உண்மைதான். சென்னையும் மலையாளிகள் நாடு என்று எண்ணிக்கொண்டுதான் பெருமளவு வணிகத்தலும் சொத்துக்கள் வாங்கதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டை அயல் நாடாகக் கருதியிருந்தால் தமிழையும் மதித்திருப்பர். தமிழர்கள் இளித்தவாயர்களாக உள்ளமையால் தமிழ்நாட்டை மலையாள நாடாகக் கருதிவாழ்கின்றனர். தமிழ் இலக்கியங்களை மலையாள நாட்டின் வாய்மொழி இலக்கியங்களாகக் காட்டிச் செம்மொழித் தகுதியை மலையாளத்திற்குப் பெறுபவர்கள் வேறு என்னதான் செயய மாட்டார்கள?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கேரள மக்கள் சென்னையை வேறுபகுதியாக எப்போதும் கருதியதில்லை': வி.எஸ். அச்சுதானந்தன்
First Published : 14 Feb 2011 01:13:54 AM IST
கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.
சென்னை, பிப். 13: கேரள மக்கள் சென்னையை அந்நியப் பகுதியாக எப்போதும் கருதியதில்லை என கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் கூறினார்.கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்ட கேரள இல்ல விடுதி வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவர் பேசியது: மலையாள மொழி பேசும் மக்களுக்காக கேரள மாநிலம் உருவாகும் முன்னர் அப்போது மதராஸ் மாகாணத்தின் கீழ் தான் தமிழ் பேசும் மக்களும், மலையாள மொழி பேசும் மக்களும் இருந்தனர்.தமிழும், மலையாளமும் ஒன்றுக்கொன்று அந்நியப்பட்ட மொழிகள் அல்ல. அப்போதிருந்தே சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலையாளிகள் குடியேறி வசித்து வருகின்றனர்.இதனால், சென்னையை எப்போதும் நாங்கள் வேறு பகுதியாக கருதியதில்லை.தமிழர்களும், கேரள மக்களும் மொழிக்கு அப்பாற்பட்டு எப்போதும் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மும்பை, தில்லியைத் தொடர்ந்து தற்போது சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகம் கட்டப்பட்டுள்ளது. 95 அறைகள் கொண்ட இந்த வளாகத்தில் டீலக்ஸ் தரத்தில் உள்ள 10 அறைகள் அரசு பணிகள் நிமித்தம் சென்னைக்கு வரும் கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்படும்.மேலும், இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரங்கம் மற்றும் 5 அறைகள், இங்குள்ள கேரள மக்கள் மற்றும் சங்கங்களின் பொது நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் வழங்கப்படும்.குறிப்பிட்ட காலத்துக்குள் சென்னையில் கேரள இல்லம், விடுதி வளாகத்தை கட்டிமுடிக்க அனுமதி மற்றும் உதவிகள் அளித்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியனுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.உலக சுற்றுலா வரைப்படத்தில் கேரளத்துக்கு முக்கிய இடம் கிடைக்கச் செய்ய இந்த நடவடவடிக்கைகள் பெரிய அளவில் உதவும்.தமிழர்கள், கேரள மக்களிடையேயான சகோதர உணர்வை மேலும் வளர்க்க இந்த இல்லமும் விடுதி வளாகமும் முக்கிய பங்கு வகிக்கும் என்றார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன்.கேரள உள்துறை மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசியது:கேரள மாநிலம் சுற்றுலா துறை மூலம் ரூ. 13,200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில் சுற்றுலா துறையின் பங்களிப்பு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது.குறிப்பிட்ட 5 நிறுவனங்களை தவிர்த்து கேரளத்தில் உள்ள மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 4 ஆண்டுகளில் லாபத்தில் இயங்குகின்றன.இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும் நிலை ஏற்படும். இதன்மூலம் கேரளம் புதிய தொழில்கள் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த பகுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக