந்து வெளியேற்றுவோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், டேவிûஸ 14 நாள் காவலில் வைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருப்பதால், இருதரப்பு உறவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. டேவிஸ் கைது தொடர்பாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானியை நேரில் அழைத்துக் கண்டித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன், "உடனடியாக டேவிûஸ விடுவிக்காவிட்டால், உங்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிடுவோம், பாகிஸ்தானிலுள்ள தூதரகத்தை உடனடியாக மூடுவோம். உங்கள் அதிபர் ஜர்தாரியின் வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்வோம்' என்று எச்சரித்ததாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்க தூதரகம் விளக்கம்: இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. எனினும் இதுபற்றி இஸ்லாமாபாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,"தனிப்பட்ட அரசுமுறை பேச்சு பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல் துல்லியமானது அல்ல' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி கேட்டபோது, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டாமி வைட்டர், எதுவும் கூற மறுத்துவிட்டார்.ஹக்கானி மறுப்பு: இதனிடையே, அமெரிக்கா எச்சரித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹக்கானி மறுத்திருக்கிறார். "அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட எந்த அமெரிக்க அதிகாரியும் எனக்கு தனிப்பட்ட வகையில் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை, வரம்புமீறிப் பேசவும் இல்லை' என ட்விட்டர் இணையதளம் மூலமாக அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த டேவிஸ் கடந்த ஜனவரி 27-ம் தேதி லாகூரில் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவரை லாகூர் போலீஸôர் கைது செய்தனர். லாகூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிப்ரவரி 3-ம் தேதி வரையும், பின்னர் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டது. தான் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதமேந்திய இருவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்து, கொள்ளையடிக்க முயன்றதாகவும், அதன் பிறகே தற்காப்புக்காக தாம் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸôரிடம் டேவிஸ் தெரிவித்தார். போலீஸ் விசாரணையின்போது தான் ஒரு கன்சல்டன்ட் எனத் தெரிவித்த டேவிஸ்,அமெரிக்க வெளியுறவுத் துறை அளித்த ஆவணங்களையும் போலீஸôரிடம் காட்டியிருக்கிறார். போலீஸ் காவல் முடிந்த நிலையில், போலீஸôர் அவரை லாகூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது ஆஜரான லாகூர் நகர காவல்துறை ஆணையர் அஸ்லாம் தரீன், டேவிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், தற்காப்புக்காகச் சுட்டதாக டேவிஸ் கூறுவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, டேவிûஸ 14 நாள் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது லக்பத் சிறையில் டேவிஸ் அடைக்கப்பட்டிருக்கிறார். டேவிஸ் விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கெனவே, பாகிஸ்தானுடனான உயர்நிலைத் தொடர்புகளை அமெரிக்கா துண்டித்துக் கொண்டிருப்பதாகவும், டேவிஸ் விடுவிக்கப்படும்வரை இதே நிலை தொடரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் இனி சட்டப்படியே எதுவும் செய்ய முடியும் என பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவதாகவும் தெரிகிறது.
கருத்துகள்
By Kapil
2/12/2011 3:04:00 PM
2/12/2011 3:04:00 PM
By ஜபருல்லாஹ்
2/12/2011 1:51:00 PM
2/12/2011 1:51:00 PM
By பூமி
2/12/2011 11:49:00 AM
2/12/2011 11:49:00 AM
By சி.ஜெய குமார்
2/12/2011 8:27:00 AM
2/12/2011 8:27:00 AM
pazha nedumaran about voters duty: வரிப்பணம் கொள்ளை போவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது: பழ.நெடுமாறன்
மக்கள் நலனில் கருத்து செலுத்தும் மக்களாட்சி வேண்டுமென்றால் நெடுமா வேண்டுவதுபோல் மக்கள் தங்கள் பொறுப்புரிமையை உணர வேண்டும். வாக்காளர்கள் நேர்மையாக இருந்தால்தான் நேர்மையான சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்கு நேரப் பயன்களுக்கு ஆசைப்பட்டு ஏனோதானோ என்று வாக்களித்தால் நாடு மேலும் மோசமாகும். மக்கள் தாங்கள் விரும்பும் கட்சித் தலைமைக்குக் கொத்தடிமைகளாக இல்லாமல் நேர்மையான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களைக் கட்சிகள் முடிவெடுக்கும் முன்னரே இதனை உணர்த்தி அனைத்துக் கட்சியினரும் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முயல வேண்டும். தமிழர்களையும் தமிழையும் அழிப்போருக்கு வாக்களிக்கக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Last Updated :
சென்னை, பிப்.12: தங்களது வரிப்பணம் கொள்ளை போவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார். தமிழர் பண்பாட்டுப் பெருமன்றம் சார்பில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசியது: அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் இப்போது வாரிசுகளை முன்னிறுத்துகிறார்கள். மன்னராட்சி மீண்டும் நடைபெறுவது போல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள அறைகூவல். மக்கள் இதைச் சந்திக்கவில்லை என்றால் ஜனநாயகம் அழிந்துபோகும். வாக்காளர்கள் எந்த அளவுக்குத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்களோ, அதற்கேற்ற அளவுதான் பிரதிநிதிகள் வருவார்கள். வாக்காளர்கள் நேர்மையாகத் தகுதியைப் பார்த்து மட்டுமே வாக்களிக்க வேண்டும். பணம், சலுகைகள், பரிசுகள் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதன் மூலம் மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்ததால்தான் 1.76 லட்சம் கோடி ஊழல் நடக்கிறது. சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருந்தால் இதுபோன்ற ஊழல்கள் நடைபெற்றிருக்காது. இப்போது வரிசையாக ஊழல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதில் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அளிக்கும் வாக்கு, அந்த மக்களின் எதிர்காலத்தையே நாசம் செய்துவிடும். சோழர் கால ஆட்சியில் குடவோலை முறைப்படி, ஊழல் செய்தவர்கள், மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் ஆயுள் முழுக்க தேர்தலில் நிற்க முடியாது என்று தடைசெய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற கடுமையான சட்டங்கள், மரபுகள் கொண்டுவரப்பட்டால் ஒழிய ஊழலைத் தடுக்க முடியாது. தங்களது வரிப் பணம் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. மக்கள் பெரிய புரட்சியை நடத்தினால்தான் நல்லாட்சியைப் பெற முடியும். அமைதியான புரட்சியாக இந்தத் தேர்தலைக் கருதி, நேர்மையானவர்களுக்கும், ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என்றார். தமிழர் பண்பாட்டுப் பெருமன்றத்தின் தலைவர் டாக்டர் செ.நெ.தெய்வநாயகம் பேசும்போது, "உங்களுடைய ஒவ்வொரு வாக்குச் சீட்டும் மிகப்பெரிய அதிகாரப் புள்ளி. அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்' என்றார். பத்திரிகையாளர் அரு.கோபாலன், பேராசிரியர் சீமன்.நாராயணன் உள்ளிட்டோர் இதில் பேசினர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)